அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி

(சூரியன் தோன்றி ஒளி வீசுவதை பிராசில் காட்டில் வாழும் கமயுரா மக்கள் பழங்கதையாக கூறிவது) உலகம் உருவான ஆரம்ப காலத்தில், காடு ஒளியில்லாமல் இருண்டு இருந்தது.  சூரியனின் தங்கக் கதிர்கள் மரங்களின் மேல் இருந்த பறவைகளின் ராஜ்யத்தில் சிக்கிக் கொண்டன.  மக்கள்…
வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்

வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்

               மதுரையில் நடைபெற்ற “புவி வெப்பமயமாதலுக்கு எதிரான மூன்று நாள் மாநாட்டில் “ நொய்யல்  ஆறு-வளர்ச்சியின் வன்முறை : பின்னலாடைத்தொழிலும் அதன் பாதிப்பும் “ என்ற தலைப்பில் .திருப்பூர்  மக்கள் அமைப்பு ஒரு  கருத்தரங்கை நடத்தியது. ஒரே சமயத்தில் 15 அரங்குகளில் பல்வேறு…

கொடுக்கப்பட பலி

சிறகுகளில் கூடுகட்டி காத்திருந்த சிலந்தி உணர்வுகளை உணவாக்கிய பொழுதொன்றில், யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி ஒதுங்க விளைந்த மனது, நிராகரிப்பின் வலியொன்றில் மலரெடுத்து சூடி வாழ்வியலின் ஆரோகனிப்பை _அந்த நாற்றத்துள் மறைத்துக்கொண்டு இயங்கத்தொடங்கிற்று. நிபந்தனைகளையும் நிர்ப்பந்தங்களையும் சபிப்புகளையும் சம்பிரதாயங்களையும் சடங்காகவே கொண்டு,…

சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?

யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் காந்தமது ஈர்க்கும் வடபுலந்தான் விரைந்திடுமோ… ஊசாட்டம் இல்லாத இடமொன்று எங்கே அங்கு சென்றொழிந்திடுமோ… வார்த்தை பேசிடும் உதட்டளவில் உறைந்திடுமோ…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி

    (கட்டுரை 82) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் ஊழ்விதியை எழுதப் போவது புரியாத கருமைச் சக்தியா ? விரிய வைக்கும் பிரபஞ்சத்தைக் கருஞ்சக்தி உருவாக்குமா அல்லது முறித்து விடுமா ? ஒளிமந்தைகளின் இழுக்கும்…
தசரதன் இறக்கவில்லை!

தசரதன் இறக்கவில்லை!

கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார்.…

கனலில் பூத்த கவிதை!

  ”என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு..  ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா... இவள்ளாம் ஒரு பொம்பிளையா...”   “அண்ணே... அந்தம்மா வண்டியில நூலு பைய ஏத்திக்கிட்டு அலைஞ்சு, திரிஞ்சு வருது பாவம்....அதப்போயி...”   “என்னடா பேசுத..நீ..…

தரிசனம்

  அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் மாம்பழங்கள்.   இமாம்பசந்த், பங்கனப்பள்ளி மல்கோவா, ருமேனி என ஒவ்வொன்றின் சுவையும் எப்படி வேறென மாம்பழம் சாப்பிடும் அம்மாவின் முகமே சொல்லும்.   மாயவரம் பக்கம் அம்மாவின் அண்ணன் இருந்ததால் பாதிரியை கிறிஸ்தவப் பழம் என…
நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது. சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை. வாலிப…

பொறுப்பு – சிறுகதை

வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்த‌தில், எதிர் வீட்டு வாச‌லில் சடகோபனும், அவர்…