ஏழாம் அறிவு….

ஏழாம் அறிவு….

கணினியில் இணையத்தை இணைத்து, திண்ணை இணைய வார இதழுக்குள்  நுழைந்தததும்...கண்கள்  "மஞ்சள் கயிறு" கதையைத் தேடியது. சென்ற வாரம் முழுதும் மனதை ஆக்கிரமித்து வார்த்தை வார்த்தையாக ஊறிப் பிரசிவித்த கதை. எல்லா உடல் வலிகளையும் வீட்டு வேலைகளையும்  உதறித் தள்ளி விட்டு…

துரத்தல்

சிறுகதை - இராம.வயிரவன்     துரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் கண்கள் உருளுகின்றன. கழுத்து வட்டம் போடுகிறது. ஒடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு ஒருவன் தான் துரத்தி வந்தான்.…

பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்

  இங்கே அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் தொடங்குகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு: கிடைத்த பொருளை முட்டாள் தனத்தினால் இழக்கிறவன் துயரப்பட வேண்டியதுதான். மூல முதலையைக் குரங்கு வஞ்சித்தது. அரசகுமாரர்கள், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்;…

உள்ளோசை கேட்காத பேரழுகை

(ஜாசின் ஏ.தேவராஜன்) ஆக பின் நடந்துகொண்டிருக்கிற சம்பவம் 1 இனி அமீராவைப் பள்ளியில் பார்க்கவே முடியாது.அவள் கோலாலம்பூருக்கு மாறிப் போய்விட்டதாக உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். கோலாலம்பூரில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தூரத்து உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கப் போயிருக்கிறாளாம். எல்லாம் அபுவின்…

ஹைக்கூ தடங்கள்

ஜென் தத்துவம் சார்ந்து எழுந்ததுதான் ஹைக்கூ என்று சொல்கிறார்கள். ஜப்பானியத் துறவிகள் எழுதியவை அவை என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. அவர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள் என்பது, கற்று தெளிந்த உண்மை. ஜென் என்னும் gene (மரபணு) பல கல்…

காலணி அளவு

ஒரு முறை ஒரு மனிதன், தனக்குத் தகுந்த காலணியை வாங்கச் சென்றான். அவன் தனக்கு காலணி மிகச் சரியானதாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு காகிதத்தில் தன்னுடைய காலைப் பதித்து, அதை வரைந்து கொண்டான். அதை எல்லாப் பக்கத்திலிருந்தும் அளந்து,…

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com குழந்தைகளுக்குப் பாடிய குழந்தைக் கவிஞர்கள்        குழந்தைகளே நாட்டின் எதிர்காலச் சிற்பிகள். அவர்களால் தான் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட வேண்டும். நல்ல குழந்தைகள் நல்ல வலிமையான…

தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயக் கூட்டை விட்டு எழுந்து நிற்பது எது ? இனிய சோக மொடு, ஏங்கும் சுதியில் பாடுது இரங்கத் தக்க தனிப் பறவை ஒன்று ! அடர்ந்த…

சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு

அன்புள்ள ஆசிரியர்   அவர்களுக்குப் பணிவு வணக்கம் வரும் சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு நடைபெற  உள்ளது. அதற்கான அழைப்பிதழ், கையேடு இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. வர இயலாதவர்கள் வாழ்த்து அனுப்பின்…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)

++++++++++++ என் கோமான் ++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை…