தங்கம்மூர்த்தி
மெல்ல இருட்டும்
இவ்வேளையில்
உன் நினைவுகள்
ஒரு
நிலவைப்போல்
மேலெழுந்து
குளிர்ந்து ஒளிர்கின்றன.
நிலவின் ஒளி
மெல்லடி வைத்துப்
படர்கையில்
இருள்
நழுவி விலகி
நிலவுக்குப்
பாதையமைக்கிறது
குளிர்ந்த ஒளி
மழையெனப் பொழிந்து
என்னை
முழுவதும்
நனைத்திருந்தது.
அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்.
–
- ஒவ்வொரு கல்லாய்….
- பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்
- All India Tata Fellowships in Folklore 2012-2013
- விவசாயி
- ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.
- அக்னிப்பிரவேசம் -1
- அம்மா
- மணிபர்ஸ்
- மெல்ல இருட்டும்
- நம்பிக்கைகள் பலவிதம்!
- பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
- (100) – நினைவுகளின் சுவட்டில்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28
- “ஆத்மாவின் கோலங்கள் ”
- தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்
- கால் செண்டரில் ஓரிரவு
- சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது
- பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு
- துண்டிப்பு
- எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
- பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு
- இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22
- தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !
- தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..
- வழி தவறிய கவிதையொன்று
புனைப்பெயரில் பெண் கவிஞர்கள் எழுதினால் நன்று. Only then, I can have a free flow of sensual criticism.
காதலனை அல்லது கணவனை, காதலியை அல்லது மனைவியை முறையே தமிழ் இலக்கியம் தலைவன், தலைவி என்றழைக்கும்.
இங்கே தலைவி தலைவனை நினைத்து வாடுவதாகத்தான் கொள்ளவேண்டும். ஏனென்றால், அருகில் இல்லாதவனைத்தான் நினைப்பர். அவளின் தலைவன் இல்லை இப்போது. நினவைலைகள் கண்டிபாக வாட்டும். அவ்வாடலைத் தமிழ் இலக்கியம் பசலை நோய் என்று பகரும்.
தமிழ் இலக்கியத்தின் முதல் சாஃப்ட் போர்ன் ரைட்டர் வள்ளுவர் தலைவி தலைவனை நினைந்து வாடுவதை பச்சையாக எழுதியிருக்கிறார்.
இங்கேயும் கொஞ்சம் சாஃப்ட் போர்ன் இருக்கிறது. ஆனால் கவிநயத்தோடு இருப்பதால் படிக்கலாம்.
அவ்வரிகள்:
குளிர்ந்த ஒளி
மழையெனப் பொழிந்து
என்னை
முழுவதும்
நனைத்திருந்தது.
அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்.
நினைப்பே அவளை நனைத்ததென்றால், உண்மை எப்படியிருக்கும்? காம தேவனே கலேபரம் ஆகிவிடுவான். அல்லது தன் பதவியை இவளுக்கு கொடுத்துவிட்டு சந்நியாசி ஆகிவிடுவான்.
”நிலவுகள் பூத்திருந்தன”
ஆம்பிளை ஒப்பனாச் சொல்லிவிடுவான்; பெண் இப்படித்தான் வெளியிடுவாள் ரிச்ல்டுகளை!
’குங்குமத்தில்’ சிவசங்கரியின் ஒரு புதியநாவல் தொடங்கியது. முதல்வாரமே அவர்களுக்குத் திருமணம். இரண்டாவது வாரம் முதலிரவுக்காட்சி என்று சூசகமாக அறிவித்துவிட்டார் நாவலாசிரியை.
ஓடோடிச்சென்று குங்குமம் படித்தேன் மறுவாரம். எப்படி அந்த முதலிரவு. வரிக்கு வரி மேலே போய்கொண்டிருக்க, இறுதி அந்த காட்சியும் வந்தது. ‘அவன் அவளை அணைத்தாள்’ முடிந்த்து வர்ணனை ஒரே வரியில்.
முதலணைப்பு. ஆணின் ஸபரிசம் முதலில் பெண்ணாள் அனுபவிக்கப்படுகிறது. அதன்பிறகு மெல்ல மெல்ல. அவளுள் என்ன மாற்றம்? வள்ளுவர் அசத்திவிடுவார். புஸ்பா தங்கதுரை சென்சார் போர்டையே ஓட வைத்துவிடுவார். ஆனால் சிவசங்கரி:
“அவளுள் வண்ணவண்ண விளக்குகள் எரிந்தன”
பூ…ரிசல்டு இவ்வளவுதானா? She touches upon the effect of orgasm in this line. Not mere embrace. But all the act that followed. anf final crescendo i.e orgasm and its effect, is told in the above one liner.
அதே போல ”நிலவுகள் பூத்தன” நினைவுகளை வைத்தே.
சிருங்கார ரசமிக்க கவிதைகள் தமிழுக்குப்புதியல்ல அது விரசமன்று. ரசம். அதன் வழியாகவும் ஆன்மிக உயர்நிலை அடையலாமெனப்பறைவது தமிழ் வைணவம். ஆண்டாள், கலியன் நம்மாழ்வார் போன்றவர்கள் அப்படி சாதித்திருக்கிறார்கள்.
Thank you poet for this sensual offer in this Thinnai
அருமையான கவிதை. நான் இரசித்தேன். இரசிக்கவில்லையென்றால் எனக்கு வயதாகிவிட்டது என்று பொருள்.
புனைப்பெயரில் பெண் கவிஞர்கள் எழுதினால் நன்று –> ஹம்ம்…..