சீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி]

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

சீதாயணம் படக்கதை -7 

சி. ஜெயபாரதன், கனடா

 

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

சீதாயணம் படக்கதை

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

 

படம் : 12 & படம் : 13 [இணைக்கப் பட்டுள்ளன]

Scene -12

 

Scene -13

+++++++++++++++++++++

Inline image 2

காட்சி நான்கு

அயோத்திய புரியில் ஆரம்பித்த 

அசுவமேத யாகம்

 

இடம்: அயோத்திய புரி அரண்மணை

நேரம்:  மாலை

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.

[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிடுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது.  ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.

அணிகலன்கள் பூட்டப் பட்ட அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று அரண்மனை வாயிலில் நின்றது.  ஆட்டுத் தோலில் எழுதப்பட்டுக் குதிரையின் கழுத்தில் தொங்கிய ஓர் அறிக்கையில் எச்சரிக்கை காணப்பட்டது. ‘பகைவரை ஒழித்துக்கட்டும் கோசலச் சக்கரவர்த்தி மேன்மை மிகு வேந்தன்  இராமனுக்கு இக்குதிரை சொந்தமானது. குதிரையை மதித்து வரவேற்போர் அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து அவர் கேட்கும் வரிப்பணத்தைக் காலாகாலத்தில் கட்டி விடவேண்டும். குதிரையை வழிமறித்துக் கட்டிப் போடுவோர் மாமன்னர் இராமரது பகைவராகக் கருதப்படுவர்! அத்துடன் குதிரையைப் பிடிப்போர் இராமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடவும் தயாராக வேண்டும்,’ போர்த்துறைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சத்துருகனன், குதிரை முன்னே செல்ல பின்னே பலத்த படையினருடன் வழிநடத்திச் சென்றான். குதிரையும், சத்துருகனன் பட்டாளமும் பிறகு பல படகுகளில் ஏறிக் கங்கை நதியைத் தாண்டி அப்பால் வால்மீகி ஆசிரமம் வழியாகச் சென்றன. காட்டில் விளையாடிக் கொண்டிருந்த லவா, குசா இரட்டையர், ஒப்பனை செய்யப் பட்டு வெள்ளைக் குதிரை கம்பீரமாகச் செல்வதைக் கண்டு பூரிப்படைந்து, அறிக்கையை வாசித்து அதைப் பிடித்து நிறுத்தினர்! அஞ்சாமல் குதிரையை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களைத் தாக்க யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தனர்.]

சத்துருக்கனன்: [குதிரை கட்டப்படுவதைப் பார்த்துக் கேவலச் சிரிப்புடன்] பாலர்களே! இது விளையாட்டுப் பொம்மை இல்லை! உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ? வெள்ளைக் குதிரை கழுத்திலே தொங்குவதைப் படித்தீர்களா ? இல்லை. படிக்கத் தெரியாத பட்டிக் காட்டுப் பாலகர் என்றால் மன்னித்து விடுகிறேன்.

Inline image 3

லவா, குசா: [ஆத்திரமுடன்] நாங்கள் படிக்கத் தெரியாத பட்டிக்காட்டுப் பாலகர் என்றா நினைத்தீர் ? அறிக்கைப் படித்துத்தான் யாம், குதிரையைப் பிடித்துக் கட்டினோம்! குதிரை வேண்டு மென்றால் கூறியபடி எங்களுடன் போரிடு! அல்லது குதிரையை எங்களிடம் விட்டுவிட்டுப் போய்விடு!

சத்துருகனன்: [அவர்களது வில்லைப் பார்த்து இறுமாப்புடன்] தோளிலே வில் தொங்குதே! வில்லை உங்களால் வளைக்க முடியுமா ? வில்லை வளைத்து அம்பைக் குறிவைத்து ஏவத் தெரியமா ?

லவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை  இழந்து போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை!

[இருவரும் தமது வில்லைக் கையில் ஏந்தி அம்பைத் தொடுக்கிறார்கள்].

சத்துருக்கனன்: (கோபம் மிகுந்து) அடே பொடிப் பயல்களே! என்னை மானென்று நினைத்தீரா ? அல்லது முயலென்று நினைத்தீரா ? இராமச் சக்கரவர்த்தியின் போர்த் தளபதி நான்!  நொடிப் பொழுதில் உங்களை அம்பால் அடித்துத் துடிக்க வைப்பேன்! ஓடுங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு! இதோ! என் எச்சரிக்கை அம்பு!

[எச்சரிக்கை அம்பைக் கவணாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].

லவா, குசா: எங்களிடம் போரிட அஞ்சுகிறீர்! எச்சரிக்கை அம்பு எதற்கு ? இதோ! எங்கள் மெய்யான அம்புகள்! அவற்றின் வேகத்தைப் பார்! குறிவைக்கும் எங்கள் திறமையைப் பார்! [லவா, குசா இருவரும் அம்பு தொடுத்தெய்ய, சத்துருகனன் வலது கையை உரசிக் கொண்டு ஒன்றும், இடது கையை உரசிக் கொண்டு அடுத்ததும் பாய்கின்றன!]

சத்துருகனன் சினத்துடன் தன் வில்லை வளைத்து அடுத்து, அடுத்து அம்புகளைத் தொடுக்கிறான். ஓரம்புக்கு இரட்டை அம்புகள் எதிர்த்து வரவே, குழம்பி திகைத்துப்போய் கையில் காயம்பட்டுக் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். மற்ற போர் வீரர்களும் அடிபட்டு விழுகிறார்கள். உயிர் பிழைத்த ஒற்றர் சிலர் அயோத்திக்கு மீண்டு சத்துருக்கனன் தோற்றுப் போய் விழுந்து விட்டதை இராமனிடம் கூறுகிறார்கள். அயோத்திய புரியில் சத்துருகனன் படைக்கு நேர்ந்த தோல்வியைக் கேட்டு இராமன் அதிர்ச்சி யடைந்து அடுத்து இலட்சுமணனை அனுப்புகிறான். சிறுவர் இருவரையும் கொல்லாது உயிருடன் கைப்பற்றி வருமாறு கட்டளை யிடுகிறான். இலட்சுமணன் காட்டுப் போர்க்களத்தில் லவா, குசா இருவரையும் பார்த்து, குதிரையை அவிழ்த்து விடும்படிக் கெஞ்சுகிறான். குசா வேடிக்கைக்காகக் குறிவைத்து அம்பை ஏவி இலட்சுமணன் கீரீடத்தில் அடித்து வீழ்த்துகிறான். இலட்சுமணன் அவமானம் அடைந்து போரிடத் தொடங்குகிறான். இறுதியில் இலட்சுமணனும் கையில் அடிபட்டு வீழ்கிறான். செய்தியை அறிந்த இராமன் பரதனை அனுப்பத் தீர்மானித்து பிறகு மனதை மாற்றித் திரும்புமாறு ஆணையிடுகிறான். இலட்சுமணனை வென்று வீழ்த்தும் வீரர்களும் காட்டுப் புறத்தில் வாழ்கிறார்களா என்று இராமன் பெருங்கவலை அடைகிறான். உடனே அனுமனைக் கூப்பிட்டு இலங்கா புரியில் இராவணனைக் கலக்கி யடித்த தென்முனைப் படையைத் திரட்டக் கட்டளை யிடுகிறான். பரதன் தலைமையில் அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோரும், அவரது தென்னகப் படையினரும் கானகப் போர்க்களத்துக்கு வருகிறார்கள்.

[தொடரும்]

+++++++++++++++

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

http://jayabarathan.wordpress.com/

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

23 Comments

 1. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

  முழு நாடகத்தையும் தங்களது இணையதளத்தில் வாசித்தேன்.

  என் கருத்துக்களை தொகுப்பதற்கு.

  உத்தர ராமசரிதம் சொல்லும் முன்னோடி கவிகளான வ்யாசர், வால்மீகி, பவபூதி போன்றோரின் படைப்புகளில் உள்ள முக்யமான அம்சம் சோக ரசம்.

  தங்களது நாடகத்தில் காட்சி ஐந்து மற்றும் காட்சி ஆறு இவற்றில் சோகரசம் இருந்ததை அவதானித்தேன்.

  ஆயினும், சோக ரசத்தை அனுபவிப்பதை பங்கம் செய்வது – உங்கள் நாடக முழுதிலுமான சீதையின் பாத்ர அமைப்பு. முன்னோடி கவிகளின் பாத்ர அமைப்பிலிருந்தும் அவர்கள் காட்டும் ஒட்டு மொத்த சீதா பிராட்டியின் பாத்ர அமைப்பிலிருந்தும் அறவே விலகுகிறது. ஓரளவு ராமபிரானின் பாத்ர அமைப்பு முன்னோடிகளின் பாத்ர அமைப்பிலிருந்து வேறு படுகிறதில்லை. பல இடங்களில் வேறுபடவும் செய்கிறது.

  ஒரு இடருக்கு உட்படின் பெண்ணானவள் ஆத்ம ஹத்யை செய்து கொள்ள வேண்டும் என்ற படிக்கான கருத்தைப் பகிரும் தங்களது நாடக முறைமையில் எனக்கு உடன்பாடில்லை.

  எனக்கு முன்னோடி கவிகளும் காவ்ய கர்த்தாக்களும் முன் வைக்கும் சீதை முழு முற்றிலுமான அபலைப் பெண் அல்ல. அவள் சக்ரவர்த்தினி. ராமனின் ஹ்ருதயத்தை மட்டிலும் அல்ல அவன் நிலைப்பாடுகளையும் வெல்பவள். ஆத்மஹத்யை செய்யும் கோழை அல்ல. அறுதியில் காம்பீர்யம் மிளிர ஜ்வலிக்கும் ஆதர்ச பாரதீய நாரி.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   திரு. கிருஷ்ணகுமார்,

   ////ஒரு இடருக்கு உட்படின் பெண்ணானவள் ஆத்ம ஹத்யை செய்து கொள்ள வேண்டும் என்ற படிக்கான கருத்தைப் பகிரும் தங்களது நாடக முறைமையில் எனக்கு உடன்பாடில்லை.

   எனக்கு முன்னோடி கவிகளும் காவ்ய கர்த்தாக்களும் முன் வைக்கும் சீதை முழு முற்றிலுமான அபலைப் பெண் அல்ல. அவள் சக்ரவர்த்தினி. ராமனின் ஹ்ருதயத்தை மட்டிலும் அல்ல அவன் நிலைப்பாடுகளையும் வெல்பவள். ஆத்மஹத்யை செய்யும் கோழை அல்ல. அறுதியில் காம்பீர்யம் மிளிர ஜ்வலிக்கும் ஆதர்ச பாரதீய நாரி.///

   நான் முன்பு கேட்ட கேள்விக்குச் சுற்றி வளைக்காமல், சீதா மீது துதிபாடாமல் இறுதியில் சீதா எப்படி இறந்தாள் என்றும் இராமன் மீது பாராயணம் பாடாது எப்படி இறந்தான் என்றும் உங்கள் ராமாயணப்படி சொல்லுங்கள்.
   சி. ஜெயபாரதன்

 2. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்

  ம்…….தங்கள் படைப்பை தாங்கள் எந்த நூற்கள் வாயிலாக அணுகினீர்கள் என்று வினவியதற்கு தாங்கள் 6 நூற்களை குறிப்பு தந்துள்ளீர்கள்.

  முதலிரண்டும் வால்மீகி ராமாயணம். தாங்கள் உத்தரகாண்டத்தை (அதன் மொழிபெயர்ப்பையாவது) வாசித்திருந்தீர்களானால் இந்த கேழ்வியெழுந்திருக்காது.

  என்னுடைய தொகுப்பிலும் பதிவு செய்வேன். அதிலிருந்தும் தாங்கள் அறியலாம்.

  வால்மீகி ராமாயணம் உங்கள் ராமாயணம் இல்லையோ?

  ஒரு சொல்லொணா இடருக்கு உண்டாகும் ஸ்த்ரீ எடுக்க வேண்டிய முடிவு என்பது ஆத்மஹத்யை என்பது தான் தாங்கள் தங்கள் படைப்பு வாயிலாக உலகுக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியா?

  நன்றி.

 3. Avatar
  ஷாலி says:

   க்ருஷ்ணகுமார் says:
  November 24, 2013 at 9:19 am
  அன்பர் ஷாலி,

   \ தன் தங்கையையே இராமன் மணம் முடித்தான் என்று கூறும் இராமாயணம் இருப்பது தங்களுக்குத் தெரியுமா?\
  தெரியாதே? ராமாயணத்தின் பெயர். எந்த பாஷையில் எழுதப்பட்டது? தாங்கள் சொல்லும் கருத்துக்குகந்த பாடல் எண் – பாடத்தின் மூலம் – மொழிபெயர்ப்பு பகிர்ந்தால் நம் கருத்துப் பரிவர்த்தனம் பயனுள்ளதாகும். நான் பரிஹாசம் செய்வதாக எண்ண வேண்டா. ஆர்வமேலிடவே கேட்கிறேன். தாங்கள் வாசித்த படிக்கு கருத்துப் பகிர்ந்தால் வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் பயனுறுவர்.
  \ வேறு சில இராமயாணத்தில் சீதையின் தந்தை சாட்சாத் இராவணன் என்று கூறுவது தெரியுமா? \
  Mutatis Mutandis, earlier question is applicable here too

  நம்ம க்ருஷ்ண குமார் அண்ணனுக்கு வெளக்கம் சொல்லியே….யே….யே! நான் ஓஞ்சு போயிட்டேன். என்ன விளக்கம் கொடுத்தாலும் எடுபடாது.அவர் போக்கிலேயே சித்தன் போக்கு சிவன் போக்குனு போய்க்கிட்டே இருப்பாரு.என்ன செய்றது,பெரியவுக கேட்டுட்டாக சொல்லித்தானே ஆவனும்.
  சென்னை மயிலாப்பூர்,”இராமாயண விலாசம்”என்னும் கிருகத்தில் உள்ள இராமாயண பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார்.பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928 ம் வருஷத்தில் அச்சிட்டு வெளியிட்ட “இதர இராமாயணங்கள்’ என்னும் புத்தகத்தில் நான்கு இராமாயணங்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. 1.ஜைன இராமாயணம் 2.பவுத்த இராமாயணம் 3.யவன இராமாயணம் 4.கிறைஸ்த்த இராமாயணம் என்பவைகளாம்.
  இதில் ஜைன இராமாயணத்தில் இராமனுக்கு நான்கு மனைவிகள் என்று குறிப்பிடப்படுகிறது.1.சீதை 2.பிரபாவதி 3.ரதினிபா 4.பூதாமா என்பவர்கள்.
  பவுத்த புராணத்தில், தசரதனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு இராமன்,லட்சுமணன்,என இரண்டு ஆண்களும் சீதை என்ற பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள். இளைய மனைவிக்கு பரதன் பிறந்தான் என்றும் இளைய மனைவியின் கட்டாயத்தால் இராமன் காட்டிற்கு சென்றதாகவும், அண்ணனுடன் தங்கை சீதாவும் 12 வருடம் காட்டிற்கு சென்று பின்பு தசரதன் இறந்ததும் மீண்டும் நாட்டிற்கு வந்து முடி சூடிக்கொண்டதாகவும், ஊர்மக்கள் இராமனுடைய தங்கையாகிய சீதையை இராமனுக்கே மணமுடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
  அண்ணன்,தங்கை உறவை நியாயப்படுத்த திரு.சீனிவாசய்யங்கார் கூறுவது, அந்தக்காலத்தில் அண்ணன் தங்கை மணந்துகொள்ளும் வழக்கம் உள்ளது என்றும், எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும், இதை அறிந்துதான் ரிக் வேதம் 10 வது மண்டலம் 10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பற்றிருக்கிறதென்றும், அதற்குமுன் அவ்வழக்கம் இருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும்,அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.
  இதே சி.ஆர்.சீனிவாசய்யங்கார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இராமாயணம் பின் பகுதி குறிப்பு 431 ம் பக்கத்தில் சீதை தசரதனின் மகள் என்றும்,அவளை தசரதன் ஜனகனுக்கு தானம் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
  சீதை இராவணனுடைய மகள் என்று மவுட்கலிய இராமாயணத்தில் உள்ளதாக குறிப்பிடுகிறார்.
  க்ருஷ்ணாஜி விசுவாசிக்கிற ஒரே இராமாயாணம் வால்மீகி இராமாயாணம் மட்டுமே! கம்பர் காட்டும் இராமனையும் அவரால் கணக்கிலே எடுக்க முடியலே! நம்ம கண்ணுலே பட்ட இராமாயணத்தைப் பார்ப்போம்.
  சமண இராமாயணம், வசிட்ட இராமாயணம்,ஆனந்த இராமாயணம்,அத்யாத்மா இராமாயணம்,லகு இராமாயாணம்,அற்புத இராமாயணம்,பார்த்துவாஜ இராமாயணம், சோரா இராமாயாணம்,பால இராமாயணம்,இரகு வம்ச இராமாயணம், சங்கிரத இராமாயணம்.கன்னட இராமாயணம் –பம்ப இராமாயணம்,குமுதேந்து இராமாயணம்,ஜைன இராமாயணம்,இராமவிஜய தரிசனம்,இராமா கதாவதாரம்,திரி சஷ்டி மகாபுருகுணா அலங்காரம்,ஜீவசம்போதனை, கடைசியா தொலைகாட்சியில் வருடக்கணக்கில் ஓடிய அருண்கோவில். தீபிகா,நடித்த இராமானந்தா சாகரின் இராமாயணம்,இப்ப படித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீ.ஜெயபாரதனின் சீதாயணம்.
  ராமன் எத்தனை ராமனடி-அவன்
  நல்லவர் வணங்கும் தேவனடி!

 4. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு கிருஷ்ணகுமார்,

  ///நான் முன்பு கேட்ட கேள்விக்குச் சுற்றி வளைக்காமல், சீதா மீது துதிபாடாமல் இறுதியில் சீதா எப்படி இறந்தாள் என்றும் இராமன் மீது பாராயணம் பாடாது எப்படி இறந்தான் என்றும் உங்கள் ராமாயணப்படி சொல்லுங்கள். ///
  சி. ஜெயபாரதன்

  ///ஒரு சொல்லொணா இடருக்கு உண்டாகும் ஸ்த்ரீ எடுக்க வேண்டிய முடிவு என்பது ஆத்மஹத்யை என்பது தான் தாங்கள் தங்கள் படைப்பு வாயிலாக உலகுக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியா? ///

  சீதை எப்படி இறந்தாள் என்று சொல்லாமல், இப்படிப் பதில் கொடுத்தால் உங்களுக்குத் தெரியாது, அல்லது சொல்ல முடியாது என்று அர்த்தமா ?

  சி. ஜெயபாரதன்.

 5. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ஸ்ரீமான் ஜெயபாரதன்,

  சீதாபிராட்டியின் அந்தர்தானம் எப்படி என்பதைப் பகிர்கிறேன் என் தொகுப்பில் என கூறியுள்ளேனே.

 6. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ க்ருஷ்ணாஜி விசுவாசிக்கிற ஒரே இராமாயாணம் வால்மீகி இராமாயாணம் மட்டுமே! கம்பர் காட்டும் இராமனையும் அவரால் கணக்கிலே எடுக்க முடியலே! \

  அன்பர் ஷாலி,

  இங்கே ஸ்ரீமான் ஜெயபாரதன் தன் படைப்பில் எடுத்துக்கொண்டுள்ள விஷயம் உத்தர ராமசரிதத்தின் ஸீதா பரித்யாகம்.

  நான் இது விஷயமாக விவிதமான கருத்துக்கள் பகிரும் படிக்கான க்ரந்தங்களாக எடுத்துக்கொண்டது வால்மீகி ராமாயணம், அத்யாத்ம ராமாயணம் மற்றும் பவபூதியின் உத்தரராம சரிதம். இவையனைத்தும் இந்த படைப்பில் சொல்லப்பட்ட விஷயங்களைப் பேசுபவை.

  தாங்கள் பரிச்ரமப்பட்டு சொல்லிய விஷயம் விக்கிபீடியாவில் சற்றே குறைவான கருத்துக்களுடன் உள்ளது. ஜெயபாரதன் முன்வைத்துள்ள ஸீதாபரித்யாகம் பற்றி தாங்கள் குறிப்பிடும் ராமாயணங்களில் ஏதும் படலங்கள் – பாடல்கள் – உரைநடைகள் – இருந்தால் மட்டிலும் – நாம் விஷயம் சார்ந்து பேசுவதாக ஆகும்.

  பற்பல ராமாயணத்தை வாசித்து அதிலிருந்து மிகக் குறிப்பாக குறிப்புக் கொடுக்காது ராமாயணங்கள் குறித்து தாங்கள் வாசித்திருப்பீர்கள் என அவதானித்திருந்தேன். பொய்க்கவில்லை. குறைந்த பக்ஷம் ராமாயணத்தின் பெயர் அதன் க்ரந்த கர்த்தா யார் என்பது வரை கூட பகிர இயலாது அவாள் இவாள் என கருத்துப் பகிர்ந்தமை அருமை. இந்த அருமையில் நான் பாடல் என்ன பாடல் எண் என்ன – அது சம்ஸ்க்ருதமா ப்ராக்ருதமா – என படுத்தி எடுத்து விட்டேன். அந்த ராமாயணங்களை ஒரு பாடல் கூட வாசிக்காது இருக்கையில் அவை கர்ப்பிணியான ஸீதாவை ராமன் பரித்யாகம் செய்வதைப் பற்றிப் பேசுகின்றனவா என தங்களால் எப்படி சொல்ல முடியும்? பொலிக பொலிக.

  விஷயம் சாராது மானாவாரியாக பின்னூட்டங்கள் இட்டு ரொப்புவது உங்கள் உரிமையே. எனக்கு அதில் அபிப்ராய பேதம் இல்லை.

  கம்பராமாயணம் நாங்கள் அரங்கன் சன்னிதியில் அரங்கேரிய படிக்கு மிக உயர்வாகப் போற்றும் க்ரந்தம். கம்ப ராமாயணத்தில் எனக்கு ஆழ்ந்த பயிற்சி இல்லை. பின்னும் நன் வாசித்தறிந்த வரை கம்ப ராமாயணம் ராமபிரானின் திருமுடிசூட்டுப்படலத்துடன் முடிவுறுகிறது என நான் அறிகிறேன்.

  பட்டாபிஷேகத்திற்குப் பிறகு ஸீதா பரித்யாகம் சம்பந்தமாக கம்பன் காட்டும் ராமனைப் பற்றி அன்பர் ஷாலிக்கு மட்டிலும் தெரிந்திருக்கும் போல :-)

  பொலிக. பொலிக.

  உங்கள் பரந்த வாசிப்பிலிருந்தும் விதிவிலக்காக முறையான வாதம் செய்யும் முறைமையிலிருந்தும் பயனடைய எண்ணியிருந்தேன். முடியல.

 7. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ம்……..அப்புறம்

  \ இராவணன் சீதையை கவர்ந்து சென்றதன் காரணம் காமமுமல்ல,காதலுமல்ல. தன் தங்கை மீனாட்சி (அழகிய மீன் போன்ற கண்களை உடையவள்) சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான். \

  என்று கருத்து உதிர்த்திருந்தீர்கள். இதற்கு ராமாயணம் சார்ந்து பாடல் பகிரவும் என்றவுடன் கம்பராமாயணப்படி சூர்ப்பனகையின் அழகை வர்ணிக்கும் பாடலை மட்டும் பகிர்ந்து சத்தம் போடாது ………ஜகா வாங்கியுள்ளீர்கள். பொலிக.

  \ சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான் \

  இந்தக் கருத்துக்கு கம்ப ராமாயணத்திலிருந்து கம்ப ராமாயணத்தை மட்டிலும் நம்பும் சகலகலாவல்லரிடமிருந்து ஏதேனும் பாடல் ப்ரமாணமாகக் கிடைக்குமா?

  ரொம்ப பரிச்ரமப்பட்டு வ்யாக்யானம் கொடுக்க வேண்டாம். கம்ப ராமாயணச் செய்யுள் நீங்கள் கொடுத்தால் போதும் – உங்கள் *பழி* hypothesis விவரிக்கும் படியான பாடல்.

 8. Avatar
  ஷாலி says:

  //தென்னவரை ராமாயண காவ்யம் குரங்குகளாகச் சித்தரித்ததாக
  இதற்கான விடையை தாங்கள் ராமாயண காவ்யத்திலிருந்து தரவேண்டும்.
  கோவில் சிற்பங்களிலிருந்து இல்லை.//
  க்ருஷ்ணஜி அவர்களே! பச்சப் புள்ளையிலிருந்து பல்லுப்போன பாட்டி வரை தெரிந்த விஷயம் ஸ்ரீ இராமனுக்கு உதவியது வானர சேனை குரங்குகள் என்று.ஆனால் உங்களுக்கு மட்டும் தென்னவர்கள்?ஆனால் வானரம் அல்ல.திரு.ஜெயபாரதன் கொடுத்த கோயில் சிற்பம் ஆஞ்சநேயர் குரங்கு உருவம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.தனது வாலால் இலங்கையை கொளுத்தியது யார்? வால் யாருக்கு இருக்கும்? மனிதனுக்கா அல்லது விலங்குகளுக்கா? மனிதர்கள் இடையில் வாள் இருக்கும் ஆனால் வால் இருக்காது. கோயில்களிலுள்ள ஹனுமான் சிலை சிற்பங்களை புரிந்து கொள்ள முடியாத மனிதரால் நிச்சயமாக,தன் தங்கையின் காது,மூக்கு,முலை அறுத்த கொடுஞ்செயலுக்கு பழி தீர்க்க புறப்பட்ட ராவணனை புரிந்து கொள்ள முடியாது. புதிதாக “கிருஷ்ண குமார இராமாயணம்” உங்களால் எழுதப்படுகிறது.பேஷா எழுதுங்கோ!அதுக்கு முன்னாலே இதையும் பாருங்கோன்னா!

  “கம்பன் கடல் தாவு படலம்.” என்று ஒரு படலத்தை வைத்திருக்கிறான்.தாவுகிற வேலையை செய்வது யார்?மரத்திற்கு மரம் தாவுவது குரங்குதான்.இந்த வானர சேனையின் மூலமே கடல் தாண்டியதால் அப்பெயர்.
  அரக்கனும் ஆங்காண் ஓர் அமைச்சர்
  நால்வரும்
  குரங்கு இனத்தவரோடும் மனிதர்
  கொள்ளை நீர்க்
  கரைக்கண் வந்து இறுத்துனர் என்ற
  காலையில் பொருக்கென எழுதும்
  என்று எண்ணிப் போயினர்.
  இராமனின் வில் அடிபட்டு வீழ்ந்த வானர அரசன் வாலி இராமனைப் பார்த்து கேட்கிறான்.
  அரக்கரோடு போரிட்டு அவரை அழிப்பதற்குப் பதில் குரங்கின் அரசைக் கொல்லுமாறு உன்னுடைய மனு நீதியில் கூறியிருக்கின்றதா?
  ———————————————-

  அரக்கரோர் அழிவு செய்து
  கைவரேல் அதற்கு வேறோர்
  குரக்கினத்து அரசைக் கொல்ல
  மனு நெறிக் கூறிற்றுண்டோ.
  ———————————————
  (மூதறிஞர் இராஜாஜி அவர்கள் வாலி வதத்தை கூறும்போது, “இராமர் என்கிற வெள்ளைத்துணியில் விழுந்த கரும்புள்ளி” என்கிறார்.
  அனுமன் சுக்ரீவனிடம் கூறுகிறான்.
  அஹோ ஷாகா ம்ருகத்வம்
  தே வ்யக்தமேவ் ப்யவங்கமே
  லகு சித்தத்ய ஆத்மானம் ந
  ஸ்தாபயசி யோ மதெள.
  நீ ஒரு குரங்கு என்பதை நிரூபித்து விட்டாய் உன்மனம் ஒருநிலையில் நிற்காமல் அலைகிறது.மனசு ஒரு நிலையில் நிற்க வேண்டாமா?
  திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி கேட்க மட்டுமே அண்ணனுக்கு தெரியும்.மண்டபத்திலே பதில் எழுதிக் கொடுத்த மாதிரி நாம சொல்லிக்கொண்டு இருக்கணும்.க்ருஷ்ணாஜி அவர்களே! கூகுளாண்டவர் சன்னதியில் சோழியை குலுக்கிப் போடுங்கோ.அருள் வாக்கு அப்படியே அள்ளிக் கொட்டும்.நான் புள்ளிதான் வைப்பேன்.கோலத்தை நீங்கள்தான் போடணும்.ஆதாரம் என்ற வாழைப்பழத்தை கையில் தான் கொடுக்க முடியும்.உரித்து வாயில் வைக்க வேண்டியது நீங்கதான்.

 9. Avatar
  ஷாலி says:

  க்ருஷ்ணகுமார் says:
  November 26, 2013 at 8:29 am
  ம்……..அப்புறம்

   சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான் \
  இந்தக் கருத்துக்கு கம்ப ராமாயணத்திலிருந்து கம்ப ராமாயணத்தை மட்டிலும் நம்பும் சகலகலாவல்லரிடமிருந்து ஏதேனும் பாடல் ப்ரமாணமாகக் கிடைக்குமா?
  இராவணனின் அழிவுக்குக் காரணம் காமமே என்கிறார் க்ருஷ்ண குமார்.
  இந்துப் புராணக்கதைகளில் காணப்படும் பல்வேறு சம்பவங்களுக்கு காமமே காரணமாக உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை.உதாரணமாக,ஐயப்பன் பிறப்பிற்கு ஹரி(மோகினியுடன்)-ஹரன்(சிவன்) கொண்ட காமமே காரணமானது.
  பராசர முனிவர் மச்சகந்தி என்னும் மீனவப் பெண்ணை மோகித்ததால் வேதவியாசர் வந்தார்.அவரால் மகாபாரதமும் வந்தது.இந்த வேத வியாசர் அம்பாலிகையின் தாதியிடம் உறவு கொண்டு விதுரனை பெற்றெடுத்தார்.பவுசிய புராணத்தில் அத்திரி மாமுனியின் மனைவி அனுசுயாவிடம் ஆசை கொண்ட மும்மூர்த்திகள் சாபம் பெற்றதிற்கு காரணம் காமம்தான்.இந்திரன் கௌதம முனிவரின் மனைவி அகல்யாவை காமுற்று சபிக்கப்பட்டதன் காரணம் காமமே.முப்பது முக்கோடி தேவர்களின் குருநாதர் பிரகஸ்பதி தனது அண்ணனின் கர்பிணி மனைவியுடன் கூடி பரத்வாஜ்ஜை பெற்றதற்கு காரணம் காமமே! இந்த பரத்வாஜ கிராதிஸி அப்சரா என்ற பெண்ணை மோகித்து தன் இந்திரியத்தை வெளியேற்றியதால் வந்தவர் துரோணர்.
  சந்திரன் பிரகஸ்பதி முனிவரின் மனைவி தாராவை கடத்திச் சென்று புத்தா புதல்வனை பெறக்காரணம் காமமே.ஸ்ரீ இராமனின் குரு வசிட்டர் தாழ்ந்த குலப்பெண் அஷ்க மாலாவின் மீது கொண்டது காமமே.விஸ்வாமித்திரர் மேனகையின் மீது கொண்ட காமத்தால் மேகலா பிறந்தாள். இந்த மேகலா துஷ்யந்தன் மேல் கொண்ட காதலால் பாரதனை பெற்றெடுத்தாள்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆக, வேதம் சொல்படி காமமே அனைத்திற்க்கும் காரணமாக அமைந்தது.
  ஆனால் இராவணனின் அழிவுக்கு காரணம் காமமா? சூர்பனகை அறிமுகப்படலத்திலேயே அழிவுக்கான காரணத்தை கம்பர் குறிப்பாக உணர்த்துகிறார்.
  ——————————————————————–
  நீல மாமணி நிற நிருதர் வேந்தனை
  மூல நாசம் பெற முடிக்கும்
  மொய்ப்பினாள்
  மேலை நாள் உயிரொடும்
  பிறந்து தான் விளை
  காலம் ஓர்ந்து உடன் உறை கூடிய
  நோய் அனாள்.
  சூர்பனகை….இவள் யார் தெரியுமா?கரிய மணி போன்ற மேனியை உடைய அரக்கர்களின் தலைவனான இராவணனின் குலத்தை அழிக்க வல்லவள்.இவள் எப்படிப்பட்டவள் தெரியுமா?ஓர் உயிர் பிறக்கும்போதே அதனுடன் பிறந்து அந்த உயிரைக்கொல்லக் காத்திருக்கும் கொடிய நோயிக்கு இணையானவள்.என்கிறார். அதாவது சூர்ப்பனகையின் காரணமாகவே இராவணன் அழிவானே தவிர.அவனது காமத்தின் காரணமாக அல்ல.

 10. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ ஆனால் உங்களுக்கு மட்டும் தென்னவர்கள்? \

  அன்பர் ஷாலி…. தென்னவரைக் குரங்குகளாகச் சித்தரித்ததாக இனத்வேஷத்தைக் கிளப்பியவர் விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன். இந்த அலக்கியப்படைப்பின் ஆணிவேராக அவர் முரசறிந்தமையைத் தாங்கள் மறக்கலாம். நான் மறவேனே.

  ஆகவே *உங்களுக்கு மட்டும் தென்னவர்கள்* என்று நான் சொல்லாத விஷயத்தை நீங்கள் சொல்வதில் அர்த்தமில்லை. மாறாக விக்ஞானி அவர்கள் பகிர்ந்த இனத்வேஷக் கருத்துக்களை மறுத்து விசாரம் செய்ய விழைபவன் நான்.

  விக்ஞானியின் சித்தரிப்புகள் முறையாக விசாரம் செய்யப்படும்.

  நீங்கள் விசாரம் செய்யும் பாங்கில் ஸ்ரீ ஜெயபாரதனின் இனத்வேஷ ப்ரசாரத்தை பூசி மொழுக மட்டும் முனைவது தெரிகிறது.

  அன்பர் அவர்களுடைய த்வேஷ ப்ரசாரம் சொல்லும் — சுட்டும் விஷயங்கள் பல – அது அக்கு வேறு ஆணிவேறாக அலசப்பட வேண்டும்.

  அன்பர் அவர்களிடம் நான் முனைந்து கேட்டபடி அவர்கள் ஆதாரமாக எடுத்த நூற்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். எப்போதும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய முறைமையானது அவர் அளிக்கும் ஆதாரத்தை ஒரு அக்ஷரம் கூட வாசிக்காது ஆதாரம் என எத்தையாவது பகிர்வது.

  அவரது ஆதாரமாக அவர் சுட்டிய வால்மீகி ராமாயணம் சார்ந்தே அவருடைய இன த்வேஷ ப்ரசாரங்களும் அவர் உருக்குலைத்த சீதாபிராட்டியின் பாத்ரமும் விசாரிக்கப்பட வேண்டும்.

  பின்னும் விஷயம் சார்ந்து கம்ப ராமாயணம் போன்று மற்ற ராமாயணங்கள் சொல்லும் விஷயத்தை அறிவதில் மிகவும் ஆர்வமாகவே உள்ளேன்.

  \ பச்சப் புள்ளையிலிருந்து பல்லுப்போன பாட்டி வரை தெரிந்த விஷயம் ஸ்ரீ இராமனுக்கு உதவியது வானர சேனை குரங்குகள் என்று. \

  நீங்கள் பூசி மொழுக வேண்டி முனைந்து தவிர்க்க முயலும் தர்க்க பூர்வமான கருத்துக்களை என் விசாரத்தில் வைக்கிறேன்.

  சூர்ப்பனகை ராவண வதத்துக்கு ஹேது ஆவள் என்ற கம்பநாட்டாழ்வார் பாடலை எடுத்தாண்டுள்ளீர்கள். அருமை. மறுக்கவில்லை.

  ஆனால் தாங்கள் மிகக் குறிப்பாக எடுத்து வைத்த வாதம்,

  சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான்.

  க்ஷமிக்கவும். தங்களது பாடல் ராவணன் பழிக்குப் பழி வாங்க சீதையைக் கவர்ந்து சென்றான் என்ற தங்களது கூற்றுக்கு வலு சேர்க்கவில்லை என்பதனைத் தாங்களே அறிவீர்கள். அப்படி ஒரு பாடலைத் தாங்கள் பகிர இயலாது என்றே எனக்குப் படுகிறது.

  கூகுள குருகண்டாலை நாடியல்லாது நான் வாசித்து வரும் வால்மீகி ராமயணம் என் நினைவில் நின்ற படிக்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது அலக்கியப் படைப்பு ஆரம்ப முதல் கடைசீ வரை ஒரு அபஸ்வரமான அவக்கேடான கச்சேரியைக் கேட்கும் உணர்வைத் தந்தது என்றால் மிகையாகாது.

  அன்பர் அவர்கள் உதிர்த்துள்ள உருக்குலைந்த த்வேஷ மிகுந்த ஹிந்து மதக்காழ்ப்பு மிகுந்த ஒவ்வொரு விஷயத்தினை வாசிக்குங்காலும் இது சம்பந்தமாக வால்மீகி ராமாயணம் சொல்லும் விஷயம் வேறாயிற்றே என்பது துலங்கிக் கொண்டே சென்ற படிக்கு என் தொகுப்பு இருக்கும்.

  மிகக் குறிப்பாக கம்பராமாயணம் சார்ந்து பல விஷயங்களைத் தங்கள் வாயிலாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.

  பின்னும் தங்களது வாத முறைமை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் போகாது கூர்மையாக பேசு விஷயத்திலிருந்து அறவே விலகாது இருப்பது மட்டிலுமே விஷயங்களை முறையாக அலச உதவும்.

  பின்னும் தாங்கள் பகிர்ந்த கம்பன் சொல்லும் கருத்துக்களை அறிந்ததற்கு என் க்ருதக்ஞதையை தெரிவித்துக்கொள்கிறேன்.

 11. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு கிருஷ்ணகுமார்,

  இராமன், சீதா, இலட்சுமணன் ஆகியோரை மானிடராகவும், அதே காலத்தில் வாழ்ந்த அனுமான், சுக்ரீவன் ஆகியோரை வானரங்களாகவும் வால்மீகி காட்டி இருப்பது சமத்துவமற்ற இராமாயணம்; அது சம்பூரண இராமாயணமா ???

  சி. ஜெயபாரதன்

 12. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு. கிருஷ்ணகுமார்

  ///அன்பர் ஷாலி…. தென்னவரைக் குரங்குகளாகச் சித்தரித்ததாக இனத்வேஷத்தைக் கிளப்பியவர் விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன். இந்த அலக்கியப்படைப்பின் ஆணிவேராக அவர் முரசறிந்தமையைத் தாங்கள் மறக்கலாம். நான் மறவேனே.
  ஆகவே *உங்களுக்கு மட்டும் தென்னவர்கள்* என்று நான் சொல்லாத விஷயத்தை நீங்கள் சொல்வதில் அர்த்தமில்லை. மாறாக விக்ஞானி அவர்கள் பகிர்ந்த இனத்வேஷக் கருத்துக்களை மறுத்து விசாரம் செய்ய விழைபவன் நான்.
  விக்ஞானியின் சித்தரிப்புகள் முறையாக விசாரம் செய்யப்படும்.
  நீங்கள் விசாரம் செய்யும் பாங்கில் ஸ்ரீ ஜெயபாரதனின் இனத்வேஷ ப்ரசாரத்தை பூசி மொழுக மட்டும் முனைவது தெரிகிறது.///

  தென்னவரை வானரமாகவும், வடவரை மானிடராகவும் இராமாயணத்தில் இன வேறுபாடு காட்டி இருப்பவர் வால்மீகி. அவரது வாலைப் பிடித்துக் கொண்டு இன வேறுப்பாட்டை மீண்டும், மீண்டும் ஆதரிப்பவர் திருவாளர் கிருஷணகுமார் என்பது அவரது பல்வேறு பின்னோட்டங்களில் திண்ணை வாசகர் படித்துக் கொண்டு வருகிறார்.
  சி. ஜெயபாரதன்

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   திரு. கிருஷ்ணகுமார் தென்னவரா ? அல்லது வடவரா ? தென்னவர் என்றால் ஷாலியின் கட்சி. வடவர் என்றால் வால்மீகி கட்சி !!! பின்னோட்டங்களைப் படித்தால் அவர் வால்மீகி கட்சி என்பது தெளிவாகிறது.
   இராமன் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து வானர வம்சங்கள் தழைத்திருந்தால், வால் முளைத்த அனுமார் வாரிசுகள் இப்போது ஏன் இல்லாமல் போயின ?

   சி. ஜெயபாரதன்.

 13. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

  I am so glad that you are so forthcoming, sir. Thats so nice of you.

  I have been trying to put forth a detailed write up, sir. And that sure, is taking time. your esteemed inputs through your *alakkiyam* and our continued interactions are helpful to me to arrive at my conclusions, sir.

  As usual, there are any number of omissions, commissions, bias, prejudice, distortion of facts…. et al et al in your presentation, all of which do not permit me to call it *ilakkiyam* and thats why I refer your write up as *alakkiyam*.

  வடவர், தென்னவர் – அன்பின் ஜெயபாரதன், நான் ஹிந்துஸ்தானி.

  நாம் எப்போது குறுகிய பாஷை, வடக்கு தெற்கு இத்யாதி புறாக்கூண்டுகளில் இருந்து வெளிவருவோம்.

  ஏன் வால்மீகி?

  ஏனென்றால் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களிடம் நான் வினவிய படிக்கு ….. நீங்கள் எந்த நூற்களின் ஆதாரங்களிலிருந்து உங்கள் படைப்பை உருவாக்கினீர்கள் (அல்லது முனைந்து உருக்குலைத்துள்ளீர்கள்) என்று கேட்டதற்கு தாங்கள் பட்டியலிட்ட நூற்களை சார்ந்து தான் நான் எனது விமர்சனத்தை வைக்கிறேன். சரியா? தங்களது பட்டியலில் முதலிரண்டு நூற்களும் வால்மீகி ராமாயணத்தைச் சார்ந்தவை. ராஜாஜி வால்மீகியை ஆதாரமாக எடுத்துக்கொண்டு ஆங்காங்கு ரசமான கட்டங்களில் கம்பனையும் சேர்த்து அனுபவிக்கிறார். ஆர்.சி.தத் மஹாசயரின் ராமாயணம் வால்மீகியை அடிப்படையாகக் கொண்டது.

  தங்கள் அலக்கியப் படைப்பு தனி ஆவர்த்தனம் என்று தான் தோன்றுகிறது. தங்களது pet theories ஆன ஹிந்து மதக்காழ்ப்பு, இனத்வேஷம் இத்யாதி கலவையால் தாங்கள் தங்கள் அலக்கியத்தை உருவாக்கியுள்ளீர்கள் எனத் தெரிகிறது. What is absent, fortunately this time, is your baseless pro christian bla bla.

  And we come back to square one.

  I have every reason to believe, establish and therefore conclude that unforutnately you had sort of just read the caption of these books and never ever tried to go through the contents.

 14. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ பின்னோட்டங்களைப் படித்தால் அவர் வால்மீகி கட்சி என்பது தெளிவாகிறது. \

  with all due respects, I do not belong to any *katchi*. I am referring to valmiki ramayana since you your self have listed out books based on valmiki. right? It is respected Jayabharathan who had listed books based on Valmiki. right? I would base my opinions and conclusions on bare facts. Be assured, I would address issues by chapter and by verse.

  \ தென்னவரை வானரமாகவும், வடவரை மானிடராகவும் இராமாயணத்தில் இன வேறுபாடு காட்டி இருப்பவர் வால்மீகி. அவரது வாலைப் பிடித்துக் கொண்டு இன வேறுப்பாட்டை மீண்டும், மீண்டும் ஆதரிப்பவர் திருவாளர் கிருஷணகுமார் என்பது அவரது பல்வேறு பின்னோட்டங்களில் திண்ணை வாசகர் படித்துக் கொண்டு வருகிறார். \

  Oops! வால்மீகியை நான் ஏன் ஆதாரமாகக் கொள்கிறேன் என்பதற்கு முன் பத்திகளில் வ்யாக்யானம் கொடுத்தாகி விட்டது. வால்மீகி முனிவருக்கு வால் இல்லை. ஏன் இப்படி இனத்வேஷம் கொண்டு கொலவெறியுடன் ஒரு விஷயத்தை அணுகுகிறீர்கள்!!!!!!! :-)

  ஆனால் மாறாக தாங்கள் தங்களுடைய கற்பனைக் கழுதையின் வாலைப் பிடித்துக்கொண்டு அலைவது தெரிகிறது!!!!!! :-) ம்…….சித்தமும் ஆகும். பொறுங்கள். பொறுத்தார் பூமி ஆள்வார்.

  இந்த குரங்கு விஷயம் சம்பந்தமாக தாங்கள் தங்கள் அலக்கியத்திலும் உத்தரங்களிலும் திருவாய் மலர்ந்தருளிய படி அந்த விஷயம் அதன் முழு பரிமாணங்களுடன் விவாதிக்கப்பட உள்ளது என்பதனையும் இது வரை இது சம்பந்தமாக நான் எந்த நிர்த்தாரணமும் இது வரை செய்யவில்லை என்பதனை வாசகர்கள் அறிவர். தாங்களும் அறிவீர்.

  நான் இதுவரை செய்ததெல்லாம் உங்கள் வாயைப் பிடுங்கி நீங்கள் உங்களது அனுமானாதிகளை எதன் அடிப்படையில் எடுத்தீர்கள் என அறிய. வழக்கம் போல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி ஒரு வழியாய் திருவாய் மலர்ந்துள்ளீர்கள். நன்றிகள் பல.

  வீர சாவர்க்கர் காந்தியடிகள் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் அடித்து விட்டு அதன் பின் அதற்கு ஆதாரம் கேட்டதற்கு ஒரு உரலை அடித்து விட்டு பின்னர் உங்கள் உரலால் நீங்களே அடிபட்டது நினைவில் வருகிறது. தங்கள் ஆதார உரல் உங்க்ளை நிராதாரமாக ஆக்கிவிட்டது அப்போது.

  தங்களது ஒவ்வொரு எழுத்தும் வாசகமும் முழுமையாக விசாரம் செய்யப்பட்டு தர்க்கபூர்வமான கருத்துக்கள் முன் வைக்கப்படும்.

  I am thankful to you that you have taken your time out to give clarifications. So nice of you.

 15. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

  இன்னமும் ஒரு விஷயம்.

  நீங்கள் உங்கள் அலக்கியப் படைப்பின் ஆரம்பத்தில்

  \ வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது \

  தாங்கள் கற்பனைக் கழுதையில் ஆரோகணித்துப் பின் கண்டதையெல்லாம் உருவாக்கி அல்லது உருக்குலைத்த விஷயம் தான் இந்த அலக்கியப் படைப்பு என்பது என் அனுமானம்.

  ஆனால் தாங்களோவெனில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகள் என் கிறீர்கள்.

  இந்த *மெய்* யை எப்படிக் கண்டு பிடித்தீர்கள் சார்?

  காலயந்த்ரத்தில் ப்ரயாணம் செய்து ராமாயண காலத்தில் போய் வந்தீர்களா?

  க்றைஸ்தவ சபைக் காரர்கள் யாரேனும் நாலேமுக்காலணாவுக்கு பொஸ்தகம் ஏதும் போட்டு அதிலிருந்து கண்டெடுத்தீர்களா?

  இந்த மெய்ஞானத்தை எப்படி அடைந்தீர்கள்?

 16. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு. கிருஷ்ணகுமார்,

  ///வீர சாவர்க்கர் காந்தியடிகள் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்க வில்லை என்று நீங்கள் அடித்து விட்டு அதன் பின் அதற்கு ஆதாரம் கேட்டதற்கு ஒரு உரலை அடித்து விட்டு பின்னர் உங்கள் உரலால் நீங்களே அடிபட்டது நினைவில் வருகிறது. தங்கள் ஆதார உரல் உங்க்ளை நிராதாரமாக ஆக்கிவிட்டது அப்போது.///
  காந்திஜி கொலையை ஆழ்ந்து பலமுறைத் திட்டமிட்டு வழக்கில் தப்பிக் கொண்ட மாவீரர் சாவர்க்கர்.
  காந்திஜி கொலைக்கு வருந்தியவர் சாவர்க்கர் என்றால் அது முதலைக் கண்ணீராகத்தான் இருக்கும்.
  நீங்கள் காந்திஜி கொலையைக் கொண்டாடியவர்தானே !!!
  சி. ஜெயபாரதன்

 17. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ நீங்கள் காந்திஜி கொலையைக் கொண்டாடியவர்தானே !!! \

  http://puthu.thinnai.com/?p=18975 ஸ்ரீமான் அவர்கள் தானே சொல்லியுள்ளதை இங்கே கீழே கொடுக்கிறேன்.

  \ சி. ஜெயபாரதன் says:
  March 13, 2013 at 2:25 pm

  திரு. கிருஷ்ணகுமார்,

  ///கோட்சே நயவஞ்சகன் என சாடியிருந்தீர்கள்.////

  மகாத்மா காந்தியைக் கொலை செய்தது “தவறு” என்று உங்கள் மடல் ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.

  ஸ்ரீமான் ஜெயபாரதன் எப்போது உண்மை பேசக் கற்றுக்கொள்ளப்போகிறார்? தன்னுடைய சொந்த உத்தரங்களை முதலில் அவர் எப்போது ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சிப்பார்?

  நான் உங்களை சீதாயண அலக்கியத்திலேயே கட்ட முயற்சிக்கிறேன்.

  சீதாயணம் என்ற அலக்கியப் படைப்பில் *மெய்* யை எப்படிக் கண்டு பிடித்தீர்கள். உலகறியச் சொல்லலாமே.

 18. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு. கிருஷ்ணகுமார்,

  வீர சாவர்க்கரைத் தொடர்பின்றி சீதாயணம் நாடகத்தில் இழுத்து வந்தவர் நீங்கள். ஏன் இப்போது ஓடுகிறீர் ?

  ///கோட்சே நயவஞ்சகன் என சாடியிருந்தீர்கள்.////
  ///மகாத்மா காந்தியைக் கொலை செய்தது “தவறு” என்று உங்கள் மடல் ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளீர்கள். ///

  கோட்சே தேசப் பிதாவைக் கொன்ற நேசப் பிறவியா ?

  விடுதலை நாட்டில் கோட்சே காட்டுமிராண்டி போல் காந்தியைக் கொலை செய்தது நியாயமா ?
  சி. ஜெயபாரதன்.

 19. Avatar
  paandiyan says:

  திண்ணை இல் வரும் பின்னூட்டம் எந்த வகை என்று ஆசிரியர் விளக்கினால் சரி. இந்த கட்டுரைக்கும் சாவர்க்கருக்கும் என்ன சம்பந்தம். பின்னூட்டம் கட்டுரை சார்ந்த விசயம் இருக்கட்டும் என்று யாருக்கு புத்தி சொல்லுகின்றார் ஆசிரியர்? தன் கட்டுரை போணியாக இந்த அளவு கீழ்த்தரமான செயல்படும் ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை . திண்ணைக்கும் இது அசிங்கமாக தெரியவில்லை என்பது வேதனை.

 20. Avatar
  paandiyan says:

  தின்ணை ஆசிரியர் – . வார்த்தகளை ஒழுங்காக உபயோகிக்க தெரியாத இந்த ஜெயபாராதனின் கருத்து எப்படி இங்கு வருகின்றது என்பதை சொன்னால் நாங்களும் அந்த பானியில் பதில் கொடுக்க வசதியாக இருக்கும்

 21. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

  வீரசாவர்க்கரை இங்கு இழுத்து வரவில்லை. இங்கு இழுத்து வரப்பட்ட விஷயம் தாங்கள் தங்கள் வ்யாசத்திலும் பின்னூட்டங்களிலும் தங்களுடைய முந்தைய கருத்துக்கள் எது என்று கூட பாராது பொய் சொல்லும் பாங்கை விவரிக்கும் படிக்கு மட்டிலும்,

  தங்களிடம் தோஷம் பார்ப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம்.

  கோட்சே காந்தியடிகளைக் கொன்றது தவறு என்று என் பின்னூட்டங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றனவே.

  இதில் நம்மிடையே அபிப்ராய பேதம் ஏதுமே இல்லையே.

  அபிப்ராய பேதம் இல்லாத விஷயத்தில் நான் ஓடுவதற்கோ அல்லது நாம் விவாதிப்பதற்கோ ஏதுமே இல்லையே?

  வெறுங்கையால் ஏன் முழம் போட முனைகிறீர்கள்.

  உங்கள் படைப்பிலிருந்து விவாதம் வெளியே போனால் அதை இடித்துறைக்க வேண்டியது தங்கள் உரிமை, கடமை. ஆனால் இங்கு தாங்களே தங்கள் படைப்பிலிருந்து புறமுதுகிட விழைவது போன்ற தோற்றத்தை அளிக்காதீர்கள்.

  தாங்கள் தங்களுடைய *சீதாயண* படைப்பில் சொல்லிய விஷயங்களை நாம் இங்கு விவாதிப்பது தான் தங்கள் படைப்புக்கு நாம் அளிக்கும் உரிய மரியாதை. நான் தங்களுடைய படைப்பில் காணப்பட்ட குணம் சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்துள்ளேன் என்பதை தாங்கள் மறக்கலாகாது. குணத்தைப் பேசுகையில் உகந்து தோஷங்களைப் பேசுகையில் விசனப்படுவது அழகன்று.

  ஆனால் சீதாயணம் என்ற அலக்கியத்தை *மெய்* என்று சொல்லியுள்ள தாங்கள் தங்களால் உருக்குலைக்கப்பட்ட *ஹிந்துமதக் காழ்ப்புக் கதை* என்ற *மெய்* *ஞானம்* எங்கிருந்து பெறப்பட்டுள்ளது என்பது விவாதாஸ்பதமான விஷயம். தாங்கள் *மெய்* என்று சொல்லிய விஷயத்தை தாங்கள் தான் ஐயா விளக்க / மேற்கொண்டு விளம்ப முடியும்.

  என் மனதுக்குகந்த ராமபக்தரான காந்தியடிகளைப் போன்று (ஆனால் தங்களுக்குப் பிடிக்காத *ராம*) நான் ராம ராம என்று போய்க்கொண்டிருக்கையில் தாங்களாகவே வலிய வந்து தங்கள் *சீதாயணம்* என்ற படைப்பைப் பற்றி அறிமுகம் செய்தீர்கள். இப்போது நான் விமர்சனம் செய்யுமுகமாக தங்களிடம் தங்கள் படைப்பு பற்றிய விவரங்கள் கேழ்க்கும் போது தாங்கள் கண்ணாமூச்சி விளையாடுவது அழகில்லை.

  தாங்கள் தயை கூர்ந்து *குரங்கு* விஷயத்தில் திருவாய் மலர்ந்தருளிய படி இந்த *மெய்* *ஞான விஷயம்* பற்றியும் ஏதும் அருள் வாக்கு அருள விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  அப்படித் தாங்கள் அறிவு பூர்வமான விபரங்கள் ஏதும் பகிர இயலாவிடில் இதுவும் தங்களுடைய *பொய்* ஜாபிதாவில் சேரும் என்றும் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்னுடைய தொகுப்பில் தங்களுடைய மேன்மை வாய்ந்த பின்னூட்டங்கள் தங்கள் அலக்கியப் படைப்பு எந்தளவுக்கு பொருள்சார்ந்து விசாரிக்கப்படுமோ அந்தளவுக்கு பொருள் சார்ந்து விசாரிக்கப்படும், ஐயன்மீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *