(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே (கனடா போர்த் தளபதி) தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போர்த் தளங்களில் அணி அணியாய் பூத்துக் கிடக்கும், எண்ணிலா செந்நிறப் பாப்பி மலர்கள் சிலுவை களுக்கு இடையே ! நெஞ்சை உலுக்கும் காட்சி ! மேலே பாடி பறக்கும் குயில்கள் பயம் ஏதுவு மின்றி, கீழே பீரங்கிச் சத்தம் மெதுவாய்க் கேட்டு குறையும் ! செத்துப் போனது நாங்கள் ! சில நாட்க ளுக்கு முன்பு பூமியில் சீராய் வசித்தவர் நாங்கள் ! காலைப் பொழுதை உணர்ந்தோம் ! மாலைப் பொழுதில் மங்கிச் செங்கதிர் மறைவதைக் கண்டோம். நேசித்தோம், நேசிக்கப் பட்டோம் நாங்கள் !…