வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.

author
0 minutes, 2 seconds Read
This entry is part 22 of 23 in the series 26 ஜூலை 2020

எகிப்திய பழம்தின்னி வவ்வால்

பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய புலிகள், சிங்கங்கள் தங்கள் பரப்புகளை சிறுநீர் மூலம் எல்லை வகுத்துகொள்கின்றன. இவை எல்லாமே ஒருவகை மொழிகள். மற்ற விலங்குகளுடன் தொடர்புகொள்ள இவை அனைத்துமே உதவுகின்றன.

இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் பல்கலைக்கழகத்தின் மொழி ஆய்வாலர்கள் ஒரு குறிப்பிட்ட விலங்கு குறைந்தபட்சம் ஒரு பொதுவான வழியில்-ஓநாய்கள் ஒருவருக்கொருவர் அலறுகின்றன, பறவைகள் பாடுகின்றன, நடனமாடுகின்றன, துணையை ஈர்க்கின்றன மற்றும் பெரிய பூனைகள் தங்கள் நிலப்பரப்பை சிறுநீருடன் குறிக்கின்றன. ஆனால் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு விலங்கினத்தை ஆராய்ந்த போது அவை சும்மா கத்தவில்லை. ஒரு தனிப்பட்ட பிரச்னையை தெரிவிக்க இவ்வாறு பேசுகின்றன என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

http://www.nature.com/news/bat-banter-is-surprisingly-nuanced-1.21215

ராமின் ஸ்கிபா என்னும் ஆராய்ச்சியாளர் இது பற்றி நேச்சர் இதழில் எழுதிய கட்டுரையில், 22 எகிப்திய பழம்தின்னி வவ்வால்களின் குரல்களை பதிவு செய்து அவற்றை இயந்திர கற்றல் (machine learning) மென்பொருள்கள் மூலம் ஆராய்வு செய்ததை பற்றி விவரித்துள்ளார். இந்த இயந்திர கற்றல் மென்பொருள் மனிதர்களின் குரல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள். இந்த மென்பொருளில் சுமார் 15000 பழம் தின்னி வவ்வால்களின் குரல்களை ஆய்வு செய்து அத்தோடு அந்த குரல் பதியப்பட்ட வீடியோவையும் சேர்த்து கொடுத்து, அந்த வீடியோவில் நடக்கும் நிகழ்வுகளுக்கும், அங்கே வரும் குரல்களுக்கும் தொடர்பை ஆராய்ந்திருக்கிறார்கள்.

முன்பு கருதியது போல, இந்த வவ்வால் சத்தங்கள் பொத்தாம்பொதுவான கூக்குரல்கள் அல்ல என்பதை கண்டறிந்திருப்பதாக ஸ்கிபா சொல்லுகிறார். சுமார் 60 சதவீதமான சத்தங்களை நான்கு வகைகளில் பிரிக்கலாம் என்று கண்டறிந்தார்கள்.
முதலாவது வகை சத்தங்கள் இந்த வவ்வால்கள் உணவுக்காக விவாதம் செய்வது சம்பந்தமானவை.
இரண்டாவது வகை சத்தங்கள், யார் எங்கே தூங்க வேண்டும் என்பதற்கான விவாதங்கள்.
மூன்றாவது வகை சத்தங்கள், ஆண் வவ்வால்கள் பெண் வவ்வால்களை சைட் அடிப்பதற்காக உபயோகப்படுத்தும் சத்தங்கள்.
நான்காவது வகை சத்தங்கள் ஒரு வவ்வால் தனக்கு மிகவும் அருகே இன்னொரு வவ்வால் உட்காந்திருந்தால், அந்த வவ்வாலோடு விவாதம் செய்வதற்காக செய்யும் சத்தங்கள்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு வவ்வால் வெவ்வேறு வவ்வால்களிடம் பேச வெவ்வேறு சத்தங்களை உபயோகப்படுத்துகிறது என்பதையும் கண்டார்கள். மனிதர்களும் வெவ்வேறு மனிதர்களிடம் பேச வெவ்வேறு குரல் பாணியை உபயோகப்படுத்துகிறோம் என்பதையும் கவனியுங்கள். இதுவரை மனிதர்களும் டால்பின்களும் மட்டுமே பொத்தாம் பொதுவாக எல்லோரிடமும் கத்தாமல் தனித்தனியாக அடையாளம் கண்டு பேசுவதாக அறியப்பட்டு வந்தது.

இன்னும் ஆழமாக இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவதன் மூலம் அந்த வவ்வால் மொழியை இன்னமும் ஆழமாக அறிந்து கற்க முடியும் அதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதுகிறார்.

இது ஆராய்ச்சியின் முடிவல்ல.

இன்னும் ஆழமாக, இந்த வவ்வால்கள் பிறக்கும்போதே இந்த மொழியை பேசவல்லவதாக இருக்கின்றனவா, அல்லது இவை “கற்றுகொள்கின்றனவா” என்பதை ஆராயவும் இருக்கிறார்கள்.

தங்களது வவ்வால் கூட்டத்துக்குள்ளே மட்டுமே இவை பேசுகின்றனவா அல்லது மற்ற விலங்குகளோடும் இது போல பேசுகின்றனவா என்பதையும் ஆராய இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி மிகவும் முக்கியமான ஆராய்ச்சியாக பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். விலங்குகளின் மொழியை நாம் அறியவும், அவைகள் என்ன பேசுகின்றன என்பதையும் நாம் அறியலாம். இவை ரோஸட்டா கல்வெட்டு போன்ற ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று கேட் ஜோன்ஸ் என்னும் பேராசிரியர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த மென்பொருள் மூலம் மற்ற விலங்குகளின் குரல்களையும் நாம் ஆராய முடியும் என்பது முக்கியமானது.

Series Navigationதரப்படுத்தல்ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *