தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

This entry is part 3 of 13 in the series 10 ஜனவரி 2021

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான புகழுடையவன் அனுமன். யார் இந்த அனுமன்? அனுமனே தன்னை இன்னான் என்று அறிமுகம் செய்துகொள்வதைப் பார்ப்போம்.                          யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில்                                வந்தேன்! நாமமும் அனுமன் என்பேன்                                      (கிஷ்கிந்தா காண்டம்)   (அனுமப் படலம் 15) இசை சுமந்து எழுந்த தோள்—புகழைச்சுமந்து […]

இன்னொரு புகைப்படம்

This entry is part 2 of 13 in the series 10 ஜனவரி 2021

கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் தேடி- தேடி இல்லாது- இல்லாததால் அறிதலில்லையென்றில்லை என்ற அறிதலில் ஆசுவாசமாகி- அநேக புகைப்படங்களின் மத்தியில் இன்னொரு புகைப்படமானேன் நிச்சிந்தையில் நான். கு.அழகர்சாமி

நீ இரங்காயெனில் ….

This entry is part 1 of 13 in the series 10 ஜனவரி 2021

திர்லதா கிரிஜா (அமரர் மணியனின் “சிறு கதைக் களஞ்சியம்” முதல் இதழில் 1985ல் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “அம்மாவின் சொத்து” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) – காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் பின்னர் நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாடெங்கிலும் நூற்றாண்டு விழா ஆங்காங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அடேயப்பா!  நூறு ஆண்டுகள்! ஆஞ்சநேயலு தம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். அவர் பிறந்து வளர்ந்த தெல்லாம் மதுரை ஜில்லாவின் ஒரு சிறு கிராமத்தில். தாய் மொழி தெலுங்கானாலும், […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ்

This entry is part 10 of 11 in the series 3 ஜனவரி 2021

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  கட்டுரைகள்: இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள் – ரா. கிரிதரன் அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம் – சிவா கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை– ரவி நடராஜன் நானன்றி யார் வருவார்…. – கிருஷ்ணன் சங்கரன் நள்ளென் நாதம் – முத்து காளிமுத்து வலிதரா நுண் ஊசிகள் – பானுமதி ந. சிறுகதைகள்: கெய்ரா – சுஷில் குமார் வெந்து தணியும் நினைவு – ம.செ அப்பயி ஏமாற்றினாள் – பாஸ்கர் ஆறுமுகம் கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு – மாலதி சிவா கவிதைகள்: கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை – கு. அழகர்சாமி புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார் – ஜீவன் பென்னி தவிர: மகரந்தம் – கோரா (குளக்கரை பகுதிக் குறிப்பு:) தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும் – கோரா […]

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

This entry is part 9 of 11 in the series 3 ஜனவரி 2021

  ட்டி. ஆர். நடராஜன்    1. என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது     ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட்  என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது.  என் அறைகள் அறைகளுக்கான அளவில்  அதன் ஆத்மா ஆத்மாவின் அளவில். பின்னணியில் உயிரணுவின் ரீங்காரம் அதற்கு மேலாக சூரியன், மேகங்கள், கிரஹங்கள் அது எலிவேட்டர்களையும், புல்லட் ரயில்களையும், பல்வேறு விமானங்களையும் ஒரு கழுதையையும்  ஓட்டியது. அது காலுறைகளையும், சட்டைகளையும்அணிந்தது அதற்கென்று அதன் சொந்தக் காதுகள், மூக்கு. அது சாப்பிட்டது, தூங்கிற்று, கைகளையும், ஜன்னல்களையும்  திறந்தது மூடியது. […]

மினி பாரதம்

This entry is part 8 of 11 in the series 3 ஜனவரி 2021

வணக்கம். Mini Bharath எனும் எனது ஆங்கில மூலம் என்னாலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு அதை நிவேதிதா பதிப்பகம், 1/3, வேங்கடேஷ் நகர் பிரதான சாலை,விருகம்பக்கம், சென்னை 600092, மினி பாரதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது என்பதைத் திண்ணை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது பதின்மர்க்கான புதினமாகும். ஜோதிர்லதா கிரிஜா

பந்தம்

This entry is part 7 of 11 in the series 3 ஜனவரி 2021

குணா (எ) குணசேகரன் வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்தமியே கண்ட தண்டலையும் தெறுவரநோய் ஆகின்றே மகளை! நின் தோழிஎரி சினம் தணிந்த இலைஇல் அம் சினைவரிப் புறப் புரவின் புலம்பு கொள் தெள் விளிஉருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கிஇலங்கு இலை வென்வேல் விடலையை,விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே? கொல்லைப்புறத்தில் காகம் கரைந்தது. அயலூர் செய்தி வரும் என்று சொல்வார்கள். […]

கானல்

This entry is part 6 of 11 in the series 3 ஜனவரி 2021

கைக்கெடிகாரத்தைப் பார்த்தார் கந்தாடை. ஆறு அடிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தது. சூரியன் மேற்கே விழுந்து கொண்டிருந்தான். அவர் தான் உட்கார்ந்திருந்த பார்க் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டார். ரத்த ஓட்டம் சமநிலைக்கு வர சில நிமிஷங்கள் ஆகும். வயதாவதை இது போன்றவற்றை அல்லாமல் வேறு எப்படித்தான் இயற்கை மனுஷனுக்கு உணர்த்துவதாம்? இருட்ட இன்னும் ஒரு கால் மணி, அரை மணியாகும். ஆனால் அவர் இப்போது கிளம்பினால்தான் பதினேழாவது கிராஸில் உள்ள வீட்டைத் தெரு விளக்குகள் எரியத் […]

கவிதையும் ரசனையும் – 8 – கே.ஸ்டாலின்

This entry is part 11 of 11 in the series 3 ஜனவரி 2021

28.12.2020 அழகியசிங்கர்             சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன்.              கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான்  இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான்.  புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன்.  அப்படியும் அது புரியவில்லை என்றால் விட்டுவிடுவேன்.             சரி. ஒரு கவிதை புரியாமல் இருக்க வேண்டுமா? அல்லது புரியத்தான் வேண்டுமா? நிச்சயமாகப் புரியவேண்டும்.  வாசிப்பவருக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும் கவிதை.              இன்றைய சூழ்நிலையில் கவிதைப் புத்தகங்களே விற்கப்படுவதில்லை.  புரியாத போகிற கவிதைப் […]

ஆன்றோர் தேசம்

This entry is part 5 of 11 in the series 3 ஜனவரி 2021

short story எஸ்.சங்கரநாராயணன் ••• ஓர் அலுவலகத்தின் வெவ்வேறு ஊழியர்கள் போல, அல்லது அதிகாரிகள் போல அவர்கள் தங்கள் வீட்டிலேயே நடமாடினார்கள். ••• கல்யாணம் ஆகி வெகுகாலம் கழித்து அவர்களுக்குப் பிறந்த பிள்ளை ஆண்பிள்ளை. பழனி வரை பாத யாத்திரை போய்ப் பெற்றெடுத்த பிள்ளை. தண்டாயுதபாணி என்றே குழந்தைக்குப் பெயர் வைத்தார்கள். தங்கள் வசதிக்கு மீறியே அவனை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். பெரிய பள்ளியில் நல்ல படிப்பு படிக்க வைத்தார்கள். இன்ஜினியரிங் வரை அவன் நன்றாகவும் படித்தான். […]