மௌனம் – 2 கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 13 in the series 2 ஏப்ரல் 2023

ஆர் வத்ஸலா

மௌனம் 1

மௌனத்தின் மொழி

அறிந்தோர்

அறிவார்

சொல்லின் வலுவை


மௌனம் 2

முன்பெல்லாம்

நான் பேசுவேன்

நீ மௌனிப்பாய்

இதழோரப் புன்னகையால்

என்னை வருடிக் கொண்டு

இன்று

நான் பேசுகிறேன்

நீ மௌனிக்கிறாய்

தொலைத்த புன்னகையால்

என்னை வதைத்துக் கொண்டு

Series Navigationஏகாந்தம்நேர்மையான மௌனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *