ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

This entry is part 11 of 13 in the series 2 ஏப்ரல் 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] 
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா 

++++++++++++++++++++++++ 

அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

++++++++++++++++ 

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] 

ஒத்தல்லோவெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது] 

மோனிகாசெனட்டர்  சிசாரோவின் மகள்ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] 

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது] 

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] 

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] 

சிசாரோமோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது] 

எமிலியோ : புருனோவின் மனைவி. 

ாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். 

பயாங்காகாஸ்ஸியோவின் கள்ளக் காதலி. 

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள் 

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு 

இடம்சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் 

நேரம் : பகல் வேளை 

பங்கெடுப்போர்சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு  படைவீர்கள், காஸ்ஸியோ. 

[படகிலிருந்து இறங்கி வருகிறாள் மோனிகா, தோழியர், எமிலியோ, ஷைலக் சூழ]   

காஸ்ஸியோபாருங்கள்வருகிறாள் வெனிஸ் கப்பல்  கோமகள் மோனிகா, அனைவர் பார்வையும் அவள் பக்கம் தான்அடுத்து  அருகில்  தோழி எமிலியோ, புருனோவின் மனைவி.  [மற்றவரைப் பார்த்துமோனிகா முன் மண்டியிட்டு வந்தனம் செய்வீர்.  [மோனிகா அருகில் போய்வருக, வருக எழில் மாதரசி, புது மண மாதரசிவானுலக வீனஸ் ஒளிமயம் உனக்கு முன்னும், பின்னும் , உன்னைச் சுற்றியும் மிளிர்கிறது.   

மோனிகாமிக்க நன்றி,  மாவீரர் காஸ்ஸியோஎன்னருமை கணவர் எங்கிருக்கிறார் சொல்ல முடியுமா ?   

காஸ்ஸியோஇங்கு இன்னும் வரவில்லை ஒத்தல்லோ ஜெனரல்சீக்கிரம் இங்கு வந்து விடுவார்நலமுடன் உள்ளார். 

மோனிகாஆனால் எனக்கு பயமாக இருக்குது.  [கலக்கமுடன்] நீ இங்கேஅவர் எங்கோஎப்படி நீ  தனித்து இங்கே  அவரைப் பிரிந்து நிற்கிறாய் ?     

காஸ்ஸியோகொந்தளிக்கும் கடலும், கோரப் புயல் காற்றும் எங்களைப் பிரித்து விட்டன மோனிகாஅதோ ஒரு படகு வருகுதுவரவேற்பு வெடி வெடிக்குது.  [காவலன் ஒருவனிடம்] வருவது யாரெனத் தெரிந்து வா.  [ போகிறான்].  [புருனோவை நோக்கிகோபப் படாதீர்  கோமானேஉமது மனைவியை நான் புகழ்வதற்கு.  [எமிலியோ கையைப் பற்றி முத்தம் தருகிறான்.]   

புருனோஎன்னோடு என் மனைவி உரையாடும் சொல் எண்ணிக்கை குறைவு. அந்த அளவு நீங்கள் முத்தமிட்டால் தான் , உங்களுக்கு மன நிறைவு உண்டாகும்.   

மோனிகா: [புன்னகை செய்கிறாள் புருனோவைப் பார்த்து] 

புருனோ: என் மனைவி மிகையாகப் புலம்பி பேசுவாள், நான் படுக்கையில் தூங்க முயலும் போது.  [எமிலியாவுக்கு கோபம் வருகிறது]  [மோனிகாவை நோக்கிமேடம் மோனிகாநான் ஒப்புக் கொள்கிறேன்என்ன பேசுகிறாள் என் மனைவி என்று கவலை இல்லை எனக்குவாயைத் திறந்தால் அவள் வசை புராண மொழிகள் தான்  கொட்டும் எதைப் பற்றியும் !     

எமிலியோ:  [சினங்கொண்டுஅப்படி என்னைப் பழிப்பது  தகாத செயல் புருனோ. 

புருனோஇல்லை, இல்லை இனியவளே !   வெளியே பிறர்  முன்பாக மாதர் ஓவியப் படம் போல் ஊமையாய் நிற்பர்ஆனால் வீட்டில் பெருத்த வாயாடியாய்  இருப்பர் காட்டுப் பூனையைப் போல்.! [புருனோ பேசப் பேச எமிலியோ சினம்  மிகுந்து வேதனை அடைகிறாள்தெய்வீக மாதர் போல் நடிப்பீர், மற்ற மாதரை இகழும் போதுவீட்டுக்குள் நடப்பது எல்லாம் நிஜக் கடிப்பு. 

மோனிகாபோடா போ வெட்கம் இல்லாதவனே.   

புருனோநான் முரட்டு துருக்கி நாட்டவன் அல்லன்மாதர் காலையில் எழுந்ததும் படுக்கையில் என் மீது காதல் வயப்படுவார்.  ஆனால் எனக்கு மாதர் மீது காதல் எழாது 

எமிலியோ: [கனிவுடன்] நீ எனக்கொரு காதல் பாடல் எழுதுவாயா ? 

புருனோ: உனக்கு நிச்சயம் எழுத மாட்டேன் . 

மோனிகா: [புன்னகையுடன்] என்னைப் புகழ்ந்து ஒரு காதல் பாடல் நீ புனைந்தால் அது எப்படி எழுதுவாய் 

புருனோஎன்னைக் கேட்காதே.  ஜெனரல் ஒத்தல்லோ என்னைக் கொன்று விடுவார். எனக்கு குறை கூறத்தான்  தெரியும். 

மோனிகாமுயன்று பார் புருனோசொல் எப்படி என்னை நீ பாட்டில் புகழ்வாய் 

புருனோமுயல்கிறேன்ஆனால் என் கற்பனை வேலை செய்ய மறுக்கிறது.  பொன்னிறக் கூந்தல் அழகிதிறமையுடன் இருந்தால் புகழலாம்வெறும் திறமை மட்டும் இருந்து அதையே அழகாகக் காட்டினால்  அது ஏற்புடமை ஆகாது 

மோனிகாமெச்சுகிறேன் புருனோ,  பொன்னிறக் கூந்தல் அழகி தனித்துவ கலைத் திறமை கொண்டிருந்தால் ? 

புருனோபொன்னிறக் கூந்தல் அழகி திறமைசாலியாக இருந்தால் அவள் பெரிய மேதை ஒருவனைக் கவர்ந்து விடுவாள் 

மோனிகாஅப்படி எல்லாம் சொல்ல முடியாது புருனோ. 

எமிலியோபொன்னிறக் கூந்தல் அழகி முட்டாளாக இருந்தால் ? 

புருனோமுட்டாள் பொன்னிறக் கூந்தல் அழகி பல ஆடவரை கவர்வாள். அவள் முட்டாள்தனமே கவர்ச்சி தருகிறது.  [டிரம்பெட் முரசம் கேட்கிறது] அதோ ஜெனரல் ஒத்தல்லோ வருகிறார்.  

 [ரகசியமாக, ஆனால் கேட்கும் படி காஸ்ஸியஸ் காதில்] மோனிகா அருகில் நில் ! அவள் கையைப் பற்றி முத்தம் கொடு !  நல்ல தருணம் நழுவ விடாதே  ! 

மோனிகா: [ அதிர்ச்சி அடைந்து விழிக்கிறாள். ] என்ன சொன்னாய் அயோக்கியனே ! 

[தொடரும்] 

Series Navigationரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *