This entry is part 5 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா

நாள் காட்டியில்

அக்னி நட்சத்திரத்தின் முடிவை பற்றின

தீர்மானங்களை வெயில் கன்னி

ஒதுக்குவதை போல்

தினசரியில்

தொலைகாட்சியில்

வானொலியில்

தோன்றும்

நிபுணர்கள்

மழை பெய்யும் சாத்தியத்தை பற்றிய

முன்னறிவுப்புகளை

அலட்சியமாக ஒதுக்கும்

வானம்

நனைய ஆசைப் படும் குழந்தைகளிடம் 

கருணை கொண்டு

கொஞ்சம் மழையை

உதிர்த்து விட்டுப் போகிறது

தானாக 

சில சமயங்களில்

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம் இருபத்தேழு  CE 5000மழை