Posted inகவிதைகள்
அனுபவம்
வளவ. துரையன் மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு.இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன.தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டதுஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோஎன்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும்.அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது.அதை அனுபவிப்போம்