This entry is part 9 of 9 in the series 12 ஜூலை 2026

லதா ராமகிருஷ்ணன்

‘Survival of the Fittest’ என்ற கோட்பாடு தான் உலகை இயக்குகிறது என்று அடிக்கடி அறிவார்த்தமாகக் கூறப்படுவதைக் கேட்கமுடிகிறது. ஆனால், யார் fittest இந்த கேள்விக்கான பதில் மனித வரலாற்றில் ஒரேபோல் இருந்ததில்லை. உடற்     குறையுடைய மாற்றுத்திறனாளிகள் ஒரு காலத்தில் கடவுளின் சாபமாகப் பார்க்கப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் முதியவர்கள் முதுமக்கட் தாழியில் அடைக்கப்பட்டு மலையுச்சியில் அல்லது வேறெங்காவது வனாந்தரத் தில் வைக்கப்பட்டு அப்படியே படிப்படியாக அவர்களது உயிர் அடங்கிவிடும் என்று படித்ததுண்டு. இன்று அறிவியல் துறை வளர்ச்சியாலும், மருந்து மாத்திரைகள் அதிகம் கண்டுபிடிக்கப்படுவதாலும், மருத்துவ வசதிகள் மருத்துவ வசதிகள் கிடைக்கும் வழிவகைகள் அதிகமாக்கப்பட்டிருப்பதாலும் நவீன உலகில் 80 வயது என்பது கடந்த கால 60 வயதிற்கொப்[பானது என்பது உண்மை ஆகியிருக்கிறது

 இதனால்தான் பண்டைய இலக்கியங்கள் பண்டைய இலக்கியங்கள் புராண இதிகாசங்களை பற்றிப் பேசும்போது அவற்றை மனித வாழ்வின் இன்றைய வளர்ச்சி மேம்பாட்டு நிலையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்தப் பின்னணி யில் பேச வேண்டிய தேவை இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் தனது அன்றாடத்தில் இருந்து அதிகம் தொடரில் எழுத்தாளர் ஜெய மோகன் கட உபநிடதத்திலிருந்து ஒரு வரியை மிக முக்கியமாக எடுத்துக் காட்டி திரும்பத் திரும்ப தனது தொடரில் மேற்கோள் காட்டியிருப்பதை படித்தபோது வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. 

விழியிழந்தவர் விழியிழந்தவரை வழிநடத்துவதைப்போல என்ற அந்த வாச கத்தை (எதிர்மறைப்பொருளில்) தருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ‘இருவரும் குழியில் விழுந்து விடுவார்கள் என்றுவேறு முடிந்த முடிவாய்க் கூறுகிறார். இன்று பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் எத்தனையோ முன் னேறியிருக்கிறார்கள். தனியாக நெரிசலான சாலைகளில், ஊர்திகளில் சென்று வருகிறார்கள். கணினியை இயக்குகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் சொல்ல மனமில்லை திரு.ஜெயமோகனுக்கு. விழியிழந்தவர்கள் அவரைப் பொறுத்த வரை வெறும் உவமான உவமேயத்திற்கு மட்டுமே உதவுபவர்கள் அவரைப் பொறுத்தவரை. அப்படியா?

பார்வை இருப்பதாலேயே, வேறு எந்த உடற்குறையும் இல்லாமலிருப்பதா லேயே மனிதரை மனிதன் நல்லபடியாக வழிநடத்தி விட முடிகிறதா? அப்படி வழிநடத்துகிறார்களா? INCLUSIVE EDUCATION, INCLUSIVE GOVERNANCE என்பதை பேசிக்கொண்டே எழுத்தாளர்களை இப்படி பேசினால் எப்படி? இன்றுவரை சமூக அரசியல் களங்களில் பிரதிநித்துவமே இல்லயென்ற நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை இப்படி மதிப்பழிக்க, பாரம்பரியம் மிக்கதாகப் பீற்றிக் கொள்ளும் ஆனந்தவிகடன் போன்ற பெரும்பத்திரிகைகள் இடமளிக்கலாமா?

மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் அவருக்கான பலவீனங்கள் குறைபாடுகள், அறியாமைகள் இருக்கின்றன. உரியவிதத்தில் அவற்றை கவ னத்தில் எடுத்துக்கொண்டு அவற்றிற்கான உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டதால் நிறைய தனிநபர்சார், சமூகஞ்சார் குறைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும்

*

குழந்தைப்பருவம், குறிப்பாக ஒன்று முதல் ஐந்து வகையான ஆரம்பக் கட்டம் ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமானது என்று சொல்லப் படுகிறது என்று பெண்கள் அதிக அதிகமாக வேலைக்கு செல்வதால் குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் குழந்தை பராமரிப்பு மையங்களில் மையங் களின் தேவை அதிகமாக இருக்கிறது ஆனால் இந்த தேவைக்கு மதிப்புக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதை இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு நாட்களுக்கு முன் படிக்க கிடைத்த தி ஹிந்துவில் படிக்க கிடைத்த பெங்களூர் CAPEGEMINI என்ற நிறுவனத்தின் குழந்தை பராமரிப்பு மையம் பற்றிய செய்தி புலப்படுத்துகிறது 

அழும் குழந்தைகள் அடம்பிடிக்கும் குழந்தைகள் பல வகையான உடல்ரீதி யான உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக அங்குள்ள பராமரிப்பு ஊழியர்களை எட்டு பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தில் அதாவது அந்த மையத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளை கடுமையாக திட்டுவது பாத்ரூமில் அடைத்து வைத்து பயன்படுத்துவது மேலே தண்ணீர் ஊற்றுவது என வகை வகையாக கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள் சமூக ஊடகத்தில் அந்த காட்சிகள் சில வெளியான பிறகு இந்த நடவடிக்கை சிசிடிவியை வைத்தால் மட்டும் போதுமா? அவற்றில் அன்றாடம் பதிவாகும் காட்சிகளை அன்றன்று பார்க்க மாட்டார்களா?

காப்பகம் நடத்துபவர்கள் பள்ளிகள் குழந்தை பராமரிப்பு மையங்களில் பணி புரிபவர்களுக்கு அதற்கான மனப்பாங்கு பொறுமையும் இருக்கவேண்டியது அவசியம் வாக்கு வங்கிகள் அல்ல குழந்தைகள் என்பதால் குழந்தை நலன் புறக்கணிக்கப்பட்டால் அது வருங்கால சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பு உண்டாகும் சிறு குழந்தைகளை பராமரிக்க ஆசிரியைகளுக்கு MONTESSORI SYSTEM OF EDUCATION மிகச்சிறந்த பயிற்சி அளிப்பது போல் குழந்தை பராமரிப்பு ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவேண்டியதும், அத்தகைய பயிற்சியளிக்கப்பெற்றவர்களையே வேலைக்கும் அமருவது மிக முக்கியம்.

இதைப் பற்றியெல்லாம் பேசாமல் எழுத்தாளர் வண்ணநிலவன் ஊடகவிய லாளர் ரங்கராஜ் பாண்டே, துக்ளக் போன்ற பத்திரிகைகள் திரும்பத்திரும்ப ‘முன்பெல்லாம் தனது பிள்ளையின் கண்ணை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லாப் பகுதிகளிலும் அடித்து விளாசி தோலுரித்து பாடம் கற்றுக்கொடுங்கள் புத்தி புகட்டுங்கள் – நாங்கள் தலையிட மாட்டோம் என்று ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் மனதாரச் சொன்னபடியால் குழந்தைகள் மாணாக்கர்கள் ஒழுக் கமாக வளர்ந்தார்கள் என்று சமயம் கிடைத்தபோதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பது என்ன நியாயம்? சமீபத்தில் எஸ் ஜே இதயா என்ற இதழியளாளர் துக்ளக் இதழில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையிலும் இதையே குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய படைப்பாளிகள் பத்திரிகையாளர்களை தலை கீழாக கட்டித் தொங்கவிட்டுத் தோலுரித்தால் இவர்களுக்கு எப்படியிருக்கும்? 

மகாத்மா காந்தி, மாண்டிசோரி அம்மையார், மண்டேலா போன்ற மகத்தான மனிதர்கள் குழந்தைகளை அடிப்பதும், மதிப்பழிப்பதும் எத்தனை தவறான காரியம் என்று அடிக்கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்கள். ஆனாலும், குழந்தை களை அடித்துத் திருத்தவேண்டும் என்ற கருத்து திரும்பத்திரும்ப வலியுறுத்தப் படுகிறது. 

குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம். எனவே இத்தகைய கருத்துக்களை வெளியிடுபவர்களும் abetting the crime (அந்தக் குற்றத்திற்குத் துணைபோகிற வர்கள்) என்று தண்டிக்கப்பட வேண்டியவர்களே குழந்தை நலனுக்காக இந்த இதழியலாளர்கள், படைப்பாளிகள் ஏதாவது கவனம் செலுத்துகிறார்களா? எழுதுகிறார்களா? எதுவும் கிடையாது.

*

சமூக நலன் குறித்த உண்மையான அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கும் நல்ல புத்தகங்களை வாசித்தல் மனதை ஓரளவு அமைதிப்படுத்துகிறது. அப்படி சமீபத்தில் படிக்கக் கிடைத்த மூன்று புத்தகங்கள்  1) THE DEATH OF THE BRAHMIN LIBERAL by M.K.SUDHARSAN;  2) LECTURES ON THE RAMAYANA  – திரு. சீனிவாச சாஸ்திரி தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் மூன்று மாதங்கள் தொடர்ந்து மயிலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு 3) KARUNA – THE POWER OF COMPASSION  என்ற தலைப்பில் 2014இல் நோபல் அமைதிக்கான விருதை இளம்பெண் மலாலாவுடன் இணைந்த அளவில் பெற்ற திரு. கேசவ் சத்யார்த்தி என்ற குழந்தைகள் நல-மேம்பாட்டுக்காய் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துக்கொண்டிருக்கும் கேசவ் சத்யார்த்தி எழுதியுள்ள நூல்.

முதல் நூலில் ஆசிரியர் எம்.கே.சுதர்சன் , சீனிவாச சாஸ்திரியின் அரசியல் பார்வை, அணுகுமுறை, கல்விதான் மனித மேம்பாட்டிற்கு அடிப்படை என்ற அவரது தீர்க்கமான நம்பிக்கை, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கான வழிமுறைகளில் அவருக்கும் காந்திக்கும் இடையில் நிலவிய முரண்பட்ட பார்வைகள், அதை மீறி அவர்களிடமிருந்த பரஸ்பர அன்பு, மரியாதை, நம்பிக்கை என பல விஷயங்களை நுட்பமாக விவரித்திருக்கிறார். தென்னாப் பிரிக்காவில் குடியேறிய கல்விதான் மனித மேம்பாட்டிற்கு அடிப்படை என்று அவரது தீர்க்கமான நம்பிக்கை நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கான வழி முறைகளில் அவருக்கு காந்திக்கும் இடையில் நிலவே முரண்பட்ட பார்வைகள் அதை மீறி அவர்களிடம் ஒருவருக்கொருவர் இருந்த பரஸ்பர அன்பு மரியாதை எல்லாவற்றையும் நூலாசிரியர் நுட்பமாக விவரித்துள்ளார் தென் ஆப்பிரிக்கா வில் குடியேறி இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்குத் திரு.சீனிவாச சாஸ்திரி ஆற்றிய தொண்டு அளப்பரியது.  அதை மதித்து அங்கீகரிப்பதாய் இன்றும் தென்னாப்பிரிக்காவில் சாஸ்திரி கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நூறு ஆண்டு நிறைவு செய்கிறது அந்தக் கல்வி நிறுவனம். இப்போது அங்கு கொண்டாடப்படவுள்ள நூற்றாண்டு விழா வுக்கு திரு சீனிவாச சாஸ்திரியின் குடும்பத்தாரை நேரில் வந்து அழைத்திருக் கிறார்கள் விழாக்குழுவினர். சாஸ்திரியின் பேத்தி திருமதி பத்மினி கோபாலன் 994 வயது) ஆரவாரமற்ற தன்னார்வ சமூகப் பணியாளர் கல்வியாளர் சிந்தனையாளர், வாசகர் .

இரண்டாவது நூல்  LECTURES ON THE RAMAYANA.  திரு.சீனிவாச சாஸ்திரி தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் வால்மீகி ராமாயணத்தின் பல்வேறு அம்சங்கள், முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து மூன்று மாத காலம் தினமும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு அற்புதமான ஆங்கில மொழிவளம், தர்க்கஞானம்! ஒரு காவியத்தை – புராணத்தை – அதன் உட்கூறுகளை எப்படி உரிய மரியாதை யோடும் ஆழ்ந்த வாசிப்போடும் அணுகவேண்டும், அது பற்றிய கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதற்கு இந்த நூல் மகத்தான ஆவணம்!

மூன்றாவது நூல் SYMPATHY, EMPATHY, COMPASSION (இவற்றிற்கான சரியான தமிழ்ச்சொற்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அனுதாபம், பரிவதிர்வு, கருணை?) ஆகியவற்றிற்கிடையேயான நுட்பமான வேறுபாடுகள், இந்த மூன்றில் இந்த மூன்றில் COMPASSION (கருணை) தான் மேலானது –  ஏனெனில், அது நீண்டகாலப் பயனளிக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள வைக்கும்’ என்று, சின்னச் சின்னக் கதைகளின் மூலமும் தனது 40  + ஆண்டு கால நேரடியான, தொடர்ச்சியான குழந்தை நலஞ்சார் / உரிமைகள் சார் சமூகப் பணி அனுபவங்களின் மூலமும் சுவாரஸ்யமாக எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர் கைலாஷ் சத்யார்த்தி என்ற இந்தியர். 2014இல் அமைதிக்கான நோபல் விருது இவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா என்ற இளம் பெண் போராளிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அமைதிக்கான நோபெல் விருதைப் பெற்ற மிகக் குறைந்த வயதுடையவர் மலாலா. மலாலாவுக்கு கிடைத்த மீடியா வெளிச்சத்தில் பாதிகூட கேஷவ் சத்யார்த்திக்குத் தரப்படவில்லை என்று தோன்றுகிறது. அதைப் பற்றி எல்லாம் எண்ணிப்பார்க்கவும் நேரமில்லாமல் தொடர்ந்து குழந்தைகள் நலனுக்காக இயங்கிக்கொண்டிருக்கிறார் இந்த 70 பிளஸ் வயதாகும் மாமனிதர் சத்யார்த்தி!

Series Navigationமுடிவு…