This entry is part 6 of 9 in the series 12 ஜூலை 2026

ரவி அல்லது

அவைகளின் துல்லிய விழிப்பு பற்றிய வியப்புகள் நின்றபாடில்லை.

நேற்றைய  உறக்கத்தின் ஓய்வில் சில இழப்புகள் அவைகளுக்கு இருக்கத்தான் செய்தது.

பரந்துபட்ட பூமியில் அவைகளின் பண்புகளில் கிஞ்சித்தும் மாற்றமில்லை. அவைகளின் கீச்சிடல்களை இதயத்திற்குள் இருத்த ஏதாவது செய்யலாம்.

வலசையின் ஆச்சரியத் தூரம்  முடிவுகள் எட்டப்படாமலும் இருக்கிறது.

காற்றிருக்கும் திசைகளெல்லாம் கண்டங்களின் பிரிதலற்று அசைகிறது அவைகளின் சிறகுகள்.

நிதானத்தின் மௌனப் பறத்தலில் அம்பும் அதன் பரிணாம வளர்ச்சியின் உயிர் போக்கியும்   குறி தப்பிய பதட்டத்தை சில முறை அவைகளிடம் கண்டிருக்கிறேன்.

அவைகள் என்னைச் சுற்றி பின்னியிருக்கும் நிச்சலனப் போக்கை கொறித்தபடி இருக்கையில் சலனமாக்கும் பரபரப்பு சமீபிக்கிறது.

இன்றைய நாளின் பயணத்தில் அவைகளும் பறக்கின்றன நானும் பறக்கின்றேன் இருவருமே பசியடக்கவே பறக்கின்றோம்.

***

ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationஆலமரம்   மேகம் பார்த்த மின்னல்