This entry is part 2 of 7 in the series 26 ஜூலை 2026


ரவி அல்லது.

ஏதோவொன்றை தேடிவனுக்கு
ஏற்காதபொழுதும்
கிடைத்ததென்னவோ
அறியாப் புறத்தின் நன்மைதான்.
தருணச் சறுக்கலின்
கைசேதக் கவலையால்
ஏற்பின் இயலாமை
ரணத்தில் துடிக்கிறது
பொழுதுகளைக் கெஞ்சி.
சூழ்ந்திருக்கும் காற்றை
சுவாசிக்க முடியாமல்
பொத்தென்று
வீழ்கிறது வாழ்க்கை
அதன் போக்கில்
வாய்ப்புகளற்று.

-ரவி அல்லது.
ravialladhu@gmail.com

Series Navigationஅழாதவன்கனவு இருந்தது.