Articles Posted by the Author:

 • கல் மனிதர்கள்

  கல் மனிதர்கள்

  ( கொரியக்கதை) பயணம் செய்பவர்கள் பயணக் களைப்பால் வழியில் சற்றே இளைப்பாறுவதுண்டல்லவா?  கொரிய நாட்டில் சயன்போ என்பவன் இது போன்று பயணம் சென்ற போது, ஒரு மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றான். அவன் தன்னுடைய நகரிலிருந்து, பக்கத்திலிருந்த மற்றொரு நகருக்கு முப்பது கட்டு பட்டு நூல்களை கொண்டு சேர்க்க பயணப்பட்டான்.  அது வெப்பம் மிக்க கோடையில் ஒரு நாள்.  வெகு தூர பயணத்திற்குப் பிறகு, களைப்பாற முடிவு செய்தான் சுயன்போ. வசதியான ஒரு இடத்தைக் கண்டு பிடிக்க […]


 • விற்பனைக்குப் பேய்

  விற்பனைக்குப் பேய்

  சுங் நல்ல வியாபாரி.  திறமைசாலி.  கிராமத்தில் பலசரக்குக் கடை வைத்திருந்தான்.  ஒரு கோடை காலம் எல்லோரையும் வருத்தியது.  வெப்பம் அதிகரித்து, பயிர்கள் வாடின. மக்களை வாட்டியது.  சுங்கின் கடை நட்டத்தில் இருந்தது.  காய்கறிகள் விற்க முடியவில்லை. உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை.  கிராமத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக, குடும்பம் குடும்பமாக ஊரை விட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.  பெரிய நகரங்களில் வேலை செய்யும் ஆசையில் நகரை நோக்கிச் சென்றனர்.  ஒரு நாள் சுங்கும் ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்தான். ஒரு […]


 • பிசாவும் தலாஷ் 2டும்

  பிசாவும் தலாஷ் 2டும்

    இரு வேறு மொழிகள்.  இரண்டும் திரைப்படங்கள். கதை கரு ஆவிகள் இருக்கிறதா இல்லையா என்பது.  எதேட்சையாக நான் அடுத்த அடுத்த நாளில் தமிழில் ‘பிசா’வும் ஹிந்தி மொழியில் ‘தலாஷ் 2’டும் பார்க்க நேர்ந்தது.  அதன் தாக்கம் தான் இந்தச் சிறு கட்டுரை.   உலகிலே எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன.  சிலவற்றை நம்ப முடியும். அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியும். சிலவற்றை நம்பவே முடியாது. அது எப்படி நடந்திருக்கும், ஏன் நடந்தது, எதற்காக நடந்தது என்று அறிவுப்பூர்வமாக […]


 • தேவலோகக் கன்னி

  தேவலோகக் கன்னி

  எப்போதும் சாங் இ, உலகில் மானிடர்களைச் சந்திக்க, சீனாவின் பிரபலமான தய்ஷான் மலைச்சாரலுக்கு வருவாள். அப்படி வரும் போது ஒரு நாள் அங்கே ஒரு வயதான மூதாட்டி, ஒரு சிறு பாறையில் தடுக்கி, மூச்சி முட்டி, கீழே விழுவதைக் கண்டாள். உதவி செய்ய அருகே செல்லும் முன்னரே, அதிர்ஷ்டவசமாக, மூதாட்டி விரைவிலேயே ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றார். சாங் இ அவரிடம், “மூதாட்டியே.. ஒன்றுமில்லையே.. ஏன் இத்தனை அவசரம்..?” என்று கேட்டாள். மூதாட்டிக்கு தன்னுடைய தண்ணீர் குடுவையைக் […]


 • வாழ்க்கை பற்றிய படம்

  வாழ்க்கை பற்றிய படம்

  ஆங்கிலப் படம். பலரும் அருமை என்று கூறக் கேட்ட என் கணவர், எங்களையும் அதைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்று துடித்தார். ஞாயிறன்று மாலைக் காட்சி பார்க்க வேண்டும் என்று தயாரான போதும், மதியத் தூக்கத்தின் காரணமாகப் போக முடியாததால், நல்ல இனிய காற்றினை சுவாசிக்க நடைபயிலச் சென்ற போது, திடீரென முடிவு செய்து இரவு 10 மணி ஆட்டத்திற்குச் சென்றோம். மிகச் சிலரே அரங்கில் இருந்தோம். படம் ஆரம்பிக்கும் முன்பே சென்று விட்டதால், குழந்தைகள் சற்றே […]


 • மதிப்பும் வீரமும்

  மதிப்பும் வீரமும்

  பண்டைய சீனாவில் கி.மு. 475-221 வரலாற்றில் அதிக போர்கள் நடந்த காலம்.  ஏழுக்கும் மேற்பட்ட குறுநிலப் பிரதேசங்களுக்கு இடையே எப்போதும் போர் தான். அவற்றில் மிகவும் அதிக பலம் பொருந்திய அரசன் என்று கருதப்பட்டவன் அரசன் ச்சின் சீ ஹ_வாங். அவன் தன்னாட்சி செய்து வந்த காலம். அவன் மற்ற பிரதேசங்களுடன் எப்போதும் சுமுக உறவுடன் இருக்க விரும்பாதவன்.  அதிலும் மன்னன் ச்ஜாவ் என்றால், பலகீனமான மன்னன் என்பதால், மிகவும் காட்டமாக இருப்பான். இதற்கு மேலாக, மன்னன் […]


 • 2016 ஒபாமாவின் அமெரிக்கா

  2016 ஒபாமாவின் அமெரிக்கா

  சித்ரா சிவகுமார் ஹாங்காங் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில், அமெரிக்க திரைப்பட ரசிகர்களைப் புயலெனத் தாக்கியுள்ளது ‘2016 ஒபாமாவின் அமெரிக்கா’ என்ற ஆவணத்திரைப்படம். ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்..  அமெரிக்கா எப்படி இருக்கும்? என்பது தான் இந்த ஆவணப்படத்தின் முக்கிய கரு. 2010இல் வெளியான “ஒபாமாவின் பெருங்கோபத்திற்கான ஆணிவேர்” (ரூட்ஸ் ஆப் ஒபாமாஸ் ரேஜ்) ஒபாமாவைப் பற்றிய பல விவரங்களைத் தந்தது.  இதை அமெரிக்காவில் 17 வயதில் குடியேறிய இந்திய […]


 • உரஷிமா தாரோ (ஜப்பான்)

  உரஷிமா தாரோ (ஜப்பான்)

  உரஷிமா தாரோ (ஜப்பான்) சித்ரா சிவகுமார் ஹாங்காங் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு, ஒரு கோடை மாலையில், உரஷிமா தாரோ என்ற வாலிபனொருவன், அலைவீசும் கடற்கரையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தான்.  அன்று அவன் மீன் பிடித்து, சந்தையில் விற்று, பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.  அன்றைய தொழில் மிகவும் திருப்திகரமாக இருந்ததால், சற்றே மகிழ்ச்சியுடன் நடை பயின்று கொண்டிருந்தான். அவன் நடந்து கொண்டிருந்த வழியில், அவன் கண்களில், திடீரென்று ஒரு ஆமை தென்பட்டது.  ஆமை.. பாவம்.. கேட்பாரற்று தன்னுடைய […]


 • மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)

  மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)

  சித்ரா சிவகுமார், ஹாங்காங் வெகு காலத்திற்கு முன்பு, கொரிய நாட்டின் கும்காங் மலையடிவாரத்தில், ஒரு ஏழை விறகுவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தாயுடன் தனியே வாழ்ந்தான். மணம் ஆகியிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும், மலைக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று, தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு முன்பனி காலத்தில், சிவப்பு மேபில் மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லாப்பகுதியும் தகதகவென்று ஒளிர்ந்து கொண்டு இருந்த போது, எப்போதும் போல், காட்டில் மரம் வெட்டச் சென்றான். கடினமாக மரத்தை […]