Articles Posted by the Author:

 • கருணைத் தெய்வம் குவான் யின்

  சித்ரா சிவகுமார் ஹாங்காங் ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் சூ மாநிலத்தை மிகவும் திறமை வாய்ந்த அரசர் மியாவ் சுயன் ஆண்டு வந்தார். அவரது ஆணையை எவரும் எதிர்த்தவர் இல்லை.  யாரேனும் ஆணைப்படி நடக்கவில்லையென்றால், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர், குடும்பத்தினர் உட்பட! அரசர் மியாவிற்கு, அழகான மூன்று மகள்கள் இருந்தனர். மூத்தவள் மியாவ் யின். இரண்டாமவள் மியாவ் யான். இளையவள் மியாவ் ஷான். இளையவள் பிறந்த உடன், அவளைக் கண்ட அரசருக்கு, அவளது முகம் பரிசுத்தமாகவும் கருணை மிக்கும் காணப்பட்டதாக […]


 • அமேசான் கதைகள் – 3  நிலவைத் தேடி..

  அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..

    ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதையும் ஆற்றங்கரைக்குச் சென்று கழிப்பதை ஒரு பெண்கள் குழு பழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். தென்றல் காற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்து விட்டு, இதமான நீரில் குளித்து விட்டு, பாடல்களைப் பாடி, ஆடி, கதைகள் பேசி தங்கள் பொழுதை ஆனந்தமாகக் கழிந்து வந்தனர். புல்வெளியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு, இருண்டு கொண்டு வரும் வானத்தைப் பார்ப்பது அனைவருக்குமே பிடித்த ஒன்று.  நிலா வெளி வந்ததும், அதைக் கண்டு பல விதமான கதைகளைப் பேசுவது அதைவிடவும் பிடித்த […]


 • அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்

  அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்

  பூமி உருவான ஆரம்ப காலங்களில் காடு மிகவும் வேறுபட்டு காணப்பட்டது. முதல் மனிதர்களுக்கு உண்பதற்கு வெறும் இலைகளும் நாவற்பழங்களும் மட்டுமே கிடைத்தன. அகௌடி காட்டின் நடுவிலே நடந்து சென்றான். அவன் மிகவும் ருசியான வித்தியாசமான உணவினைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்கு இலைகளும் நாவற்பழங்களை விட்டால் வேறெதுவும் கிடைக்கவில்லை. அன்று அவன் எவ்வளவு தூரம் நடந்து இருப்பான் என்று சொல்ல முடியாத அளவு வெகு தொலைவு நடந்துவிட்டிருந்தான். அன்று அவனுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவன் […]


 • அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி

  அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி

  (சூரியன் தோன்றி ஒளி வீசுவதை பிராசில் காட்டில் வாழும் கமயுரா மக்கள் பழங்கதையாக கூறிவது) உலகம் உருவான ஆரம்ப காலத்தில், காடு ஒளியில்லாமல் இருண்டு இருந்தது.  சூரியனின் தங்கக் கதிர்கள் மரங்களின் மேல் இருந்த பறவைகளின் ராஜ்யத்தில் சிக்கிக் கொண்டன.  மக்கள் இருளிலேயே எழுந்து இருளிலேயே தூங்கச் சென்றனர்.  தங்களைச் சுற்றி இருப்பவர்களைக் காணவும் முடியாது தவித்தனர். சூரியக் கடவுளை ஒளி தரக் கேட்டு தினம் முறையிட்டனர். ஒரு நாள் “இது நல்லதல்ல.. என்னுடைய ஒளியை எல்லோரும் […]


 • உய்குர் இனக்கதைகள் (3)

  உய்குர் இனக்கதைகள் (3)

  5. செல்வமும் நீதியும் ஒரு நாள் அரசரும் மதியாளர் நசிர்தினும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மதியாளரிடம், “நசிர்தின்.. உன்னிடம் செல்வம், நீதி இதில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால், எதைத் தேர்வு செய்யவாய்?” என்று கேட்டார் அரசர். சற்றும் யோசியாமல், “ பணம்..” என்ற பதில் சொன்னார் மதியாளர். “என்ன?” என்று ஆச்சரியப்பட்ட அரசர், “நான் நீதியைத் தான் தேர்வு செய்வேன்.  பணம் எல்லா இடத்திலும் இருக்கிறது.  நீதியைக் காண்பது தான் மிகவும் அரிதானது” என்றார் மிகுந்த கவனத்துடன். […]


 • உய்குர் இனக்கதைகள் (2)

  உய்குர் இனக்கதைகள் (2)

  3. எப்போது எண்ணலாம்? மதியாளன் மிகவும் செல்வந்தராக இருந்த காலம். எல்லோரும் அவருடைய நெருங்கிய நண்பர்களாக ஆக வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டு, போட்டா போட்டி போட்டிக் கொண்டு, அவருடைய நட்பு வட்டாரத்தில் இருக்க விருப்பினர். அப்போது ஒரு நாள், ஒருவர் அவரிடம், “நசிர்தின்.. அப்பப்பா.. எத்தனை நண்பர்கள்? உங்களால் அவர்கள் எல்லோரையும் எண்ணிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். முடியாது என்பதை தலையை ஆட்டிக் காட்டி விட்டு, “எண்ணுவதா? எல்லோரையுமா? இப்போதைக்கு அது சாத்தியமில்லை. […]


 • உகுயுர் இனக் கதைகள் (சீனா)

  உகுயுர் இனக் கதைகள் (சீனா)

  1. தேவையற்ற முன்னெச்சரிக்கை ஒரு நாள் மிதியாளர் நசிர்தின் அரசரின் மாளிகையைக் கடக்க நேர்ந்தது.  அங்கு மாளிகையின் முன்னே கூட்டம் இருப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தார்.  அவர்கள் தீவிரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் அருகே சென்று பார்த்த போது, அவர்கள் மாளிகையைச் சுற்றியிருக்கும் மதிலை உயரமாக்கிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போல நசிர்தின், தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்ற காட்டாயத்தில், தன்னுடைய கருத்தைக் கூற விரும்பினார். அருகே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரைப் […]


 • காலணி அளவு

  காலணி அளவு

  ஒரு முறை ஒரு மனிதன், தனக்குத் தகுந்த காலணியை வாங்கச் சென்றான். அவன் தனக்கு காலணி மிகச் சரியானதாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு காகிதத்தில் தன்னுடைய காலைப் பதித்து, அதை வரைந்து கொண்டான். அதை எல்லாப் பக்கத்திலிருந்தும் அளந்து, பற்பலக் கணக்குகளைப் போட்டு படத்தைச் சுற்றிலும் கிறுக்கினான். அவன் எழுதியிருந்த அத்தனை எண்களையும் சரி பார்த்தான். ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்தான். இறுதியாக, அவனது படத்தின் துல்லியத்தில் திருப்தி கொண்டு, நீண்ட தொலைவில் […]


 • திருடுப் போன கோடாலி

  திருடுப் போன கோடாலி

  ஒரு விறகு வெட்டி ஒரு நாள் காலை, விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான். விறகை வெட்டி கட்டுக் கட்டாகக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வந்தான். தன் பட்டறையில் பெரிய விறகுகளை சிறிதாக வெட்டிச் சந்தைக்கு விற்கச் சென்றான். மதியம் மறுபடியும் சந்தைச் சென்று மேலும் விறகுகளை விற்கச் செல்லலாம் என்று எண்ணி கோடாலியைத் தேடினான். அதிர்ச்சிக்குள்ளானான். விறகுகளை வெட்ட இருந்த ஒரு கோடாலி எங்கே சென்றது என்று பதறிப்போய் வீடு முழுக்கத் தேடினான். வீட்டைச் சுற்றிலும் தேடினான். […]


 • உகுயுர் இனக் கதைகள் (சீனா)

  உகுயுர் இனக் கதைகள் (சீனா)

  தங்கமே குறி ஒரு திருடன் ஒரு சந்தையில் இங்குமங்கும் யாரிடம் திருடலாம் என்று பார்த்துக் கொண்டே சுற்றி வந்தான்.  கூட்டம் கூட்டமாக மக்கள் இங்குமங்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள். அவனால் வியாபாரக் கூடத்திற்கு செல்லும் வழிதோறும் மக்கள் மக்கள் என்று மக்களைத் தவிர வேறெதையும் காண முடியாதிருந்தது. வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ணப் பழங்கள், பொருட்கள் அவனது கண்களைப் பறித்தன. விதவிதமான அழகு மிக்க ஆடைகளும் கம்பளங்களும் அவனை கிறங்க வைத்தன. மக்களது கவனத்தை ஈர்க்க […]