6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.

This entry is part 10 of 41 in the series 13 மே 2012

இந்தியாவில் முதன்முதலில் தானியங்கி பணப் பட்டுவாடா கருவியை அறிமுகப்படுத்திய போது, அதில் வைக்கப்படும் பணம் பாதுகாப்புடன் இருக்குமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலப்போக்கில் இருபத்தி நான்கு மணி நேர சேவை காரணமாகவும், அது தரக்கூடிய இன்னபிற வசதியின் காரணமாகவும் இன்று இந்தியா முழுவதும் எண்ணற்ற கருவிகள் மக்களுக்கு பேருதவி செய்து கொண்டிருக்கிறது. இந்தக் கருவியின் தொழில்நுட்பத்தை பல நாடுகளிலும் பலரும் பல வழிகளில் பயன்படுத்த எண்ணம் கொண்டு, புதுப்புது உபயோகங்களைப் புகுத்தி வருகின்றனர். தானியங்கி விற்பனைக் […]

துருக்கி பயணம்-1

This entry is part 8 of 41 in the series 13 மே 2012

அண்ட்டால்யா – கொன்யா -துருக்கி மார்ச்-26 [துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால் நேரடியான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இஸ்லாம் பெரும்பானமை மக்களின் மதம். கிறித்துவம், யூதம் போன்றவற்றுள் நம்பிக்கைகொண்ட மக்களும் நாட்டிலுண்டு. பல மொழிகள் பேசப்படினும் பெரும்பான்மையினரின் மொழி துருக்கி. நவீன துருக்கியின் தந்தையெனக் கருதப்படும் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12

This entry is part 4 of 41 in the series 13 மே 2012

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம். நம்முடன் இருந்து பேசுகின்றவர் தந்தை பெரியார். பாரதி போல் கவிஞன் அல்ல. குடும்பத்தில் அவர் ஓர் “தந்தை”. .(தயவு செய்து எங்கள் உணர்வுகளை அரசியல் குட்டையில் கலந்து விடாதீர்கள். இது குடும்ப விஷயம் ..வாழ்க்கையில் பெண்ணின் நிலை, குடும்ப நலன்பற்றி எழுதுகின்றேன். அது சம்பந்தமாக மற்றவர்களின் கருத்துக்களையும், சில விளைவுகளையும் பதிய முயற்சிக்கின்றேன். எனக்கு அரசியல் வர்ணம் வேண்டாம்.) […]

‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’

This entry is part 33 of 40 in the series 6 மே 2012

மலர்மன்னன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேயர்களில் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முக்கியமானவர். சென்னையில் திருவல்லிக்கேணி-திருவட்டீஸ்வரன்பேட்டையிலிருந்து அண்ணா சாலைக்குச் செல்லும் எல்லிஸ் சாலை நமக்கு நினைவுறுத்து வது இவரைத்தான் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக 1798-ல் இந்தியா வந்த எல்லிஸ், பல்வேறு பொறுப்புகளில் இருந்த பிறகு 1810-ல் சென்னை மாவட்டக் கலெக்டர் பதவியை ஏற்றார். தென்னிந்திய […]

பாரதிதாசனின் குடும்பவிளக்கு

This entry is part 22 of 40 in the series 6 மே 2012

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே (சஞ்.ப.சா. தொ.1) மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி) என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன். ஆனால் அது என்னவொ தெரியவில்லை, . பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11

This entry is part 9 of 40 in the series 6 மே 2012

  தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று     காணி நிலம் வேண்டும் –  பராசக்தி பாட்டு கலந்திடவே  – அங்கேயொரு பத்தினிப் பெண் வேணும் – பாரதியின் கவிதைக்கு ஓர் பத்தினி[ப் பெண் வேண்டுமாம். அச்சம் மடம் நாணம் இவைகளைத் தூக்கி எறியச் சொன்னவன்தான் இதையும் சொல்கின்றான் பத்தினிப் பெண்ணிற்கு நம்மிடையே ஓர் காப்பியமே இருக்கின்றது. அதைப் பார்ப்போம்.   உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் […]

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்

This entry is part 7 of 40 in the series 6 மே 2012

ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் அண்மைக் காலத்தில் ஊடகங்கள் முன் வைத்த வழியில் மட்டுமே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. அது மிகவும் எளிமையானது. தேசியக் கொடி, தேச வரைபடம், மூன்று தேசியப் பண்டிகைகள் என்னும் அளவு எளிமையானது. இதே போல் காந்தியடிகள் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் என்னும் அளவில் மட்டுமே அவரைப் பற்றிய புரிதல் இருக்கிறது.இந்தியன் என்னும் அடையாளத்தை இவ்வளவு எளிமைப் படுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. தொன்று தொட்டு இந்திய நிலப்பரப்பில் அன்னிய படையெடுப்பை ஒரு […]

தங்கம் 5- விநோதங்கள்

This entry is part 5 of 40 in the series 6 மே 2012

தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்? தோடு, வளையல், அட்டிகை, ஒட்டியாணம், மோதிரம், வங்கி, காப்பு இவையெல்லாம் தான் நாம் அறிந்தவை. ஆனால் மற்ற நாட்டவர்கள் அதை பல்வேறு விதமாக பயன்படுத்த முயல்கிறார்கள். அவை பெரும்பாலும் விளம்பரத்திற்கென்றாலும், செய்திருக்கும் பொருட்கள் விசித்திரமானவை. சென்ற ஆண்டு 2011 முடிவில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஜப்பானைச் சேர்ந்த தனாகா என்பவர், ஒரு தங்க கிறிஸ்துமஸ் மரத்தையே உருவாக்கியிருந்தார். அவர் டோக்கியோவின் முக்கிய வணிகச் சந்தையான கின்சாவில் சிறந்த நகைக்கடையை வைத்திருப்பவர். 12 […]

அக்கினி புத்திரி

This entry is part 22 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  அக்கினி புத்திரி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது.  ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது.  நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை.  மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.” டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & […]

தங்கம் 4 – நகை கண்காட்சி

This entry is part 17 of 28 in the series 29 ஏப்ரல் 2012

உலகிலேயே மிகவும் விலை கொண்ட கற்கள் வைரக் கற்கள். ஒரு வைரக் கல்லே பல கோடி பெறுமானம் கொண்டது. அப்படிப்பட்ட வைரக் கற்களும் இன்னும் உலகிலே கிடைக்கும் பல கற்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? வைரங்கள் பதித்த நகைகள், மரகதம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து என்று பல தரப்பட்ட கற்கள் கொண்ட நகைகள், அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டு விற்கப்படும் கண்காட்சி தான் ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கும் ஹாங்காங்கில் நடக்கும் நகை மற்றும் கற்கள் […]