மஹ்மூது நெய்னா . எஸ் – கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா…. ஆனா துபையில கிடையாது … பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின் மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து, சலாமலைக்கும் காக்கா.. என்று சொல்லி சந்தித்தபோது, தடாலடியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னை நிலைகுலைய வைத்தார் அசன் தம்பி…. ஏன்ப்பா ரெம்ப யோசிக்கிறா… அங்க நம்ம புள்ளைவ இருக்கிறாங்க… மீரான் இருக்கிறாரு, […]
பநியான் எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும் ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன் வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன செய்வார் ? எப்படிப் பார்த்தாலும் அவர் பூகோள வாத்தியார்தானே ? .அவர் போட்ட நாலைந்து கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான் பிரச்சினையே. அதுவும் அவர் ஓய்வு பெற்ற காலகட்டத்தில் . தன் பையன்கள் இரண்டு பேருக்கும் அடலேறு , ஆடலழகன் என்று பெயர் வைத்திருந்தார். தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பது பற்றின் வெளிப்பாடு […]
குணா (எ) குணசேகரன் இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன் ஏறி பரதவர் மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புல் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? புலவு நாறுதும், செல நின்றீமோ! பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நும்மோடு புரைவதே அன்றே; எம்மனோரில் செம்மலும் உடைத்தே தடகளம் […]
ஜோதிர்லதா கிரிஜா (நீலக்குயில், அக்டோபர் 1974 இதழில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.) மாலை ஐந்து மணி அடித்ததும் நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளாமாக நான் என் செயலர் பரந்தாமனைப் பார்த்துக் கையசைத்தேன். அந்த அசைப்பின் பொருளைப் புரிந்துகொண்டவனாக அவனும் வெளி வராந்தாவுக்குச் சென்று என்னைப் பார்க்க வந்திருந்தவர்களை மறு நாள் வந்து சந்திப்பதற்குரிய நேரத்தையும் இடத்தையும் தெரிவித்து அனுப்பி வைப்பதற்கு […]
குணா (எ) குணசேகரன் “காமம் காமம்” என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. ஊருக்கு ஒரு தேர் தான். ஒருத்திக்கு ஒருவன் தான். மாறு பட்டால்… கள்ளத்தோணி ஏறி கரை தேடி வந்த போது, அவளையே பார்த்துக் கொண்டிருந்ததுவோ, இல்லை அவளும் நோக்கி இருந்ததுவோ அவனுக்கு அவள் மேல் […]
ஸிந்துஜா சாமண்ணா இருந்த அந்தத் தெருவில் மொத்தம் இரண்டு கட்டிடங்களில்தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மற்ற கட்டிடங்கள் பலவிதமான வியாபாரிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தன. நாலு மளிகைக்கடைகள், ஒரு ரைஸ் மில், ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப், ஸ்டேஷனரி கடை, காய்கறிகள் விற்கும் அரசு ஸ்தாபன ஹாப்காம்ஸ், ஒரு நர்சரி, மங்களூர் பட்டர் நடத்தும் ஸ்நாக் பார், ஒரு டெய்லரிங் ஷாப், இரண்டு மருந்துக் கடைகள், மினி பல்பொருள் அங்காடி ஒன்று, டாக்டர் லலிதா என்று பெயர்ப் பலகை தொங்கிய விஷ்வாஸ் கிளினிக், மேலே கணினி நிலையம், கீழே ஜெராக்ஸ் கடை, ஒரு மட்டன் […]
ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1973 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) வழக்கம் போலவே லெட்சுமிக்குக் காலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்துவிட்டது. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு குளிரில் விறைத்துவிட்ட கைகால்களை இரத்தம் ஊறத் தேய்த்துவிட்டுக்கொண்டு சோம்பல் முறித்து ஒரு நீண்ட கொட்டாவியும் விட்டதன் பின் தன்னையும் அறியாமல் திண்ணைப் பக்கம் பார்வையை ஓடவிட்டாள். பழைய பாணியில் வெகு நாள்களுக்கு முன்னர் கட்டப்பெற்ற அந்தச் செங்கற்சுவர் வீட்டின் […]
ஜோதிர்லதா கிரிஜா (ஜனவரி 1976 கலைமகள்-இல் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) சச்சிதானந்தம் தாம் படுத்திருந்த சாய்வு நாற்காலியின் பின் சட்டத்தின் மீது நன்றாகக் கழுத்தைப் பதித்துத் தலையை உயர்த்திய நிலையில், மோட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதைத் தவிர வேறு சோலி ஏதும் அவருக்கு இல்லை. சமையற்கட்டில் செங்கமலம் காப்பிக் கஷாயம் இறக்கிக்கொண்டிருந்த மணம் அந்த வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. வடிகட்டியின் மேல் அவள் […]
குணா (எ) குணசேகரன் அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் மயில் கண் அன்ன மாண் முடிப்பாவை நுண் வலைப் பரதவர் மடமகள் கண் வலைப் படூஉம் கானலானே மூத்தகுடி சொல்லிக் கேட்டதில்லை காதல் இல்லையென்று, காதல் நடந்ததில்லையென்று, காதலைக் கண்டதில்லையென்று. நாம் நடந்த பாதையிலே நல்லதுவோ கெட்டதுவோ ஐம்புலனும் உணர்வதும் மெய்தானே. நேரம் ஒரு பொருட்டல்ல, […]
மொழி பெயர்ப்பு : மலையாள மொழி சிறுகதை மூலம் : வைக்கம் முகமது பஷீர் ஆங்கிலம் : மினிஸ்தி நாயர் தமிழில் :தி.இரா.மீனா “நீங்கள் கேள்விப்பட்டிருப்பது எல்லாமே முட்டாள்தனமானது .நான் எந்த மரத்தையும் பூஜிக்கவில்லை;இயற்கையையும் வழிபடுவதில்லை.ஆனால் இந்த மாமரத்தோடு எனக்குத் தனியான நெருக்கமிருக்கிறது.என் மனைவி அஸ்மாவுக்கும் கூட.விதிவிலக்கான ஒரு பெருமுயற்சியின் அடையாள வில்லைதான் இந்த மரம்.அதை நான் நுட்பமாகச் சொல்கிறேன்…” நாங்கள் அந்த மாமரத்தினடியில் உட்கார்ந்தோம்.அது மாங்கனிகளால் நிறைந்திருந்தது.சுற்றிலும் பெரிய வட்டமாக வெள்ளை மணல் பரவி […]