தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 செப்டம்பர் 2020

‘கவிதைகள்’ படைப்புகள்

பேச்சுப் பிழைகள்

சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய தாளையே கிழித்திருக்கிறது என் எழுத்தையே அமிலமாய் எரித்திருக்கிறது அவிழ்க்க வேண்டிய [Read More]

நவீன செப்பேடு

குணா கேட்டு பார்த்ததுண்டு அகழ்ந்ததையும் கேட்டதுண்டு மூதாதோர் எழுதியதை பானையின் சில்லுகளை செங்கற் செதிலுகளை தாழி கூட்டங்களை தடுமாற்ற எழுத்துகளை சிக்கி முக்கி தேடி நின்றார் பத்திரமாய் மூலம் கண்டார் அற்புதங்கள் சொல்லி நின்றார் கதைகள் பலவும் சொன்னார் அடுத்து வந்தவரோ காகிதக் குவியல்களை காணாமல் செய்திட்டார் அத்தனையும் மரமென்றார் நானெழுத தலைப்பட்டேன் பதிப்பதற்கு [Read More]

செவல்குளம் செல்வராசு கவிதைகள்

செவல்குளம் செல்வராசு 1.   நேத்து  சாமக் கொடையில்        ஊருக்கெல்லாம் குறி சொன்ன சாமியாடிப் பெரியப்பாவை காலையில் திட்டித் தீர்த்தாள் பெரியம்மா. “இருபத்தொரு நாள் எப்படித்தான் இல்லாமக் கிடந்தானோ விடிஞ்சதும் போயிட்டான் பிராந்தி கடைக்கு சாத்திரம் சொன்ன பல்லி கழனிப் பானையில விழுந்துச்சாம்” 2.   புத்தக லயிப்பிலும்                [Read More]

ஆவலாதிக் கவிதைகள்

செவல்குளம் செல்வராசு   சுயத்தால்நேர்ந்த பாதிப்புகளின்  பட்டியல் நீட்டி தேர்ந்தெடுத்த சாட்டைச் சொற்களால் விளாசித் தள்ளியதுசோதனைகளின் சஞ்சலங்களால் தூங்காமல் தவித்து சிவந்த விழிகளுடன் மறுநாளைத் துவங்கியபோது முகமன் கூறிச் சிரிக்கிறது என்ன செய்ய… 2.   அந்த நாளின் ஆவலாதிகளை மனைவியிடம்  ஒப்புவித்துக்கொண்டே [Read More]

நிரந்தரமாக …

       கொஞ்ச நேரம் நடந்த பிறகு தெரிந்தது அந்த வெளி அது யாருமற்ற சுடுமணல் பிரதேசம் தனிமையின் ஏராளமான கரங்கள் என்னைத் தழுவி மகிழ்ந்தன அங்கு பசுமைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது எப்போதாவது காற்று வரும் நான் முற்றாக உறிஞ்சப்பட்டு வீசி எறியப்பட்டேன் காலம் என்னைக் கரைத்து முடித்தது இப்போது என் சுவடென மணல்பரப்பில் பாதாச்சுவடுகள் மட்டுமே அந்த வெட்டவெளி [Read More]

கவிதை

ப.தனஞ்ஜெயன் பச்சை மொழி காற்றிலெங்கும்புறப்பட்டுக் கலைந்துசெல்கின்றனதுருவ தேசம் சென்று திரும்பிபென்குயினின்நடனத்தில்குளிர் அருந்திப் பேசுகின்றன மஞ்சள் வானம் பார்த்துரசித்த எலியிஸ் குயினென்சிஸ்ஆப்பிரிக்கத் தோட்டமாய்ஆடி நின்றுவான் விலக்கும் குடிசையில்ஏழ்மை மொழி பேசி வழிகின்றனஉலகெங்கும் நிரம்பிவழிந்தோடும் குருதிகளின்கால்வாய்கள்வறண்டு போய் திகைக்கிறது [Read More]

ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்

வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே. மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல் இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு சிறுபகுதி. ஒருமனிதனும் ஒருபெண்ணும்ஒன்றுஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்ஒன்று. நெளிவுகளின் அழகா,மறைமுகக் குறிப்புகளின் அழகா-கரும்பறவை [Read More]

குளியல்

மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள்  தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல்  காட்டுப் பூக்களின் வாசனை  திசை எங்கும் சலசலத்தோடும் ஆறு ஆம். கல்லாறு  நண்பரும் நானும் ஆதிமனிதர்கள் ஆகி  உடைகளின்றி நீரில் இறங்கினோம் கதை கவிதை திரைப்படம் என்று  பலவாறு பேசிக் கொண்டே நீராடினோம்  நேரம் போனது தெரியாமல். [Read More]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மைஎத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.அப்படியொரு நாள் வந்தால் தமது [Read More]

ஒரு சொல்

என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு வந்தது ஒரு சொல் கடலின் ஆழத்தோடு கதைபேசி மீண்டது ஒரு சொல் மேகத்துண்டாக வானவில்லோடு வந்தது ஒரு சொல் ஆவியாகி மீண்டு மழையாக இறங்கி ‘நலம்’ கேட்டது ஒரு சொல் [Read More]

 Page 2 of 265 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

    சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். [Read More]

நாம்

புஷ்பால ஜெயக்குமார் தெருவில் நடந்தவன் நட்ட [Read More]

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

             ப.தனஞ்ஜெயன்   1.கணித சமன்பாடுகளோடு [Read More]

கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்

கோ. மன்றவாணன்       கள் என்றாலே [Read More]

கண் திறப்பு

  மஞ்சுளா ஒரு மழைத் துளிக்குள் கண் [Read More]

சொன்னதும் சொல்லாததும்  – 1

சொன்னதும் சொல்லாததும் – 1

          அழகியசிங்கர்     நான் தினமும் கவிதை [Read More]

Popular Topics

Archives