புதுமனை

This entry is part 35 of 44 in the series 15 ஏப்ரல் 2012

நாய்களிரண்டு கூடி குலாவியிருந்ததன் சாட்சியாய் புதிதாய் பிரசவித்த குட்டி நான்கின் ஊழைக் கதறல் நிழலுக்கும் வாசத்திற்கும் ஒதுங்கும் ஊர்க்குருவிகள் அவ்வப்போது மலம் கழிக்க வந்து போகும் கருத்த பூனையொன்று. போவோர் வருவோரென அத்தனை பேரின் மூத்திரத் துளிகளை உள்வாங்கி செரிக்கும் தளமும் சுவரும் . சிறார்கள் ஆடியும் ஓடியும் ஒளிந்தும் சேர்த்து வைத்த சந்தோசச் சப்தங்கள் உலாவரும் நடுநிசிப் பேய்களின் கூட்ட அரங்கம். துரத்தப்பட்ட அத்தனை அகதிகளின் விலாசத்தை விழுங்கி உயரே நிற்கிறது புதுக்கட்டிடமொன்று- நாளை நான்கு […]

தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்

This entry is part 32 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேரம் போகுது கண்மணி ! நீ சிரித்து விளையாடு கிறாய் நீடித்த இன்பம் அளிக்குமா அது ? நீடிக்க இச்சைதான் காதலிக்க வேட்கை உளது ஏன் அவை விழித்து ஆத்மாவில் எழுவ தில்லை ? எப்போது வரும் வாழ்விலே கண்ணும் கண்ணும் கலந்து கவிழ்ந்திடும் ஐக்கியம் ? இனிய தீப்பொறியில் இனிக்கும் உடல் அக்கினியில் புதியதாய் நம் பிறப்பு ! கண்களின் குழி நிரம்பி […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்

This entry is part 31 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம் ++++++++++++++++++++++++++++ வாலிபனும் ஆயுட் காலமும் ++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் […]

இறந்தும் கற்பித்தாள்

This entry is part 26 of 44 in the series 15 ஏப்ரல் 2012

இருக்கும் போது பலவற்றை கற்றுக் கொடுத்த அம்மா இறந்தும் கற்பித்தாள்… மரணத்தின் வலி எப்படி இருக்கும் ?… உணர்த்திற்று அம்மாவின் மரணம். சு.ஸ்ரீதேவி

கவிதை!

This entry is part 25 of 44 in the series 15 ஏப்ரல் 2012

அரக்க கரும் நிழலொன்று தன் காலணி அணியா வருங்காலால் மணலை இழைத்துக் கொண்டு வருவது போல மரணத்தின் மாயத்திற்குள்ளிருந்து விடுபட்டு கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி வந்தான் அவன்! ஓவியனின் முடிவுறாத ஓவியத்தை மெல்லிய கண்ணாடி வழியாகப் பார்ப்பது போலிருந்தது – அவனின் முகமும் உடலும்! நெற்றியிலும் புருவங்களிலும் வேடிக்கையானதொரு கோடு பூமியதிர்வின் சாம்பலழிந்துப் போன கோட்டைகளில் பூசப்பட்டிருப்பது போலவும் கண்களுக்கு கீழும் கன்னக்குழிகளிலும் மண்ணின் நீலம் பாரித்திருந்தது. அவனது சொற்கள் தன் வலியையும் இன்பத்தையும் தாகத்தையும் பசியையும் […]

நீர் சொட்டும் கவிதை

This entry is part 24 of 44 in the series 15 ஏப்ரல் 2012

நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து நீர் மட்டுமே தாரை தாரையாகச் சொட்டிக்கொண்டிருந்தது சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட அதில் திடீரென அன்னப்பறவைகள் நீந்தத்தொடங்கின எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று நினைத்த பொழுதில் அவை என்னைப்பார்த்து அகவின அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை யாவும் கவிதைகளாகவே இருந்தன. புத்தகத்தை கையிலெடுத்து உலரச்செய்து நோக்கும்போது அதில் நான்காம் பக்கத்தில் இருந்த அன்னப்பறவைகளும் அவற்றோடிருந்த கவிதைகளும் கரைந்து போயிருந்தன. – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

காலப் பயணம்

This entry is part 20 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஆழ் கடல் நீருக்குள் பொழுதெல்லாம் முக்குளித்து ஒரேயொரு துளிநீரை தேடி எடுத்து வந்தேன்.. தரைக்கு வந்த பின்தான் புரிந்தது அது கண்ணீரென்று… ஆகாய வெளியெல்லாம் தாண்டிச் சென்று ஒரேயொரு மின்மினி(ப் பூச்சி) பிடித்து வந்தேன்…, கைசுட்ட பின்தான் புரிந்தது நட்சத்திரம் என்று… காலமற்ற கால வெளிகளைக் கடந்து சென்றேன்… “அகாலமாய்”ப் போன நேர ஆயிடைகளைக் குறித்து வைக்கிறேன்… வாழ்வில் வருடமாய்த்தோன்றிய நாட்கள் கூறட்டும் சோகமான வரலாறுகளை என்றாவது ஒருநாள் – அப்பொழுது புதிதாய் ஒரு சரித்திரம் படைக்கலாம் […]

கருணாகரன் கவிதைகள்

This entry is part 8 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஆய்க்கினை இனியும் யாரும் வரவேண்டாம் போதும் இந்த ஆய்க்கினைகள் அம்மா, ஈரத்தின் வாசனையை கடல் தர மறுத்தபோது ஆறும் குளமும் தங்களுடலில் இரத்தத்தின் வெம்மையையும் கண்ணீரின் சூட்டையும் ஏற்றபோது எங்கள் பாதைகளில் இருள் உறைந்தது அழுகுரல்களின் வேர்களில். போர் விரும்பிகள் குதிரைகளையும் ஆயுதங்களையும் போர் வீரர்களையுமே தங்களின் கனவில் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதிர் மனமுட்கள் குவிந்து எல்லாப்பாதைகளும் அடைபட்டாயிற்று அமைதியற்ற குருவி தன் இரையை எங்கே தேடுவது? குருதியோடும் மண்ணில் விளைந்து கொண்டிருக்கும் புழுக்களுக்கிடையில் வரலாற்றின் முகம் […]

இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை

This entry is part 5 of 44 in the series 15 ஏப்ரல் 2012

குழந்தைகளுக்கு விடுமுறை….! எங்கெல்லாம் எனக்கு.. உறவினர்கள்..? ———————————— குற்றம் பார்த்தேன்… சுற்றம் விலக…. முற்றத்தில் தனிமரம்..! ————————————— அழகை அழிக்கக் காத்திருந்தது.. வெறியோடு.. முதுமை..! ————————————- சிக்கல் நூல்கண்டாக சில நேரங்களில்.. சிக்கித் தவித்தது உள்ளம்..! ————————————– பேசிப் பேசியே.. அமைதியானது.. மனம்..! ——————————————– கடல் கொண்டு நிறைத்தாலும் நிறையாதது… மனம்..! ———————————————– குறைகளைக் கண்டே.. நிறைவாவது நெஞ்சம்… ————————————————– மௌனமாய்க் கதறும்.. சப்தமின்றி நொறுங்கும்… இதயம்.. ———————————— உடலுக்குள் சமாதி.. இதயம்…! ————————————— மன மாளிகையின் […]

“சமரசம் உலாவும்……..”

This entry is part 38 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இந்துக்கள் தேசத்தில் சமரசம் ஒரு கெட்ட வார்த்தை ஆகிப்போனதன் வரலாறு என்ன? நான்கு வேதங்களும் நான்கு ரகசிய மொழிகளாய் (நான் மறை(ப்பு)களாய்) இருந்தது வெளிச்சத்துக்கு வந்ததன் காரணமே இந்த வரலாறு. இப்போது அதன் உட்பொருளை உற்றுப்பார்க்கத் துவங்கிவிட்டனர். அதுவும் ஆங்கிலச்சன்னல் மூலம் தான். இந்து மதம் உண்மையில் சிந்து மதம். சிந்து என்ற தமிழ்ச்சொல்லில் பிறந்த ஆற்றுப்படுகையின் நகர்களில் இருந்து தோன்றியது தான். ந‌க‌ர் எனும் தொழில் ஆகுபெய‌ரே இங்கு ந‌க‌ர் ஆயிற்று அதுவே தேவ நாகரியும் […]