அம்மா

  (1)   அம்மா இனியில்லை.   வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப்  பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும்.   வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை.   அழுவேன் நான்.   ஆண்டுகள் பல அம்மாவிடம்…

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.

க.சோதிதாசன்.   உயிரெங்கும் இனிய நினைவுகளால் நிறைகிறாய். நிஜம் தேடி பிரபஞசம் எங்கும் அலைகிறது மனசு காற்றின் இடைவெளிகளிலும் முகம் தேடும் கண். காதல் நினைவுகளில் கானல் நிறைத்து சென்று விழுகிறது பொழுது சில நாட்களில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.     க.சோதிதாசன்.     யாழ்ப்பாணம்

விவசாயி

  வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் -------------------------------------------------------   கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் -------------------------------------------------------   கண்ணைப் போல் தென்னை வளர்த்தோம் இளநீர் தந்தது -------------------------------------------------------   குழிவிழுந்த வயக்காடு தாகம்தீர்த்துச் சிரித்தது மழையால்…

ஒவ்வொரு கல்லாய்….

"கூடங்குளம்" பெயரில் தான் குளம். குடிக்க அதில் சொட்டுத்தண்ணிர் இல்லை. அலைந்து திரிந்த காகம் அணு ஜாடியை கண்டது. கொஞ்சம் தண்ணீர் தான் அடியில். ஒவ்வொரு கல்லாய்ப் போட்டால் "ஆபத்து"இல்லாமல் தண்ணீர்குடிக்கலாம். ஆனால் இலங்கைக்காக்கைகள் தமிழ்நாட்டுக்காக்கைகள் டெல்லி சாணக்கிய காக்கைகள் சாணி…

கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது. அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும்…

ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

ருத்ரா இந்த நாட்டின் முதுகெலும்பு நீங்கள் டிசைன் செய்தது. இளைஞர்களின் மூளை நீங்கள் பதியம் இட்டது. நீங்க‌ள் அக‌ர‌ முத‌ல ஒலித்துக்காட்டிய‌பின் எங்க‌ள் அறிவு நீள‌மாயும் அக‌ல‌மாயும் ஆழ‌மாயும் பாய்ந்து சென்ற‌து. உங்க‌ள் கையில் சாக்பீசும் பிர‌ம்பும் இருந்தாலும் கூட அதில்…

காலம்….!

ஜெயஸ்ரீ ஷங்கர். வாழ்க்கையை உழும்... காலம்..! ------------------------ தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! ------------------------- பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! --------------------------- இன்று...! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! ----------------------------- பூமி கடந்து சென்ற பாதை காலம். --------------------------------- கலி…

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி. மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பாதையில் நீ வந்தாய் என்று நான் அறியேன், நீ வந்ததையும் நான் காண வில்லை பயணியே !…

இந்த நேரத்தில்——

க.சோதிதாசன்  இந்த நேரத்தில் இறுதி முத்தத்தை பகிர்ந்து விடை பெறுகிறது ஓர் காதல் இன்னோரிடத்தில் கண்களின் வழியே உயிருள் நுழைகிறது விண்மீன்களின் ஒளியில் இரவு பாடலை ரசிக்கிறது ஓர் உயிரி சூரிய தகிப்பால் வியர்வை நதியால் வெப்பம் குறைக்கும் ஓர் மானிடம்   இந்த நேரம் அகால வேளைகாரணமின்றி கைதுசெய்யப்படும் மகனுக்காக கதறுகிறாள் ஒருபெண் விடுதலை பாடலை பாடி உயிர் விதைக்கிறான் ஓர் போராளி. சிலர் கனவுகளில் இன்பம் துய்கிறார்கள் பலர் மரணக்கனவுகள் கண்டுவிழித்து வியர்வையில் விழுகிறார்கள் ஏதோ ஓர்முலையில் இனிய சங்கீதம் ஒலிக்கிறது இன்னுமோரிடத்தில் பேரழிவு குண்டொன்று விழுந்து கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் யாரோ சிலர்…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப்…