முகங்கள்

This entry is part 16 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஒவ்வொருநாளும் பல முகங்களை கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி அலைகிறேன். எந்த முகம் என்முகம் என்பது யாருக்கும் தெரியாமல் சமமாக பாவித்து வருகிறேன் ஒருவருக்கு தெரிந்த முகம் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு கொடுக்காமல் கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன் சில துளி வினாடிகளில் நல்லவன் கெட்டவன் வஞ்சகன் சாது அப்பாவி வெகுளி என ஒவ்வொருமுகங்களுக்கும் பெயர் வைத்து தினமும் அதற்கு உணவூட்டி வளர்த்து வருகிறேன் ஒரு […]

மனனம்

This entry is part 15 of 40 in the series 1 ஏப்ரல் 2012

எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில் உள்ளுக்குள் கரைகிறது இனம் புரியாதது சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து வருத்துகிறது நினைவு படாத தழும்புகளில் வலி நிரப்பி பாடாய் படுகிறது மனது சொல்வதற்கு என்ன இருக்கிறது கழுவ முடியாத கறைகள் பற்றி எனக்கென்று வாய்கும் அது நிச்சயமான ஒரு நிகழ்வு தான் கனிந்து கீழ் வீழ்ந்தாலும் முளைப்பதில்லை மனித விதை அதனால் திளைத்து மகிழ்வதில்லை மனனித்த வாழ்க்கை. – சு.மு.அகமது.

ஒரு மலர் உதிர்ந்த கதை

This entry is part 11 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பருவ வயது வந்ததும் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி ஆக்கினீர்கள். வரதட்சனை கேட்க்காத வரன்தான் வேண்டுமென்று வந்த வரன்களை விரட்டி விட்டீர்கள். விவாக வயது கடந்துபோனது. தோழியின் இடுப்பில் குழந்தை கனத்துப்போகுது என் இதயம். பக்கத்து வீட்டு பையனை பார்த்தாலேபோதும் வேசி என்று பேசுகின்றீர்கள். தனிமரமாய் தமக்கை நானிருக்க தம்பி திருமணத்திற்கு துடி துடிக்கின்றீர்கள் மகாலட்சுமி வருவதாய் மகிழ்ந்து போகின்றீர்கள் தம்பி திருமணத்திற்கு தடையாக இருக்கிறேன் என்று அரளிவிதையை அரைத்து வைத்து “செத்துப்போ” […]

பதின்பருவம் உறைந்த இடம்

This entry is part 7 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் … உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், ஆத்தாவின் சுருக்குப்பை, ஜோடியோ திருகோ தொலைந்த காதணிகள், அருந்த பிளாஸ்டிக் மாலை கோர்க்கும் நரம்பு , கல்யாணமாகிப்போய்விட்ட நிர்மலா தந்துசென்ற கமல் படம் …. எதுவுமே காணாவிடினும் காண்பதுபோல் கண்டுகொள்ளமுடியும் இரண்டாம் தட்டு இருக்குமானால்… உமாமோகன்

தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து

This entry is part 40 of 42 in the series 25 மார்ச் 2012

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவும் பகலும் காத்துள்ளேன் எவளோ ஒருத்திக் காக வருவாள் எனும் நம்பிக்கை யோடு. வழிமேல் விழி வைத்து, ஏங்கித் தவித்துத் தாகம் மிகுந்து என் செவிகளைத் திறந்து. எச்சரிக் கையோ டுள்ளேன் ! அமைதி யின்றி எதிர்பார்க்கும் மனம் அடிக்கடி அவள் முகத் தெரிசனத் துக்கு. பூந்தோட் டத்தில் அழைக்கும் புள்ளின அரவமும் துள்ள வைக்கும் என்னை ! வருவ […]

“ஊசியிலைக்காடுக‌ள்”

This entry is part 38 of 42 in the series 25 மார்ச் 2012

இற‌க்கை முளைத்த‌ குண்டூசிக‌ள் எனும் கொசுக்க‌ளின் ஊசிக‌ள் அல்ல‌ இவை. ந‌ம‌க்கு நாமே ம‌ருத்துவ‌ம் செய்து கொள்ள‌ போட்டுக்கொள்ளும் ஊசிக‌ளே இந்த‌க்காட்டின் பூக்க‌ள். சங்கரன் கோயில் ================== தபசுக் காட்சி சப்பரங்கள் திரும்பிவிட்டன. சரித்திரங்கள் திரும்பவில்லை. அம்மா ====== சொல்லி அடித்து கில்லி ஆடினாலும் வில்லி இல்லை என்று சொல்லி விட்டார்கள். அலாவுதீன் பூதம் பெட்டியில் இருக்கிறது. கலைஞர் ======== சங்கத்தமிழ் எட்டுத்தொகை யெல்லாம் துட்டுத்தொகையாய் தொண்டர்களுக்கு தெரிகிறது. “கணவாய்”வரலாறுகள் கவைக்கு உதவாது. அதனால் வந்த‌ “ச‌ங்க‌ட‌ங்”கோயில் […]

என்னவென்று அழைப்பது ?

This entry is part 35 of 42 in the series 25 மார்ச் 2012

எழுதியவன் தமது குறைகள் எதையும் சொல்ல விழையாத நாட்குறிப்பு போல உன் பேச்சு இன்று செயற்கையாக இருக்கிறது பலநாட்கள் தூசி படிந்து திடீரெனப்பெய்த மழையில் கழுவிவிடப்பட்ட இலைகள் போல உன் பேச்சு இன்று இயற்கையாக இருக்கிறது. நாட்குறிப்பின் பக்கங்கள் போலிருக்கும் இலைகளை அந்த மரம் உதிர்த்து விடும் பொழுது உன்னிலையை என்னவென்று அழைப்பது ? – சின்னப்பய

பேனா பேசிடும்…

This entry is part 34 of 42 in the series 25 மார்ச் 2012

காற்றில் இடைவெளிகள் தேடி அங்கே ஓரிடம் கண்டுபிடிப்போம் அணுக்களாய் நாமும் மாறி அங்கு சென்று வாழ்ந்திடுவோம்… ஆறு குளங்களும் வேண்டாம் ஆறு சுவைகளும் வேண்டாம் ஆறாம் விரலொன்றே போதும் ஆறாக் காயங்கள் ஆறும்… ஆறு நதிகளும் மற்றும் ஓடை வயல்களும் வற்றும் ஆறுதலாய் நாமிருக்க ஆறாம் அறிவொன்றே போதும்… ஆண்டுகள் நூறு செல்லும் தூரத்தை அடைவோம் நொடி ஒன்றில் சென்று.. ஆரும் காணாத தேசத்தை ஆள்வோம் ஒன்றாக இணைந்து… “காலவெளிகளை”க் கடந்து செல்லுவோம் யுகங்கள் பலவற்றைக் கண்டு […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்

This entry is part 30 of 42 in the series 25 மார்ச் 2012

  ++++++++++++++++++++ எல்லாம் அழிபவை ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…

This entry is part 26 of 42 in the series 25 மார்ச் 2012

தன்னில் பயணித்த நீரோடைகளின் தடயங்களோடிருக்கும் மணல்பரப்பில் திரண்டிருந்த ஆடுகளோடு உரையாடினார் சிலுவையில் அறையப்பட வேண்டியவன்தான் பாவிகளை ரட்சித்து பாவமூட்டையின் சுமைதாங்கி நின்றேன் என் வழித்தடங்கள் புனிதமாக்கப்பட தேர்ந்த மேய்ப்பாளனானேன் அப்பங்கள்களை சகலருக்கும் பகிர்ந்து தொடுதலில் சுகப்படுத்தும் சிகிச்சை நிபுணன்தான் மனக்கசப்பும் வருத்தமுமின்றியே சுமக்கிறேன் எனது ஜனன நாளில் அவதரித்து என்பொருட்டு பலியான சிசுக்களுக்காகவென்றார் மேலிருந்து உதிரத்தொடங்கின கொன்றைப் பூக்கள்…