தேவ‌னும் சாத்தானும்

This entry is part 23 of 42 in the series 25 மார்ச் 2012

குருதி குடித்து பசி போக்கும் மானிட மந்தைக்கு போதனை செய்ய மனமிறங்கி தூதனான் தேவன். மந்தைக்கு ஏற்ற முகமூடி பொருத்தி சாயத் தொட்டியில் மூழ்கி எழுந்து நிர்வாண‌ம் தொலைத்த‌வ‌னென வீதியில் உலா வ‌ந்தான். சிலவீதியில் இராமனாக அடுத்தவீதியில் முல்லாவாக மறுவீதியில் க‌ர்த்த‌னாக‌ இந்த‌வீதியில் புத்த‌னாக‌- போதித்த‌ வார்த்தைக‌ளை சாய‌ச்சாத்தான் தின்று விழுங்குய‌து. சாய‌த்தைத் துடைத்தெறிந்து மலரொன்றை கையிலேந்தி சிறுமி வேடம் தறித்து தூத‌னாகப் புறப்பட்டான் சாத்தானின் கோட்டைக்கு. -சோமா

ஆணவம்

This entry is part 22 of 42 in the series 25 மார்ச் 2012

‘மின்னலுக்கும் கால்கள் பின்னும் என் வேகம் பார்த்து வேகத்தில் என்னை வெல்பவன் எவன்?’ சூளுரைத்தார் முயலார் சிரம் தாழ்த்தின சில்லரை மிருகங்கள் சிரம் உயர்த்திச் சொன்னார் ஆமையார் ‘நான் வெல்வேன்’ ‘கவிழ்த்துப் போட்ட கொட்டாங்கச்சியே போட்டி எறும்போடல்ல என்னோடு.’ ‘தெரியும் நாளையே நடக்கட்டும் போட்டி ஆனால் ஆனால் போட்டி நிலத்திலல்ல நீரில்’ ‘ஆ! நீரிலா?’ ‘ஆம் நிலமென்று நீர் சொல்லவில்லை நீர் என்று நான் சொல்கிறேன்’ கரவொலித்தன மிருகங்கள் ஆமோதித்தனர் ஆமையாரை ‘தயாராகு. இல்லையேல் தவிடாவாய்.’ மொத்த […]

வெறும் தோற்ற மயக்கங்களோ?

This entry is part 15 of 42 in the series 25 மார்ச் 2012

அதற்கப்புறம் ஆறேழு மாதங்களாகியும் அம்மாவுக்கு அப்பாவின் மறைவு குறித்து தீர்மானமாக ஏதும் புரிந்துவிடவில்லை அன்றாட வாழ்க்கையில் அதிகப்படியான உரையாடல்களை அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டுதானிருந்தாள் அப்பா வாழ்ந்த வீட்டின் அத்தனை இடங்களிலும் நின்றதுவும் நடந்ததுவும் மொத்த நேரமும் கூடவே இருந்ததுவும் சில்லறைக் காரியங்களைச் செய்து தந்ததுவும் மாடியில் தண்ணீர்தொட்டி நிரம்பி அருவியாய் கொட்டும்போதெல்லாம் மோட்டாரை நிறுத்தச்சொல்வதும் காய்கறிக் கடையில் மறக்காமல் புதினா மல்லியோடு கறிவேப்பிலைக் கொத்தும் கிள்ளிப்போட்டு வாங்கிவரச்சொல்வதும் அடமான நகைக்கு வங்கியில் கெடு முடிவடையப்போவதை நினைவுறுத்துவதும் […]

என் சுவாசத்தில் என்னை வரைந்து

This entry is part 7 of 42 in the series 25 மார்ச் 2012

என் அறையில் நான். நாற்காலி அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். மேஜை அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். நிலைக் கண்ணாடி தனக்குள் தன் சித்திரத்தை வரைந்திருக்கும். வெளிச்சித்திரங்களை உள்ளே கூட்டி வந்திருக்கும் ஆகாயம். என் சித்திரத்தையும் வரைய ஆரம்பித்தேன். மாறிக் கொண்டேயிருக்கும் என்னை எப்படி வரைவது? மேகங்களை மைக்குப்பியில் ஊற்றிக் கொள்ளமுடியுமா? அறைக்குள்ளிருக்கும் ஆகாயத்தை மைக்குப்பியில் கவிழ்த்தேன். என் சுவாசத்தில் மறுபடியும் மறுபடியும் என்னை வரைந்து கொண்டேயிருப்பேன். எப்போது முடியும்? ”முடியும் போது” முடியும். ’முடியும் போது’ யார் உயிர் […]

நவீன புத்தன்

This entry is part 34 of 36 in the series 18 மார்ச் 2012

ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று குவித்த கர்வத்தை குடையாய்க் கொண்ட இரதமொன்றை பூட்டி நான்கு மாடவீதியில் உலா வந்தேன். தெருவின் முனையில் இடைம‌றித்த‌ ஒருவ‌ன் த‌ன்னை புத்த‌னென‌ சுய‌ அறிமுக‌ம் செய்து கொண்டு இர‌தத்தில் ஏறிக்கொண்டான். யுத்த‌ க‌ள‌த்தின் மொத்த‌ச் செந்நீர் நாற்ற‌மும் என் உட‌லில் அப்பியிருப்ப‌தாய்ச் சொல்லி அவ‌ன் வெண் ஆடை துறந்து என் மேனியில் ப‌டிந்திருந்த‌ க‌றையைத் துடைத்து தன‌தாக்கினான். ஒரு சேவ‌க‌னின் செய‌லெனக்‌ க‌ருதி அமைதி காத்தேன். அன்பு ஆசையுறாமை ஜீவ‌காருண்ய‌மென‌ ஒரு நீண்ட‌ […]

அன்பளிப்பு

This entry is part 33 of 36 in the series 18 மார்ச் 2012

அந்தக் கவிஞனின் உறுப் பெல்லாம் யாப்பு நரம்பெல்லாம் மரபு அசையும் சீரும் அடி தொழும் துடிக்கும் அவன் எழுத்தில் அந்த வெல்லக் கவிஞனுக்கு பிள்ளைத் தமிழ் எழுத கொள்ளை ஆசை தமிழையே தண்ணீராய்ப் பருகும் தன் தலைவன் மீதே பிள்ளைத் தமிழ் பாடினான் தன் பொன்விழாவில் தந்தான் ஐநூறு பேரை அழைத்தான் மூந்நூறு பேரே வந்தனர் நூலை வாங்கியோர் நூறு பேர் நூலுக்குத் தந்த சில காகித உரைகளில் காசே இல்லை இடுக்கண் களைபவனே உடுக்கை பறிப்பதா? […]

சாதிகள் வேணுமடி பாப்பா

This entry is part 22 of 36 in the series 18 மார்ச் 2012

“எல ஒரு சாமிய கும்பிட்டா கும்பிட்ட மாரியா இருக்கும்?….இப்டி பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்.” “யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ பாக்காம‌ என‌த்தான் ச‌ன‌த்தான்னு குறி பாத்து த‌ஸ்தாவேஜி போடுதாம்லா அதப்பாருலெ” “அதுக்கு நாம‌ என்னெழ‌வ்லே செய்ய‌து. க‌வ‌ர்மெண்டே குத்ர‌ ப‌ச்ச‌டே இது. எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ அப்டி எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ இப்டி எலே நாளக்கி ஓட்டு வேணும்லாலே துட்டு எடுக்க‌ணும்னா ஓட்டு வேணும்லே ஓட்டு வேணும்னா சாதி வேணும்லே.” “அவ்வொ வ‌ந்தாவ‌ இவ்வோ வ‌ந்தாவ‌ எல‌ […]

மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:

This entry is part 19 of 36 in the series 18 மார்ச் 2012

மணம் கரைந்து…. உலர்ந்து உதிர்ந்தது … செடியில்…பறிக்காத மல்லிகை..! —————————————— சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்.. மணத்தாலும்…விதவை தானே… மல்லிகை…! —————————————– இரும்பென…. கருவண்டு.. காந்தமாக… மகரந்தம்…. பாவம்….தாமரை…! ——————————————— சேற்றில் நான்…! வேலியாய்..நீ ..! நான் மட்டும் பூஜைக்கு..! தாமரை..! ———————————————— பூக்காட்டில் பாம்பு…! நெருங்க மறுக்கும் அவள்… கருநாக… ஜடையில் என் நர்த்தனம்..! தாழம்பூ..! ——————————————— ஈராறு ஆண்டுகளாய்… காத்திருந்தது… தென்றல்… ! முதல் குறிஞ்சியின்… வாசம் பிடித்து தூது சொல்ல..! ———————————————— மழை கரைக்காமல் குடை கொண்டு […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை

This entry is part 18 of 36 in the series 18 மார்ச் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?

This entry is part 17 of 36 in the series 18 மார்ச் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்னை நினைத்திருப் பாயா இன்னும் நீ ? உன்னை விட்டு வெகுதூரம் ஓடிப் போகினும் என்னை நினைப் பாயா ? என் பழைய காதல் சிலந்தி வலையால் மறைந்து புதிய காதல் படர்ந்தாலும் நீ நினைப் பாயா ? நெருங்கி நான் நிழல் போலிருந்த சமயம் இருப்பதோ இல்லாததோ உனக்குத் தெரியாத போதினும் நீ நினைப் பாயா ? நினைத் […]