வம்பளிப்புகள்

This entry is part 30 of 39 in the series 18 டிசம்பர் 2011

-தினேசுவரி, மலேசியா ‘அழிப்பு’க்கும் ‘அளிப்பு’க்கும் இடைவெளி அதிகம் இருப்பினும்.. அளித்து அழிப்பதற்கு இங்கு அழைப்பவர்களே அதிகம்…..   அன்பளிப்புகளில் மூழ்கிப்போக எப்படியோ கண்டுப்பிடித்து விடுகின்றனர் சில ‘வம்பளிப்புகளை’… வம்பாகி போகும் போது தெளிகிறது அளிப்புகளின் இறுதி வாசல் அழிப்பே என்று………   இருந்தும் ‘அளிப்பு’க்கும் ‘அழிப்பு’க்கும் இடைவெளி என்பது அதிகம் தான்…

வேறு ஒரு தளத்தில்…

This entry is part 29 of 39 in the series 18 டிசம்பர் 2011

– பா.சத்தியமோகன் வானில் பறக்கும் பறவையிடம் இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன் அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது. தவழும் மழலையிடம் கூர் கத்தி ஒன்றை நீட்டினேன் மேலும் கலகலப்பானது. அப்போதுதான் பனியில் துளிர்த்த மலர்க்கொத்து ஒன்றிடம் என் துக்கக் கம்பியை விவரித்தேன் அதுவோ மலர்ச்சியை நிறுத்தவேயில்லை. எனது குளியலால் சிதறப்போகும் எறும்புகளிடம் அச்சத்தை விளக்கினேன் அவையோ சுறுசுறுப்புடன் உள்ளன நாளைய உலகம் நீருக்குத் தவிக்கும் எனும் மிரட்டலை ஓடிச்சென்று தாமரை ததும்பும் குளத்திடம் சொன்னால் அதன் […]

சந்தனப் பூ…..

This entry is part 28 of 39 in the series 18 டிசம்பர் 2011

பஞ்சு மனம் கொண்டவர்… வானத்தைச் சுருக்கி இதயத்துள் அடக்கி . ரணமனங்கள் கண்டெடுத்து மருந்திடும் மகத்துவம்..! புனிதம்  குணத்திலும் புண்ணியம்  மனதுள்ளும் ஒற்றைத் திரியாய் …நின்று.. ஏற்றும்  ஒளிச்சங்கிலிகள்..! புவியெங்கும் ஒளி  சேர்த்து.. இருளை துரத்திய தாயே..! கோடிக்கண்கள் தேடிடும்… யாவர் கால்களும் நாடிடும்.. வெள்ளை ரோஜா உம்மைப் போற்றித் துதிகள் பேசிடும்… என்றோ அரும்பிய இயக்கம் இன்றும் வாழும் அதிசயம்..! அன்புக் கரங்கள் ஏந்தி… கருணையால் துயர்துடைத்து… கனிவாய்  தெம்பளித்து.. தொட.. விலக்கியவரைத். தொட்டணைத்தீர்..! தேசியக் […]

மார்கழிப் பணி(பனி)

This entry is part 26 of 39 in the series 18 டிசம்பர் 2011

அஜய் குமார் கோஷ் அறந்தாங்கி பெண்பூக்கள் மாக்கோலமிட வருகிறது மார்கழி சிரிப்புக்களுடன் தெரு நிறைகிறது வருகிறது மார்கழி மெல்லிய பனியில் மனது நனைகிறது வருகிறது மார்கழி மரபின் ஈரம் காய்ந்து போய்விடவில்லை வருகிறது மார்கழி

என்னின் இரண்டாமவன்

This entry is part 24 of 39 in the series 18 டிசம்பர் 2011

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சில் வண்டுகள் ரீங்காரமிடும் ஓர் இரவும் பகலுமற்ற இடைத்தருணத்தில் அவன் வருகையை தவிர்க்கவியல்வதில்லை மெல்லிய புகை தன் சூழ மிதக் குளிரினூடே ஏதோ ஒன்றைப் பகர நினைப்பதாய் அமர்வான் என்னருகாய்! மிக வலியதாய் பாதித்தலுக்குட்பட்ட அந்நாளுக்கான சில அவசியச் செய்திகளை அசைபோட்டுக் கிடப்பான் ஒன்றுமற்றுப் போன விஷயமொன்றிற்காய் யோசனையிட மெனக்கெடுவதாய் நடிப்பான் எப்படி இருந்திருக்கக் கூடாதென்றும் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டுமென்றும் அறிவொழுகும் தன் தலை வழியாய் புத்தி சொல்லிக் கிடப்பான் சில கணங்கள் வரை […]

மீன் குழம்பு

This entry is part 21 of 39 in the series 18 டிசம்பர் 2011

மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும், மீன் குழம்பை புளிப்பா காரசாரமா சுள்ளுன்னு வைக்கணும் என்பார்கள். கர்ப்பிணி பெண்கள், ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள், பியர் குடித்தவர்கள், என எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும், மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது, எவ்வளவு வேண்டுமானாலும், எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம். அதில் இது ஒரு ஈசியான முறை. மீனை கடைசியில் தான் போடணும் இல்லை என்றால் குழைந்து விடும். தேங்காய் பவுடர் இல்லாதவர்கள், தேங்காய் பத்தை நான்கு […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)

This entry is part 20 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆணாக வாழ்வதி லிருந்து ஆண்மை உட்கரு தானாகத் தோன்றுவ தில்லை ! ஆணுக்கு ஆதரவு அளிக்கும் தோழ மையி லிருந்தும் சேருவ தில்லை ! “வெளுத்துப் போய்த் தெரிகிறாய் ! பள்ளிக்குச் செல்லாதே” என்று பாட்டி போதிப்பாள் ! ஒட்டம் பிடி நீ அதைக் கேட்ட வுடனே ! உன் தந்தை கொடுக்கும் உதை அதை விட உன்னத மானது ! உடம்பில் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -4)

This entry is part 19 of 39 in the series 18 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் ஆத்மா வாழும் வாழ்க்கைக்கு “இரவு வழிகாட்டி” போன்றது. எத்தனை விரைவாக அது பயணம் செய்கிறதோ அத்தனை அருகாமைல் உள்ளது காலைப் புலர்ச்சி !” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் உனது தகுதியை நீயே மதிப்பிடு உனக்கு மரணம் இல்லை ! பகுத்தாய்வு செய்வாய் உனது ஒளிக் கதிரை ! சத்தியத்தின் சமிக்கை அது ! தகுந்த […]

தேனும் திணை மாவும்

This entry is part 15 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஆடு மேய்க்கிற ஆத்தா போயி அர நாழி ஆயிருச்சு சில்லுவண்டும் கூட்டுசேந்து சத்தம் போடக் கெளம்பிருச்சி கோழிகளும் பத்திரமா தன் கொடப்புக்குள்ள பதுங்கிருச்சி செனை மாட்டத் தேடி வந்த சின்னய்யாவும் போய்த்தாரு மோட்டிலேறிப் பாக்கையில கண்ணுக் கெட்டுன தொலைவுவர மனுச நடமாட்டம்னு எதுவுமில்ல கூத்துப் பாக்க கூட்டம் ஒன்னு பந்தம் கொளுத்தி நவந்து போவுது சுள்ளி பொறக்கி சுடவச்ச கஞ்சிப் பான காஞ்சுக் கெடக்கு கறிக்கி கொண்டாரப் போன அத்தான் பொழுதாயும் குடுசை திரும்பல-காளியாத்தா! எங்கத்தானுக் கொன்னும் […]

முகமற்றவனின் பேச்சொலி

This entry is part 13 of 39 in the series 18 டிசம்பர் 2011

பாவனைகளும் தோரணைகளும் எங்கோ கண்டதின் சாயலில் வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும் நம் நிழல் போல் சுவர்களை மீறி வரும் ஒலி அறையின் வெக்கையாய் அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள் உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல் ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி கனல் நீரில் தத்தளிக்கும் துடுப்பற்ற பொத்தல் படகாய் என் அன்னியோன்யத்தில் உலவும் எனக்கே அல்லாத உறவின் முகம் எப்போதுமே கதைத்திருக்கும் தான் கரைந்ததும் கனத்ததுமாய் கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி செவிகளில் பதியும் […]