எமதுலகில் சூரியனும் இல்லை

This entry is part 32 of 39 in the series 4 டிசம்பர் 2011

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும்   அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில் பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால் இரு பாதங்களையும் வைத்தபடி மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி   தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின் உரிமை எமக்கில்லை […]

வலையில்லை உனக்கு !

This entry is part 30 of 39 in the series 4 டிசம்பர் 2011

சி. ஜெயபாரதன், கனடா பெண்ணே நீ கண்ணுக்குத் தெரியாத கம்பிமேல் நடக்கிறாய் சர்க்கஸ் உலகில் அம்மானை ஆடிக் கொண்டு ! விழுவாயோ ? அழுவாயோ ? விழுந்து எழுவாயோ ? விழாமல் கடப்பாயோ ? அடியில் வலையில்லை பிடித்துக் கொள்ள !

“ சில்லறைகள் ”

This entry is part 29 of 39 in the series 4 டிசம்பர் 2011

– தினேசுவரி மலேசியா   பழகிப்போன பழைய முகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒப்பனைச் செய்து கொள்வது கண்ணாடியை உள்வாங்கி…   முகமூடிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளன… ஒப்பனைகளே அக்குறையை நித்தம் நித்தம் நிவர்த்தி செய்வதால்….   இங்கு கண்களால் பேசி சிரிப்பால் கொலை செய்து மௌனத்தால் மட்டுமே கதறமுடிகிறது சிலரால்….   வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்துப் பார்க்க சிலருக்கு குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரம்…   கொப்பளித்து துப்பிவிடுவதில் இங்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல… துப்பி கொப்பளிப்பதிலும் கூட… […]

நனைந்த பூனைக்குட்டி

This entry is part 26 of 39 in the series 4 டிசம்பர் 2011

சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி   ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு தெருவில் கூடின நாய்கள்   ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு ’உர்’ரென்றது சிலிர்ந்து நின்றதைப்பார்த்து   பூனைக்குட்டி சிலிர்ப்பை விடுத்து ஒடுங்கிய விதத்தை ஆக்ரோஷம் விடுத்து நோக்கின ’உர்’ரானவை   நான் கடக்கையில் லாவகமாக பூனைக்குட்டியை கையிலெடுத்து பூட்டிய கேட்டினுள் விட கூம்பு போல் உடலை உயர்த்தி ஓடிச்சென்று கூரையில் தங்கியது   திரும்புகையில் கால்விரிப்பில் அனந்த சயனத்தில் பூனைக்குட்டியும் […]

வாழ்வியலின் கவன சிதறல்

This entry is part 25 of 39 in the series 4 டிசம்பர் 2011

விதைத்து விட்டிருக்கும்  வாழ்வியலின்  கவன சிதறல்  ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது .   மூன்றாம் வயதின்  நினைவின் மீது  இக்கணம் அமர்ந்திருக்கிறேன் .   அப்பா மளிகை கடை  கொண்டிருந்த காலம்  தினமும் முத்தங்களும்  ஐந்து காசும் ,பத்து காசும்  கிடைத்திருந்தது உணர்த்தி செல்லும்   நினைவுகளும்  அறிவதற்கில்லை  நாங்கள் பெற்றிருந்த  அகமகிழ்வை.   பின் காலத்தின்  பயணம் தொடங்கியது  அனைத்தும் நின்றது . வேறு வகையின் பயணம்  இனிதே தொடங்கியது .   குத்தகை நிலமொன்று  இருந்த காலம்  […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)

This entry is part 21 of 39 in the series 4 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கிறித்துவ ஆலயத்தில் தொழுவோன் ஆயினும் சரி, மண்டியிட்டு இஸ்லாமிய மசூதியில் வழிபடுவோன் ஆயினும் சரி யாராக நீ இருப்பினும் உன்னை நான் நேசிக்கிறேன் என் சகோதரனே ! நீயும் நானும் ஒரே நம்பிக்கையில் உதித்த பிள்ளைகள்தான் ! மதங்களின் வெவ்வேறு பாதைகளில் இருப்பவை ஓர் உன்னத அதிபனின் அன்புக் கரத்தில் உள்ள ஒரே மாதிரி விரல்கள்தான் ! அவை நமக்கெல்லாம் பூரண ஆன்மாவாக […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)

This entry is part 20 of 39 in the series 4 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு நிர்வாண மனிதன் ஆற்று நீரிலே குதித்தான் வண்டுகள் தலைக்கு மேல் சுற்றி ரீங்காரம் செய்யும் போது ! நதியின் தூய நீரோட்டம் தான் கடவுளை நினைக்க வைப்பது ! இறைவன் தவிர வேறெந்த மெய்ப்பாடும் இல்லை இவ்வுலகில் ! இறைவன் ஒருவனே ! மனிதனின் காம இச்சையை நினைவூட்டும், தலையை வலம்வரும் வண்டுகள் ! மனிதனுக்கு வனிதை இவளா […]

பொருத்தியும் பொருத்தாமலும்

This entry is part 18 of 39 in the series 4 டிசம்பர் 2011

விளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா! சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு படிப்பு பணி தொழிலென எதையும் பதியனிடமுடியாமல் தவிக்கும் அப்பா! இல்லற வெம்மையில் வாசமிழந்த மலரில் நெருப்புத்துண்டங்களை தூண்டில்முள்ளாய் வீசும் குறைந்த வயதுடைய சகஊழியனின் சல்லாபமோகத்தில் வெதும்பும் தோழி! வரும் மாதவாடகை கரண்ட்பில் அக்கம்பக்கம் புரட்டிய கைமாத்துக்கு கை பிசையும் வாழ்ந்துகெட்டோர் வாரிசான மத்திம வயதையெட்டும் தோழன்! ஆயிரம் ரூபா முதியோர் பென்சனில் ஆறுக்கு எட்டு […]

இரண்டு வகை வெளவால்கள்

This entry is part 17 of 39 in the series 4 டிசம்பர் 2011

அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது “மேசை மேலே வா எழும்பு ஜன்னலைப் பார் ஆகாயம் தெரியும் வெளிச்சம் தேடு” என்றெல்லாம் நினைக்கத் தான் முடிகிறது சொல்ல முடிவதில்லை மன வெளவாலிடம். *****

கனவுகளின் பாதைகள்

This entry is part 15 of 39 in the series 4 டிசம்பர் 2011

மிதமிஞ்சி உண்டுவிட்டு அடங்காத பசியில் தன்னையும் சேர்த்தே உண்டுவிடுகிறது அந்தக் கரிய துளை… உண்ட மயக்கத்தில் கொண்ட உறக்கத்தில் காணும் கனவுகளிலெல்லாம் முக்காலமும் உணர்கிறது அது… அக்கனவுகளுக்குள் பாதையிட‌ காத்திருக்கிறது சிலிக்கான் சமூகம்…