Articles Posted in the " கவிதைகள் " Category

 • மூட முடியாத ஜன்னல்

  மூட முடியாத ஜன்னல்

  எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின் அடையும் அவை காணோம். அறை ஜன்னல் திறந்து பார்க்கலாம். ஆனால், எப்படி அறை ஜன்னல் மறைத்துப் பொழியும் நீர் ஜன்னலைத் திறப்பது? மழை ஓய்ந்தால் நீர் ஜன்னல் திறக்கலாம். மழை ஓயத் திறக்க நீர் ஜன்னல் காணோம். எப்போதும் திறக்காத என் அறை ஜன்னலை இப்போது திறந்து காத்திருப்பேன்- புறாக்களுக்காக. திரும்பி வந்த […]


 • நான்கு கவிதைகள்

  நான்கு கவிதைகள்

      பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும்  ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம்.   விமர்சகன் அந்தக் கண்ணாடியின் முன்நின்றவர்கள் தங்களைப் பார்த்து விட்டு ரசம் போய்விட்டதென்றார்கள். ரசமெல்லாம் கச்சிதமாகத்தான் இருந்தது. அவர்கள் காணவிரும்பிய தோற்றத்தைத்தான் அது காண்பிக்கவில்லை. (நி)தரிசனம் ஜில்லென்ற புல்வெளியில் காலை அழுத்தித் தேய்த்து நடந்தான். ‘ஆஹா, என்ன சுகம்’ […]


 • கவிதையும் ரசனையும் – 9

  அழகியசிங்கர்             இந்தப் பகுதியில் இப்போது எழுதப் போவது பேயோன் கவிதைகள் பற்றி.  ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற புத்தகம் 2016ல் வெளிவந்துள்ளது.  அதில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.             அதில் ஒரு வேடிக்கையான கவிதையைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.             நம் முன்னாள் வாழ்ந்த ஒருவரை நையாண்டிப் பண்ணி கவிதை எழுதுவது சமீபத்தில் நடக்கும் நிகழ்ச்சி.  சிறுகதையிலோ கவிதையிலோ அவர் ஒரு பாத்திரமாக மாறி தென்படுவார்.          குறிப்பாக நகுலனைப் பலர் பகடி பண்ணி எழுதியிருக்கிறார்கள். […]


 • இருப்பதோடு இரு

  இருப்பதோடு இரு

  ஒரு வண்டு சிலந்தியிடம் சொன்னது ‘உன்னைப்போல் இருந்துண்ணவே ஆசை எனக்கும் – ஆனால் வலை செய்யும் கலை அறியேனே’ சிலந்தி வண்டிடம் சொன்னது ‘சும்மா இருப்பது சோம் பேறித்தனம் பறந்துண்ணவே ஆசை எனக்கு – ஆனால் றெக்கைகள் இல்லையே’ இறைவனிடம் சென்றன இரண்டும் கேட்ட வரங்களைத் தந்தான் இறைவன் வலைபின்னியது வண்டு பறந்தது சிலந்தி ஒரு நாள் கூடாத இடத்தில் கூடுகட்டி பறவை செத்தது பறக்கக் கூடாத இடத்தில் பறந்து சிலந்தியும் செத்தது அமீதாம்மாள்


 • திருநீலகண்டர்

  திருநீலகண்டர்

  அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது  துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான் கிட்டாதனவற்றின் பட்டியலை அவன் உதறிவிட்டு நடக்கிறான் —- இதோ இன்னும்கூட  விஷ உணவுகள் அவன் மேஜையில் காத்துக் கொண்டிருக்கின்றன.


 • கோடுகள்

  கோடுகள்

  அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும்  மின்சாரக் கம்பிகளும்தான் ஆசிரியர் இணைகோடுகள் என்று சொல்லித் தந்தார் இரண்டுமே ஆபத்தானவை. குறுக்கு வெட்டுக்கோடுகளும் வாழ்வில் முக்கியமானவை. அனுபவம் கற்றுத் தருபவை கண்டிப்புகளும் சங்கடங்களும் அனுபவம்தானே […]


 • நடை

  மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை. காலைநடையில்தானே இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள் வலப்புறம் நடப்பதுதான் சிறந்தது என்பார் ஒரு சிலர் நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள் கூறுவர். இங்கும் பிறரின் நடைகளே நம் நடையை வழி நடத்துகின்றன பொற்கொல்லன் வருவதை ‘விலங்கு […]


 • மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

  மொழிபெயர்ப்பு  : மூலம்    : ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ] தமிழில்   : தி.இரா.மீனா        சில சமயங்களில் மழை பெய்யும்போது இளம்பருவத்தில்  தனிமையிலிருக்கும்  போது மனிதர்களுக்கு ஏன் ஆடை வேண்டுமென்று  வியப்படைந்த தருணங்களை நினைத்து, சில சமயங்களில் மழை பெய்யும் போது எனக்குள் நான் சிரித்துக் கொள்கிறேன். எப்போது நான் பெரியவனாவேன் நாளை நான் பெரியவனாவேன்’ என்று கத்திக் கொண்டே மழையில் ஓடிய நேரங்களை சில சமயங்களில் மழை பெய்யும்போது நினைத்துக் கொள்கிறேன். […]


 • இன்னொரு புகைப்படம்

  இன்னொரு புகைப்படம்

  கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் தேடி- தேடி இல்லாது- இல்லாததால் அறிதலில்லையென்றில்லை என்ற அறிதலில் ஆசுவாசமாகி- அநேக புகைப்படங்களின் மத்தியில் இன்னொரு புகைப்படமானேன் நிச்சிந்தையில் நான். கு.அழகர்சாமி


 • மொழிபெயர்ப்புக் கவிதைகள்

    ட்டி. ஆர். நடராஜன்    1. என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது     ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட்  என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது.  என் அறைகள் அறைகளுக்கான அளவில்  அதன் ஆத்மா ஆத்மாவின் அளவில். பின்னணியில் உயிரணுவின் ரீங்காரம் அதற்கு மேலாக சூரியன், மேகங்கள், கிரஹங்கள் அது எலிவேட்டர்களையும், புல்லட் ரயில்களையும், பல்வேறு விமானங்களையும் ஒரு கழுதையையும்  ஓட்டியது. அது காலுறைகளையும், சட்டைகளையும்அணிந்தது அதற்கென்று அதன் சொந்தக் காதுகள், மூக்கு. அது சாப்பிட்டது, தூங்கிற்று, கைகளையும், ஜன்னல்களையும்  திறந்தது மூடியது. […]