மறுபடியும் நான்

This entry is part 1 of 5 in the series 8 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா முழுமையாக நைந்துப் போன துணியை  விடாமல் இழுத்துப் பிடிக்கும்  தையல் நூல்  கடைசியில்  சோர்ந்து போய் தன்னை மட்டுமாவது  காப்பாற்றிக் கொள்ள விழைவது போல  நான்  என் பாசம் நிறைந்த  ஒரு பக்கத் தொடர்பை  கண்டித்துத்  துண்டித்துக் கொண்டு விட்டேன்  வலி தெரியவில்லை     பாச  நரம்புகள்  முன்பே  நைந்துப் போய்விட்டதால் வெகுகாலம் கழித்து ரசிக்கிறேன்  இப்போது உனை நினையாமல்  நிலத்தின் நீலப் பூக்களை   கடலின் அலைகளை நீல வானின்  நட்சத்திரங்களை

அடுத்த முறை

This entry is part 2 of 5 in the series 8 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா அடுத்த முறை  யாரிடமாவது  அன்பு செலுத்தினால் வெளிக்காட்டாதே இப்படி அதை அடுத்தமுறை காண்பிக்காதே கண்களில்  இத்தனை கரிசனத்தை யாரிடமும்  அடுத்தமுறை  வெளிப்படுத்தாதே  இவ்வளவு அழகான  சொற்களில் உன் மதிப்பை யாரிடமும் அடுத்த முறை  பிரதிபலிக்காதே உன் கண்களில்  யார் வலியையும் இவ்வாறு அடுத்த முறை  உன் சொந்த ஊரின் பெயரை சொல்லாதே உனதன்பு நிரந்தரம் என நம்புபவரிடம் நீ விலகிய பின் தைத்து நிற்கக் கூடும் முட்களாக இவற்றின் நினைவுகள் அவர் மனதாழத்தில்  நாள்காட்டியில்  […]

விநாயகர்

This entry is part 5 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர். வத்ஸலா பல விநாயகர்கள் உண்டுபூஜையறையில்பர்மாவிலிருந்து அகதியாக நடந்து வருகையில்ஒரு சிகை மழித்த பாட்டி தூக்கி வந்த பளிங்கு விநாயகர்நிற்க வைத்தால் லொட்டென்று விழும் நவதானிய விநாயகர்கற்பனை வளத்தால் மட்டுமே அது விநாயகர்என்று ஒப்புக் கொள்ளக் கூடிய மொண்ணை உருவம் கொண்டநாள் நட்சத்திரம் பார்த்துவெட்டிய எருக்கம் வேரில்செதுக்கப் பட்டஅரிய பொக்கிஷவிநாயகர்மரப் பொடியில் அருமையாக செதுக்கப்பட்டவிநாயகர்திருமணமானதும்அம்மா ‌பிடித்தமுதல் விநாயகர்ஒரு மாதிரி இருந்ததால்எங்கள் வீட்டில் களி மண் விநாயகர்கிடையாதுமற்றபடி விநாயகர்கள்எல்லோரும்எங்களுடன்நிரந்தரமாக

நங்கூரம் 2

This entry is part 2 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலாஒரு சாண் துணை தான்அமையும்உனது நங்கூரமாகஎனபூர்வ ஜென்மங்களில்சலவை செய்யப்பட்ட மூளையுடனேயே பிறந்தேன்பணி, அண்ணனுக்குப் பிறகுகவனித்தார் சற்றுஎன்னைதந்தைஅளவாய்பாசம் செலுத்தினர்சகோதரர்கள்‌தங்களுக்கு மணமாகும் வரைகொண்டவனும்கூரையும்தூற்றினர் கைகோர்த்துஆண் பெண் நட்பிலக்கணமறியாமடையரைபுறந்தள்ளிதோழியர் உதவியுடன்உற்பத்தி செய்து நானேபாய்ச்சிக் கொண்டேன்எனது நங்கூரத்தை

நங்கூரம் 1

This entry is part 1 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா கவிதை எழுதுதல் எனது நங்கூரம் என நம்பி இருந்தேன் திடீரென புரிந்தது இன்று அது அப்படி இல்லை என்று கடலில் ஆடிக் கொண்டிருக்கும்  ஓட்டைப் படகு மூழ்காமலிருக்க அதில் நிரம்பும் நீரை வெளியே கொட்டுவதைப் போல் நான்  செய்து கொண்டிருக்கும் சுய பாதுகாப்பு பணி அது என்று தேட வேண்டும் எனக்கான நங்கூரத்தை இனிமேல் தான்

இரண்டு கவிதைகள்

This entry is part 2 of 3 in the series 10 செப்டம்பர் 2023

வாகன  இரைச்சலில் சாலைகள் காலடி  ஓசையில்  பாதைகள் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மைனாவாய் மேய ஆசை ———- அவள் தைரியமாகவே உலா வருகிறாள் உரக்கப் பேசுகிறாள் எவர்தான் என்ன செய்யமுடியும்? அவளுக்கென்று ஒருவன் அவனோடு இருக்கும்வரை அமீதாம்மாள்

கோடை மழை 2

This entry is part 2 of 6 in the series 3 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா ‘சடசட’ வென்று பெய்து நிற்கிறது கோடை மழைபால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்வெளிச் சுவற்றில் பட்டுகைமேல் தெறிக்கும்தண்துளி சுடுகிறதுசிறு வயதில்பின் கட்டில் இருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல்முற்ற மழையில் தலை நனைத்துஅம்மா வருவதற்குள்அண்ணனும் நானும்ஒருவர் தலையை மற்றவர் துவட்டி விட்டுசாதுவாகஅம்மா தரும் சுக்கு கஷாயத்தைகுடித்த ஞாபகத்தில்எரிகிறதுதொண்டைஎரிகிறதுமனம்கைபேசியில் கூடபிறந்த நாள் வாழ்த்து கூறாத அண்ணனை‌ எண்ணிஅறிவுஜீவி அண்ணனுக்குஇதிலெல்லாம் நம்பிக்கையில்லையெனகணவனிடம் சாக்குச் சொன்னாலும்

கோடை மழை 1

This entry is part 1 of 6 in the series 3 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா மழைக்கென்ன!வருகிறதுஅதன் இஷ்டம் போல்நிலத்தின் தேவையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல்காணாமல் போவதும்அதே இலக்கணப்படி தான் அவனைப் போலவே – பொங்கி வழிகிறதுஎன் கோபம்தன்மானம் தொலைத்தநிலத்தின் மீது

வாக்குமூலம்

This entry is part 4 of 5 in the series 27 ஆகஸ்ட் 2023

வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.