தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 பெப்ருவரி 2017

‘இலக்கியக்கட்டுரைகள்’ படைப்புகள்

தோழி கூற்றுப் பத்து

இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்; அவள் எப்பொழுதும் தலைவியின் நலத்தையே விரும்பி அதற்காகச் செயல்படுபவளாக இருக்கிறாள். தலைவியின் பேச்சைவிட [Read More]

பொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

பொருனைக்கரை நாயகிகள். 		   தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி. இன்று ஆழ்வார் திருநகரி என்று வழங்கப்படும் குருகூர் பொரு்னையாற்றின் தென் கரையில் அமைந் துள்ளது. ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தொலை வில்லி மங்கலம். இன்று இவ்வூர் இரட்டைத் திருப்பதி என்று வழங்கப் படுகிறது. நவதிருப்பதிகளு்ள் இத்தலமும் ஒன்று. தொலைவில்லிமங்கலப் பெருமான் குருகூரிலிருந்த நாயகியை (பராங்குச நாயகி) அவள் பெற்றோர்கள் தொலைவில்லி மங்கலத் [Read More]

காலாதீதமாகாத கவிதை

சுயாந்தன் ====== “கவிதையானது காலாதீதங்களுக்கு இடையே நீண்டு கொண்டேயிருக்கும் மாயச்சங்கிலி” என கலாப்ரியா ஓரிடத்தில் கூறியிருந்தார். ஒரு கேள்விக்கான விடையை அவ்வளவு கவித்துவமாகக் கூறியிருந்தார். இந்த பிராணச் சுருக்கம்(For Poetry) காலாவதியாகாத பண்பினைப் படைப்புகள் தோறும் விளக்கி வருகிறது என்றே கூறவேண்டும். அதுவும் கவிதைகளின் படைப்பு நிலையினின்று நோக்கினால் அவ்வுண்மையின் [Read More]

பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல. கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 27 ஆவது இதழ் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அநுராதபுரம் கெகிறாவை இலக்கிய செயற்பாட்டாளர் திருமதி. கெகிறாவை ஸஹானாவின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது. வழமைபோன்று இதழின் ஆசிரியர் ஒரு நிமிடம் எங்களை எல்லாம் சிந்திக்க வைத்துவிட்டுத்தான் வாசகர்களாகிய எங்களை பூங்காவினுள்ளே [Read More]

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள், கிருஷ், ஷ்ருதி, ஷ்ருதியின் ரூம்மேட் வைஷ்ணவி என்று எல்லோருமே [Read More]

புலவிப் பத்து

வளவ துரையன் புலவிப் பத்து ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே புலவியைக் காட்டுவதுதான் ஆயினும். தலைவியும், தோழியும் தலைவன் முன்னிலையில் ஊடல் கொண்டு கூறியதை மட்டுமே இங்கு கூறப்படுவதால் இப்பகுதி ‘புலவிப் பத்து” என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களில் தலைவிய [Read More]

புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

புத்தகப்பார்வை.  லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை, ஒரு முஸ்ஸிம் எழுத்தாளர் பதிவு செய்து, அடர்ந்த [Read More]

நமன் கொண்ட நாணமும் அச்சமும்

நமன் கொண்ட நாணமும் அச்சமும்

(வரதராசன். அ .கி) ”மரண பயம்”, ”யம பயம்” என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கூற்றுவனைப் பற்றி அச்சம் கொள்ளாதோர் உண்டோ? . “ காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே” என்று தானே அனைவரும் வேண்டிக்கொள்கிறோம். இப்படி உலகில் வாழ் மக்கள் அனைவரும் எவனைக் குறித்து அஞ்சுகிறோமோ அந்த நமனுக்கும் அச்சம் வந்துவிட்டதாம். யமனுக்கும் வந்ததோ யமபயம் என்று எண்ணத் [Read More]

கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

பேராசிரியர் க. பஞ்சாங்கம் “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறுநாள் இறந்தான்” என்று தொடங்கும் சுந்தர ராமசாமியின் (1931-2005) “ஜே ஜே சில குறிப்புகள்” (1981) நாவலை வாசிக்கத் தொடங்கிய போதுதான் அல்பெர் கமுய் (இதுதான் சரியான உச்சரிப்பு என்கிறார் கிருஷ்ணா) எனக்குத் தெரிய வந்தார். சுந்தர ராமசாமி சுட்டுகிற பெயர் என்பதனாலேயே மனதில் [Read More]

கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.

சுயாந்தன். A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation. ====== ரமேஷ்-பிரேமின் ‘சக்கரவாளக்கோட்டம்’ என்ற கவிதை நூலை வாசித்த பின்னர் எதேச்சையாக ‘றியாஸ் குரானா’வின் ‘சில நினைவின் காலடி’ என்ற குறுங்கவிதையினையும் வாசிக்க நேர்ந்தது. நான் வாசித்த றியாஸ் இன் முதல் கவிதை இது என்றுதான் சொல்ல வேண்டும். மேற்சொன்னவர்கள் இரட்டையர். கீழுள்ளவர் தனித்த படைப்பாளி. இருவரின் [Read More]

 Page 2 of 173 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

தொடுவானம் 158.சிதைந்த காதல்

         மீண்டும் நீண்ட விடுமுறை. இந்த முறை [Read More]

புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.

புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க [Read More]

கோடிட்ட இடங்கள்….

அருணா சுப்ரமணியன் அழகிய கவிதை  எழுதிட [Read More]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் [Read More]

Popular Topics

Insider

Archives