குற்றமும் தண்டனையும் – எம். ஏ. சுசீலாவின் மொழிபெயர்ப்பு

This entry is part 18 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப் பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது. தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன. […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 44

This entry is part 12 of 31 in the series 10 பெப்ருவரி 2013

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல   பூலோக யாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டார் இறைவன் தனியாக இல்லை துணைவியுடன்தான் புறப்பட்டார் புறப்படும் முன்னர் இறைவனுக்கும் இறைவிக்கும் வாக்குவாதங்கள். கணவனின் விளையாட்டுப் புத்தியை மனைவி அறிவாள். எனவே என்ன நேரிடினும் சக்தியை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் தேவியின் வேண்டுகோள். இறைவனும் சிரித்துக் கொண்டே புறப்பட்டுவிட்டார். திருவிளையாடலில் மிகச் சிறந்தவர் ஆயிற்றே. பிரபஞ்சமே அவர் விளையாட்டில் விளைந்த ஒன்றுதான். பாம்பு அணிகளை அகற்றிவிட்டு ஜடாமுடியுடன் காவியுடையில் […]

சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரையும், சுப்ரபாரதிமணியனின் கொஞ்சம் கவிதைகளும்

This entry is part 11 of 31 in the series 10 பெப்ருவரி 2013

சாமக் கோடாங்கி ரவி ——————————————-    சுஜாதா அவர்கள் சுப்ரபாரதிமணியனின்  “அப்பா” என்ற  முதல் தொகுப்பிற்கு முன்னுரை எழுதும் போது  ( 1987 ) ” சுப்ரபாரதிமணியனிடம் கவிஞர்தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரின் ஒரிஜனல் வரிகள்:    ” சுப்ரபாரதிமணியனின் தமிழ் நடையில் ஒரு கவிஞனின் பலங்களும் பலவீனங்களும் உள்ளன. மெலிதான தீற்றல் போன்ற எண்ணங்களை சொல்ல முடிவது நிறை. கணிசமான  சதவிகிதத்தில் அரக்கனோ குழந்தையோ மென்மையோ நம்முள் உறைந்து போயிருப்பதை நாம் எப்போது முதல்  முதலாக […]

சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு

This entry is part 8 of 31 in the series 10 பெப்ருவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதனை, “இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை நம்புவதுதான் சமயம் ஆகும்” என்கிறது வாழ்வியற் களஞ்சியம். அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது. இங்ஙனம் மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..16 இந்திரா பார்த்தசாரதி – ‘வேதபுரத்து வியாபாரிகள்’.

This entry is part 5 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  எல்லா மொழிகளிலுமே ‘அங்கதங்களுக்கு’ ஓர் ஆயுள் வரையறை (mortality rate) உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில், ஜனாதன் ஸ்ஃப்ட் (Jonathan Swift) ’கலிவரின் பயணங்கள்’ என்று ஒரு மகத்தான சமூக அங்கத நாவலொன்று எழுதினார். அது இப்போது குழந்தைகளின் செவ்விலயல் இலக்கியமாக வாசிக்கப்பட்டு வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ஜார்ஜ ஆர்வெலின், ‘1984’, ‘விலங்குப் பண்ணை’  (Animal Form) ஆகிய இரண்டு நாவல்களுமே மனித சுபாவம் பற்றிய உளவியல் படைப்புகளாக அறியப்படுகிறனவே அன்றி, கம்யூனிசக் கோட்பாடு பற்றிய […]

ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)

This entry is part 19 of 32 in the series 3 பிப்ரவரி 2013

தமிழில் லதா ராமகிருஷ்ணன் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த ஜெர்மானிய குறுநாவல் ‘ராஜவிளையாட்டைப்’ பற்றிய என் கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்கிறேன்.   ‘ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் (1881-1942) என்ற எழுத்தாளரின் குறுநாவலை ஆங்கில வழி தமிழாக்கி இருக்கிறார். லதா ராமகிருஷ்ணன், 1957ல் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில்  ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  1983 முதல் கவிதை சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்- என்று பல தளங்களில் இயங்கி வருபவர். நவீனக் கவிதைகளை பிரெயில் […]

செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்

This entry is part 17 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது. உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. அனைத்துத் தொழில்களும் உழவை மையமிட்டே அமைந்திருந்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புக்குரியவர்களாக வாழ்ந்தனர். இவ்வுழவுத் தொழல் குறித்தும் உழவர்கள் குறித்தும் பல்வேறு பதிவுகள் செவ்விலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இப்பதிவுகள் அவ்வுழவர் பெருமக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் அறவாழ்வையும் காட்சிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. உழவர்கள் நிலை மனிதன் விலங்குகளை […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.

This entry is part 13 of 32 in the series 3 பிப்ரவரி 2013

டி.கே.சி கடிதங்கள் எல்லாம் கலை அந்தஸ்து பெற்றவை. ஒரே ஹாஸ்யமும், உல்லாசமும், உணர்ச்சியுமாயிருக்கும். படிக்கத் தெவிட்டாத இலக்கிய ரத்தினங்கள் அவை. டி.கே.சி கடிதம் எழுதுவதைக் கைக்கொண்ட பின்தான் கடித இலக்கியம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் பிறந்தது. ஒவ்வொரு கடிதமும் நேருக்கு நேர் நின்று பேசும். உடல் நிலை மோசமாயிருப்பது கேட்டு வருந்தி எழுதி இருந்தேன். அடுத்த தபாலில் கீழ்க்கண்ட பதில் வந்தது: “என் உடலைப் பற்றித் தாங்கள் கவலை கொள்வதாகத் தெரிகிறது. அது வேண்டாம். உடம்பு சரியாகத்தான் […]

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்

This entry is part 11 of 32 in the series 3 பிப்ரவரி 2013

அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43

This entry is part 8 of 32 in the series 3 பிப்ரவரி 2013

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. நினைப்பதெல்லாம் நடப்பதில்லை நினைக்காமல் இருப்பதுமில்லை மனித மனத்தின் ஊஞ்சலாட்டம் இருப்பது ஒரு மனம். ஆனால் கேட்பது பல குரல்கள் செய் என்று சொல்லும் மனத்தை இழுத்துப் பிடித்து பின்னே இழுக்கின்றது. இன்னொரு மனம் ஆமாம் நமக்கு ஒரு மனம்தானே இருக்கின்றது ! யானையைக் கூட அடக்கி விடலாம் ஆனால் இந்த மனத்தை அடக்க நமக்கு வலிமை இல்லையே! வாழ்க்கை பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. எல்லாம் எழுத்தில் கொண்டு […]