நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’

This entry is part 10 of 34 in the series 6 ஜனவரி 2013

விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு எப்போதும் மனதிலே பயம் உண்டாகும். படித்தால், மனதில் என்னென்ன விதமான சங்கடங்கள் உருவாகுமோ. எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்ற பயம்! ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியாரைப் பற்றியே வந்து கொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தபடியால் அந்தச் சாதியாரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ் நடை, பிராமணர்கள் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. மற்ற […]

சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

This entry is part 5 of 34 in the series 6 ஜனவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள். உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர் கல்வியறிவில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். தங்களின் புலமையாற்றலால் பல புதுமைகளைப் படைத்த பூவையராகப் பல பெண்கள் திகழ்ந்திருக்கின்றனர். இவ்வாறு திகழ்ந்த மகளிரின் வாழ்க்கையை சங்க இலக்கியங்கள் காலக் கண்ணாடி போன்று […]

மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ

This entry is part 17 of 26 in the series 30 டிசம்பர் 2012

  உலகின் பிறபகுதிகளைப்போலவே பிரான்சுநாட்டிலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையிற் சங்கங்கள் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. தமிழர், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபியர், குஜராத்தியரென குழுச்சமுதாயமாக இயங்குவதும், அவரவர் வட்டார குறியீடுகளை நினைவூட்டும் வகையில் பண்டிகைகள், மொழி வகுப்புகள், பரதநாட்டியம், மோகினி ஆட்டமென்று நற்காரியங்களில் அக்கறைகாட்டுவதும் இச்சங்கங்களின் பொதுகோட்பாடுகள். எனினும் இந்திய துணைக்கண்டத்தைச்சேர்ந்த பிற மக்களிடமிருந்து  வேறுபடுத்திக்காட்ட போலிவுட்டையும், தீபாவளியையும் மறப்பதில்லை. பொதுவாக நமது மக்களுக்கென சில பிரத்தியேகக் குணங்களுண்டு, அவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சிலரேனும் இப்படி […]

சங்க இலக்கியங்களில் அலர்

This entry is part 14 of 26 in the series 30 டிசம்பர் 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதன் ஒருவருடன் இணைந்து வாழ்க்கை நடத்தும் பண்பினன். அவ்வாறு வாழ்கின்றபோது ஒருவருடைய செயல்பாடுகளைக் குறித்து மற்றவர்கள் குறையோ நிறையோ கூறுவது வழக்கம். ஒருவர் நல்லனவற்றைச் செய்கின்றபோது பாராட்டும், மற்றவருக்கு ஒவ்வாதனவற்றையோ அல்லது ஏற்றுக் கொள்ள இயலாதனவற்றையோ செய்கின்றபோது தூற்றுவர். இதனை விமர்சனம் என்று கூறலாம். இவ்வாறு பிறரால் கூறப்படும் விமர்சனத்தை சங்கச் சான்றோர் அலர் என்று குறிப்பிட்டனர். அலர் என்ற சொல் சங்கம் மருவிய காலம், […]

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………. 10.ஆதவன் – ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’

This entry is part 6 of 26 in the series 30 டிசம்பர் 2012

  எழுத்து, நான்     அன்று அந்தப் பையன்கள் என்னை விளையாடச் சேர்த்துக் கொண்டிருந்தால், நான் பின்னால் எழுதியே இருக்க மாட்டேன். அவர்கள் மைதானத்தின் நடுவே விளையாடிக் கொண்டிருபார்கள். நான் மைதானத்தின் ஓரத்தில் ஒரு புத்தகத்தைப் படித்தவாறு,அவர்களுடைய  ஷூ, செருப்பு, ஸ்வெட்டர் ஆகியவற்றுக்குக் காவலாக உட்கார்ந் திருப்பேன். அது என்னுடைய ஒரு குறைபாடாக, பலவீனமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் என் மனம் அதை ஒரு பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டது. நான் அவர்களைவிட புத்திசாலியாம், புத்தகம் படிக்கிறேனாம். எனக்கு […]

கமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்

This entry is part 1 of 26 in the series 30 டிசம்பர் 2012

கமலா தேவி அரவிந்தன் பேசும் மொழி மலையாளம்.  மூன்று தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை வழித் தாத்தா பாட்டி கொல்லத்திலிருந்து வந்தவரகள். தாய்வழித் தாத்தா பாட்டி பாலக்காட்டின் ஒட்டப் பாலத்திலிருந்து வந்தவர்கள். கமலா தேவி குட்டிப் பெண்ணாக ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்றது தமிழ். வாழ்க்கை முழுதும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும். கணவர் மலையாளி. பிரமிப்பாகவும் இருக்கிறது. தொடக்க காலத்தில் மலையாளத்தில் எழுதினாலும் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கி இப்போது சிறுகதைகள், நாவல், ரேடியோ நாடகங்கள் இத்யாதி […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -41

  அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.   தேடல் தேடல் எளிதல்ல. அர்த்தமுள்ள முயற்சியும் , தெரிந்தவைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலும் இன்றியமையாதவை. ஊக்கம் இடையில் உடைந்துவிடக் கூடாது. சிறுவயது முதல் எனக்கு அமைந்த குணம் இது. பல பாதைகளில் சென்றாலும் என் இலக்கு ஒன்றுதான். நாட்டில் சுதந்திரப் போராட்டம், தந்தை அரசியலில். .பின்னர் அரண்மனைக் கருகில் வீடு, அரண்மனையில் தந்தைக்கு உத்தியோகம், அரண்மனை விருந்தினர் மாளிகைக்கு வரும் பெரியவர்களின் அறிமுகமும் பழக்கமும் […]

குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘

This entry is part 19 of 27 in the series 23 டிசம்பர் 2012

சிறகு இரவிச்சந்திரன் கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்.. கதை கொஞ்சம் பாண்டசி ரகம். பெரிய டிபார்ட்மெண்ட் கடையில், ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும். சைட் அடிக்கும் சராசரி வயது, இருவருக்கும். பெண் ஒரு டெடி பேர் எடுக்கிறாள். பையன் ஒரு ஜட்டி பெட்டியை.. ‘பிளாஸ்டிக் பைகள் இந்தக் கடையில் பயன்படுத்தவில்லை’ என்று ஒரு அறிவிப்பு பலகை. சிகப்புக் கலர் அட்டைப் பைகளில், பொருட்கள் தரப்படுகின்றன. வீட்டில், […]

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து… 9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்

This entry is part 15 of 27 in the series 23 டிசம்பர் 2012

‘கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே  இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகணங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.’ ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி  இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் ‘கூடாரங்கள்’ என்று குறிப்பிடுவது […]

நிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை

This entry is part 12 of 27 in the series 23 டிசம்பர் 2012

  தாளாச் சுமையில் தடுமாறும் என்பேனா முனை முழுங்கிக் கிடக்க என்னைத் தூரநின்று வேடிக்கை பார்க்கின்றன யார்யாரோ எழுதிச் செல்லும் கவிதைகள் கவி ந.நாகராஜனின் இந்த வரிகளில் உண்மையில்லை என்பதை அவரது கவிதைகளே நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவர் எழுதிய கவிதைகள் அவரிடமே வேடிக்கை காட்டுகின்றன,தூர நின்று கவனித்துக் கொண்டிருந்த வாசகன் மிகுந்த நெருக்கத்தோடு அக்கவிதைகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயல்கிறான். நீண்டதொரு மக்கள் சார்பு இலக்கியப்பாரம்பர்யத்திலிருந்தும்,கலை இலக்கியப் பெருமனற் பண்பாட்டுக் களத்தை உருவாக்கிய பேராசான் பிறந்த […]