கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்

This entry is part 14 of 23 in the series 14 அக்டோபர் 2012

தென்னாளி.   கிழவனும் கடலும் என்னும் ஹெமிங்வேவின்  படைப்பு ஒரு குறியீட்டு புதினமாகும். சாண்டியாகு என்னும் மீன் பிடிக்கும் கிழவரே புதினத்தின் கதைத் தலைவர். ஒரு மனிதன்  வெற்று அதிஷ்ட்டத்தின் மூலமோ  பிறரது உதவி அல்லது தயவின் மூலமோ ஒருபோதும்வெற்றிக் கனியைப் பரிக்கமுடியாது என்னும் அழுத்தமான செய்தியயே   படைப்பு துள்ளியமாக வலியுறுத்துகிறது.  லட்சிய வாழ்க்கையில் தடைகள் பல வரினும் இடையூருகளும் குறுக்கீடுகளும் ஏற்படினும்  ஒரு மனிதன் ஒருபோதும் தான் அடையத் துடிக்கும்  மேலான குறிக்கோளை  கை விடலாகாது என்பதும்,நாம் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32

This entry is part 18 of 23 in the series 14 அக்டோபர் 2012

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்.     மனம் விட்டுப் பேசுகின்றேன் இது உளவியல் பகுதி. இனிய இல்லறத்திற்கு வழிகாட்டும் பகுதி. அந்தரங்கம் புனிதமானது. அது அர்த்தமற்றதாகிவிடாமல் பாதுகாக்க மனம் திறந்த பேச்சு தவறில்லை. நமது இலக்கியங்களில் அகப்பாடல்கள் என்று தனித்து வந்தாலும் போர்ப்பரணி பாடும் பொழுது கூட ஓர் கடை திறப்பு முன்னிறுத்துகின்றோம். வாழ்வியல் வரலாற்றில் அகம்பற்றிய அலசல் இன்றியமையாதது. நம்மை ஆட்டிப் படைக்கும் சில பிரச்சனைகளையாவது ரண சிகிச்சை செய்து […]

கைப்பீயத்து என்றால் என்ன?

This entry is part 17 of 23 in the series 14 அக்டோபர் 2012

கர்னல் காலின் மெக்கன்ஸி (17541821) ஒரு வித்தியாசமான மனிதர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றச் சென்னைக்கு வந்து முதன்மைத் தலைமை நில அளவையாளராகப் பதவி உயர்வு பெற்று, விரைவிலேயே இந்தியா முழுமைக்குமான முதன்மைப் பிரதம ஆய்வாளராகவும் உயர் பதவி வகித்தவர். தாம் பணியாற்றிய கீழ்த்திசை நாடுகளின் சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், கலைகள், கைவினைத் திறமைகள், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்து பதிவு செய்வதில் ஈடுபாடு கொண்டவர் இவர். இதற்காகவே, விவரம் அறிந்த உள்ளூர் நபர்களை உதவியாளர்களாக வைத்துக்கொண்டு […]

திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .

This entry is part 11 of 23 in the series 14 அக்டோபர் 2012

சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர். என்று ஒரு படத்தில் ரஜனிகாந்த் பாடுவார். அது உண்மை எனச் சொல்கிறார் திருமதி சௌந்தரநாயகி வைரவன் தன்னுடைய சிங்கப்பூரில் தமிழ், தமிழர் என்ற தன்னுடைய புத்தகத்தில். 2010 ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை குமுதம் தீராநதியில் வெளிவந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முனைவர் சுப திண்ணப்பன், இராம. கண்ணபிரான் , இலியாஸ், சாந்து ஆகியோரின் துணையுடன், அவர்களின் நூலின்/இணையங்களின்  துணையுடன், இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் […]

சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2

This entry is part 2 of 23 in the series 14 அக்டோபர் 2012

  டண்டனுக்கு இந்த கூட்டம், இந்த சலசலப்பு பிடிக்கும். தூர இருந்து வேடிக்கை பார்க்க. ஒரு குழந்தையின் உற்சாகம் அவர் முகத்தில் காணும். அவர் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கேட்க  வேண்டுமானால், கிஷோரி அமோன்கர் கச்சேரி துவங்கக் காத்திருப்பது  மாதிரி தான். கூட்டம் சேர, அமைதியாக இருக்க வேண்டும். வந்து உட்கார்ந்தால் ஒரு பார்வை சுற்றுமுற்றும் ஒருத்தரும் எழுந்து போகக் கூடாது. ஒரு இருமல், தும்மல் கூடாது. பின் சுருதி சேர வேண்டும். தம்பூரா ஸ்ருதி மாத்திரம் […]

குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 22 of 23 in the series 7 அக்டோபர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர்  மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் ஷகன்னிக் கவிதை| என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் […]

யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான்

This entry is part 20 of 23 in the series 7 அக்டோபர் 2012

  இந்திரன் மொழிபெயர்ப்பில் 2002ல் வெளிவந்த கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் சில கவிதைகளும் இந்தியப் பழங்குடிகளின் வாழ்தலுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு நெருக்கத்தையும் முரணையும் பேசுகின்றன. ஜார்கண்ட் பகுதியில் வாய்மொழி மரபாக பேசப்படும் கவிதை ஒன்று யூகலிப்டஸ் மரத்திற்கும் உயிரினங்களுக்குமான உறவின்மையைக் மிக நுட்பமாக சித்திரப்படுத்திக் காட்டுகிறது.   யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான் -ஆனால் ஆடுகள் மேயும் புற்களுக்கான நிலத்தடி நீரை குடித்துவிடுகின்றன. குளத்துக்குப் பக்கத்தில் பாறையில் கூட அவை செழித்து வளர்கின்றன -ஆனால் […]

மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012

This entry is part 14 of 23 in the series 7 அக்டோபர் 2012

  1. Domaine de Courson   நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில்  ‘எஸ்ஸோன்’ (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா ‘Domaine de Courson’ உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும், தாவரஇயல் விற்பன்னர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக தங்கள் கைத்தூரிகைக்கொண்டு  விதைத்து, நட்டு, பதியமிட்டு வளர்த்துத் தீட்டிய பாரீஸின் சஞ்சீவி பர்வதம் அது. வேட்டுவப் பெண்களையும், காட்டுமறவர்களையும் எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் பாரதிதாசன் வர்ணிக்கிற அத்தனை காட்சிகளுக்கும் […]

மதிலுகள் ஒரு பார்வை

This entry is part 7 of 23 in the series 7 அக்டோபர் 2012

மீளமுடியாத ஒரு சிறைக்குள் நாமெல்லாம் மாட்டிக் கொண்டிருப்பது போல ஒரு கனவுச் சித்திரத்தை அங்கங்கே உண்டுபண்ணுகிறது மதிலுகள். பெண்ணின் வாசனை கூட ஒரு மதில்தான். மீளமுடியாத மதில். அது காதலியின் வாசனையாய் இருக்கலாம். அல்லது மனைவியின் ஏன் அம்மாவினதும் கூட. இந்த வாசனைகள் எழுப்பும் சிறைகளைத் தாண்டி ஒரு ஆணால் எப்போதுமே பயணிக்க முடிந்ததில்லை. விடுதலை பெற முடிந்ததில்லை. உலகம் என்னும் பிரபஞ்சம் என்னும் இன்னொரு சிறைக்குள் அடைபட்டே அலைகிறான் வாழ்நாளெல்லாம். ஒரு சிறை கூட பெண் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31

This entry is part 6 of 23 in the series 7 அக்டோபர் 2012

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இயற்கையான இயல்புகளும் இடையில் மனிதனே விதித்த சில விதிகளூம் ஒன்றிணைந்து இயங்குவது வாழ்வியல் பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்புடைத்தே என்ற இலக்கணக்கோடும் வரைந்து கொண்டோம். மனிதன் உணர்வுகளால் ஆன ஓர் பிண்டம். யானையை அடக்க முடிந்தவனுக்கு அவன் மனத்தை தனக்குள் ஆளுமைப் படுத்துவது கடினமான செயலாக இருக்கின்றது. மனிதனின் அமைதிக்கு அறியாமை தேவையா அல்லது அறிவு சிறந்ததா? அறிவினால் ஒவ்வொன்றையும் கூறுபோட்டு பார்த்துக் கொண்டே போகையில், […]