கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?

This entry is part 24 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தேமொழி கரிகால் சோழன் சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது. “பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்” மற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய “கலிங்கத்துப் பரணி”யில் காணப்படுகிறது. “செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச் சிமய […]

அனைவருக்குமான அசோகமித்திரன்!

This entry is part 36 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  -லதா ராமகிருஷ்ணன் அசோகமித்திரனுடைய எழுத்துகள் அடிமனதைத் தொடாத வாசகர் எவரேனும் இருக்க முடியுமா? உலகளாவிய அளவில் தரமான எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெறத்தக்கவர் அவர் என்பதை நிரூபிக்கும் அவருடைய படைப்புகளைப் பட்டியலிட்டால் அதன் நீளம் அதிகமாகவே இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கையில் எளிய நடையில் எழுதப்பட்டதாய்,  தினசரி வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுவதாய், சாதாரண மனிதர்களே கதாபாத்திரங்களாய் அமைந்துள்ளதாய் காணப்பெறும் அவருடைய படைப்புகள் உண்மையில் வாழ்க்கை குறித்த நம் பார்வையை விசாலப் படுத்துவதாய், வாழ்க்கையின் பல பரிமாணங்களை, நுட்பங்களை மிகை யுணர்ச்சி […]

நினைவுகளின் சுவட்டில் (101)

This entry is part 26 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்சினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் நடந்த கலவரங்களில் உயிர் தப்பி […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30

This entry is part 22 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்   ஒரு பெண்ணின் கதை அவள் ஓர் அழகான விதவை அவளுக்கு ஒரு மகன் மட்டும் உண்டு. அரசில் பணி கிடைத்ததால் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் அழகும் தனிமையும் பலருக்கு சபலத்தை ஏற்படுத்தியது. அதிலும் சிலர் வேட்டை நாயைப் போல் சுற்றிச் சுற்றி வந்தனர். அவள் கண்ணியமாக வாழ்ந்தும் வீண்பழி சுமத்தி அவளை வேதனைப் படுத்தினர். அவளுடைய நேர் மேலதிகாரி ஓர் பெண். நிலைமையைப் […]

குரானின் கருவும் உருவும்

This entry is part 21 of 36 in the series 30 செப்டம்பர் 2012

முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனின் அத்தியாயங்களுக்கான தலைப்புகளில் பல கவித்துவக்குறியீடுகளாகவும், யதார்த்த மொழித் தன்மையாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் இயக்கமாகவும், இயற்கையின் அற்புதங்களாகவும் திகழ்கிற இடி (அர்ரஃது), அந்த ஒளி (அந்நூர்), மலை (அத்தூர்), புழுதிக்காற்று (அத்தாரியாத்), நட்சத்திரம் (அந்நஜ்மு), சந்திரன் (அல்கமர்), கிரகங்கள்(அல்புரூஜ்), விடிவெள்ளி (அத்தாரிக்), வைகறை(அல்பஜ்ர்), இரவு(அல்லைல்), முற்பகல் (அல்லுஹா) காலைப்பொழுது(அல்பலக்) என்பதாக இவை அமைந்துள்ளன. உயிரினங்களின் அடையாளங்களைக் கொண்ட பெயர்கள் பிறிதொருவகை. பசுமாடு(அல்பகறா), கால்நடைகள்(அல்அன்ஆம்), தேனீ(அந்நஹல்), எறும்பு(அந்நமல்), சிலந்தி(அல் அன்கபூத்), யானை (அல்பீல்) என […]

பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்

This entry is part 2 of 36 in the series 30 செப்டம்பர் 2012

கவிதாவஸ்தை வந்து எழுதும் கவிஞர்கள் மத்தியில் கவிதைகளை சுகமாகப் படிக்க முடிவது பத்மஜாவின் எழுத்துக்களில்தான். வலைப்பதிவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கவிஞர் பத்மஜா. தனிமையும் அன்பும் பரிவும் நிரப்ப இயலாத வெற்றிடங்களும் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளில் மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் இப்போதெல்லாம் பாதைகள் இருண்டு கிடப்பது குறித்து பெரும் சோகத்தைக் கிளர்விக்கிறது. நாய்க்குடைகள் மலர்வது சிறுமியின் பருவமாற்றத்தை சட்டென்று புரிய வைக்கும் கவிதை. ஓவியப் பார்வையை ஓவியக்கண்காட்சிகளில் நாம் யோசித்து யோசித்துப் பார்க்கும் ஒரு ஓவியத்தின் மீதான மனிதர்களின் […]

முன்குரானிய சமயப்பிரதிகளில் ஏகம்

This entry is part 39 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஹெச்.ஜி.ரசூல் 1) இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன.  வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக.  அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை.  அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) […]

நாள்தோறும் நல்லன செய்வோம்.

This entry is part 34 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை உயிரினங்கள் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பற்பலவாகும். காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் ஆற்றுவது,  மின்சாரக் கட்டணம் கட்டுவது, தொலைபேசிக் கட்டணம் கட்டுவது, குழந்தைகளின் கல்வியில் நாட்டம் செலுத்துவது, உறங்குவது என்பது போன்ற பணிகள் நாள்தோறும் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட இதுபோன்றே பற்பல பணிகள் உண்டு.  இப்பணிகளைக் குறைவின்றிச் […]

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்

This entry is part 33 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் […]

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு

This entry is part 28 of 41 in the series 23 செப்டம்பர் 2012

எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை என்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த எழுத்தாளர்களுக்கு உதவும் பணி மூலம் இதுவரை முப்பது நூல்களை இலவசமாக வெளியிட்டு வசதியற்ற எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆதரவளித்து ஈழத்து இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அந்த வகையில் […]