தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு

This entry is part 28 of 41 in the series 23 செப்டம்பர் 2012

எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை என்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த எழுத்தாளர்களுக்கு உதவும் பணி மூலம் இதுவரை முப்பது நூல்களை இலவசமாக வெளியிட்டு வசதியற்ற எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆதரவளித்து ஈழத்து இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அந்த வகையில் […]

பழமொழிகளில் கனவும் நினைத்தலும்

This entry is part 22 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ் ஆழ் மனதிலேயேஆசைகள், ஏக்கங்கள் உள்ளிட்டவைகள் பதிவுகளாகப் பதிகின்றன. இத்தகைய பதிவுகள் நாளடைவில் கனவுகளாக வெளிப்படுகின்றன. கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் சாதனங்களாகவும் அமைகின்றன. இலக்கியங்களில் இடம்பெறும் கனவுகள் அனைத்தும் இலக்கிய உத்தியாக இலக்கிய […]

இந்த வார நூலகம் – வணிக இலக்கியமும் புனைக்கதைகளும்

This entry is part 19 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். போரூர் நூலகத்தில், நாளிதழ்களுக்குத்தான் கூட்டம் அலைமோதுகிறது. இதழ்களைக், குறிப்பாக இலக்கிய இதழ்களைச், சீந்துவாரில்லை. வேலை தேடும் வசதியில்லாத இளைஞர்கள், கிடைக்கிற பேருந்துப் பயணச்சீட்டுகளில், குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் கிடைக்காதவர்கள், வார, மாத இதழ்களின் வெள்ளை மார்ஜின்களை லாவகமாகக் கிழித்துப் பயன்படுத்துகிறார்கள். நான் பார்த்த வரை, யுவதிகள் கண்ணில் படக்காணோம். ஒரு வேளை அந்த வேலையை, அவர்களுக்காக, அவர்களின் தந்தைமார்கள் செய்து கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில், குறிப்பேட்டுடன் போன என்னை விநோதமாகப் பார்த்தவர்கள் உண்டு. […]

அ.குணசேகரனின் ‘இல்லாமல் இருத்தல்’-ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்பு

This entry is part 16 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மணி.கணேசன் தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு வாழும் ஒரு கதைச்சொல்லிச் சமூகமாகும்.தம் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகக் கற்பனை கலந்து சுவைபட எடுத்துக்கூறுவதில் இது தன்னிகரற்றது.நாட்டுப்புறங்களில் வாய்மொழியாக வழங்கி வந்த பல்வகைப்பட்ட கதைகள் முறையாக எழுதப்படாமலும் தொகுக்கப்படாமலும் இலக்கியமாகப் பதிவுசெய்யப்படாமலும் இருந்த காரணங்களால் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் மேலை இலக்கியப் புத்திலக்கிய வரவாகச் சிறுகதையைக் கருதத்தொடங்கியது. ஆதலாலே,தமிழ்ச்சிறுகதையின் பிதாமகர் வ.வே.சு.ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதை தமிழில் உருவான முதல் சிறுகதையாக உருவெடுத்தது என்றுதான் கூறவேண்டும்.மேலைநாட்டார் வகுத்துத்தந்த சிறுகதை […]

கேட்பினும் பெரிது கேள்! – புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..

This entry is part 5 of 41 in the series 23 செப்டம்பர் 2012

கவிதை தொன்மையானது. எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகின் எல்லாப் பாகங்களிலும் பயனில் இருந்து, பல துறையைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு உணர்வுகளின் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் கூடவே கவிதை வாழ்க்கைக்குத் தேவையா எனும் கேள்வியும் இருந்து வரவே செய்திருக்கிறது. அதற்கு விடையாக வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து காட்டியிருக்கிறது, காட்டிக் கொண்டிருக்கிறது கவிதை. தனது முதன்மையான குறிக்கோள் அழகை ஆராதிப்பதிலோ, தத்துவங்களைப் பொழிவதிலோ, கருத்துக்களை நம்ப வைப்பதிலோ அன்றி கற்பனையோ […]

பொன் குமரனின் “ சாருலதா “

This entry is part 1 of 41 in the series 23 செப்டம்பர் 2012

யாவரும் நலம் படத்திற்குப் பிறகு, நல்லதொரு திகில் படத்தைப் பார்த்த அனுபவம். பாடல்கள் மட்டும் இல்லாதிருந்தால், நல்லதொரு ஹாலிவுட் படத்தின் மொழி மாற்றம் என்றே சொல்லலாம். தேசிய விருதுக்கு தகுதியான நடிகைதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறார் பிரியா மணி. வாலி அஜீத்தை, பெண் பாத்திரமாகக் கற்பனை செய்து கொண்டால், அதுதான் லதா. அப்படியொரு வன்மம் கண்களில். சபாஷ். அமானுஷ்ய கதையில், வெறும் பயமுறுத்தலை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், சில எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு வந்ததற்கு, இயக்குனரைப் […]

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..

This entry is part 30 of 31 in the series 16 செப்டம்பர் 2012

‘இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..’ செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம். ஒவ்வொரு […]

பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு

This entry is part 25 of 31 in the series 16 செப்டம்பர் 2012

   ச. வெங்கடேஷ் நூல் தொகுப்பாளர் சி. ரவி சொலவது போல் அரசியல், கலை, இலக்கிய அபிப்ராய மாறுபாட்டின் மேடையாகவும், திருப்பூர் படைப்பாளிகளின் சிந்தனை பகிர்தலின் பொது தளமாகவும் அமைந்துள்ளது இத்தொகுப்பு..   தனி மனிதனின் உள்ளார்ந்த மன அவசங்கள், அறச்சீற்றங்கள், போலித்தனங்கள், யதார்த்த உண்மைகள் போன்றவற்றை வெளிக்காட்டும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவை இந்நூலில் பதுவாகியுள்ளன.   சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை, கலாச்சார சீரழிவைத் தடுக்கும் முயற்சிகள் மறைந்து போன வரலாற்று நிகழ்வுகள், […]

எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்

This entry is part 24 of 31 in the series 16 செப்டம்பர் 2012

சுப்ரபாரதிமணியன் கிறிஸ்துவ உலகத்தோடு பிரஞ்சு புரட்சியைச் சேர்த்துப் பார்க்கிற நோக்கிலேயே முஸ்லீம் உலகத்தோடு சமீப கிளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார் “காஞ்சா இலையா” இரோப்பிய கிறிஸ்துவம். அரசபரம்பரை, நிலப்பிரபுத்துவ அமைப்பால் பல நூற்றாண்டுகளாக இறுகிப் போய் கிடந்தது. இஸ்லாமிய குடியுரிமை அமைப்புகள் அவர்களின் சொந்த நடைமுறைகளாலேயே உருவானவை என்கிறார். எகிப்தின் கிளர்ச்சி சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு அஹிம்சை போராட்டமாகவே ஓரளவு வடிவெடுத்து புரட்டஸ்டண்ட் உட்பிரிவுகளால் பிளவுண்டது. ஜரோப்பாவில் புரட்டஸ்டன்ட் சமூகமே பல்வேறு எழுச்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதே சமயம் […]

சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது

This entry is part 20 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். சிறகின் ஆரம்பமே, கல்வெட்டு சொர்ணபாரதி நிகழ்த்திய, ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில்தான் நடந்தது. கவிஞர் பால்நிலவன் “ தேவநேயப்பாவாணர் சிற்றரங்குக்கு வாருங்கள்.. அங்கே சில தோழர்களைச் சந்திக்கலாம் “ என்றார். போனதில், ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கும் முன்பே, கையில் கல்வெட்டும், ஒரு கவிதை நூலும் திணிக்கப்பட்டது. அப்படி அற்¢முகமானவர்தான் முகவை முனியாண்டி (எ) சொர்ணபாரதி. சில காலம் தொடர்பில்லாமல் போய், திடீரென்று என் வீட்டு கடிதப் பெட்டியில் கல்வெட்டு! ஆகஸ்டு இதழ்! […]