Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்

  ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்

    அழகியசிங்கர்                     இந்தக் கதை சற்று வித்தியாசமானது.  இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.           நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது.           பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும்.  ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும்.            முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.              […]


 • எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 

  எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 

      மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித மனத்தைச் சீண்டுகிறது. இதன் செல்வாக்கு ஆண் பெண் உறவுகளின் நிலைப்பாட்டில் தீவிரம் கொள்ளும் போது ஏற்படும் காயங்கள், வலிகள் உறவின் உன்னதத்தைச் சீரழிக்க முனைகின்றன. குறிப்பாகக்  குடும்ப உறவுகளில் இயங்கும் கணவன் மனைவியிடையே அவர்களது அன்னியோன்னியம் அல்லது பிளவுபடுதலில் முக்கியத் துவம் பெறுகிறது. நான் […]


 • வெறியாடல்

  வெறியாடல்

                                                       வெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே  நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். […]


 • கவிதையும் ரசனையும் – 11

    அழகியசிங்கர்           இப்போது நான் எழுதப்போகிற கவிதைத் தொகுதி சற்று வித்தியாசமாக இருக்கிறது.  இந்தக் கவிதைப்புத்தகத்தின் பெயர் ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி.’  இதுவும் மணல்வீடு பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது. கவிதைகளை எழுதியவர் செல்வசங்கரன்.            இதில் சில கவிதைகளைக் குறித்துதான் பேசப் போகிறேன்.  இக் கவிதைகளை எதுமாதிரி வகைமைப் படுத்துவது என்று தெரியவில்லை.           பெரும்பாலான கவிதைகள் அதீத மன நிலையில்  எழுதப் பட்டிருக்கின்றனவா என்று நினைக்கிறேன்.            ஒரு சாதாரண நிகழ்ச்சி அசாதாரணமாகப் பார்க்கப் படுகிறதா என்று தோன்றுகிறது.           […]


 • ஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்

                        அழகியசிங்கர்                     சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “முறையிட ஒரு கடவுள்”  என்ற தொகுப்பிலிருந்து ‘தமாஷ்’ என்ற கதையைப் படித்தேன். ஆரம்பிக்கும்போது நம் முன்னால் இருப்பவரைப் பார்த்து பேசுவதுபோல் கதை செல்கிறது.           நம் முன்னால் இருப்பவர் ஒரு சஞ்சிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார்.  யாருடைய கதை?  சர்வோத்மன் சடகோபன் கதையைத்தான்.           இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல் தொடங்குகிறது. எதிரில் இருப்பவருடன்.  ஆனால் எதிரிலிருப்பவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.           சொல்பவர் […]


 • வளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை

  வளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை

                                  முனைவர் ந. பாஸ்கரன் சிறுகதை, புதினம், கவிதை [மரபு, நவீனம்], கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வருபவர் வளவ. துரையன். அவர் எழுதி இதுவரை வந்துள்ள நூல்களைப் பற்றிய பருந்துப் பார்வையாகும் இது. அவரின் முதல் நூல் “தாயம்மா” இது சிறுகதைத்தொகுப்பாகும். இதில் மொத்தம் 13 சிறுகதைகள் உள்ளன. ”தாயம்மா” ஒரு முக்கியமான கதை. அதுவே நூலின் பெயராக அமைக்கப்பட்டுள்ளது. ”தாயம்மா செத்துக் கிடந்தாள்” எனும் அமங்கலச் சொற்றொடருடன் கதை […]


 • அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

        இந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் என்ற நூல். பணம் சம்பாதிக்க மட்டுமே துபாய்க்கு செல்வார்களென அறிந்திருக்கிறோம். துபாய்க்கு எத்தனை பெயர்கள் வழக்கில் இருக்கின்றன, எந்தக் காரணங்களால் அந்தப் பெயர்கள் வந்தன போன்ற வேர்ச்சொல் விபரங்களுடன் வரலாறு, சமூகம், பொருளாதாரமென பல […]


 • ஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 

      ஸிந்துஜா    நான் பொதுவாக யாரையும் போய்க் கட்டிக் கொள்ள மாட்டேன். அதே சமயம் கைகுலுக்க வருபவரின் கைகளைக் குலுக்குவதில் எந்தவிதத் தயக்கமும் ஏற்பட்டதில்லை. எனக்குப் பிடித்தவர்களைத் தேடிச் சென்று பார்ப்பதிலும், என்னைத் தேடி வருபவர் களிடத்திலும்தான் நட்பு தோன்றியிருக்கிறது. எண்ணிக்கையில் இது குறைவாக இருந்தாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.   எதற்காக இந்தப் பீடிகை? இன்று அழகியசிங்கரின் ஒரு கதையைப் படித்தேன். மிகவும் உற்சாகமடைந்தேன். அழகியசிங்கர் என் சிறிய நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர். அலட்டல் இல்லாத மனிதர். அவருடைய கட்டுரைகளில் ‘தெரியாது’ […]


 • தோள்வலியும் தோளழகும் – வாலி

  தோள்வலியும் தோளழகும் – வாலி

                                         இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன்.  நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்” என்று திருமால் கட்டளையிட தேவர்கள்  எல்லோ ரும் பூமிக்கு வந்தார்கள். அப்படி இந்திரனின் அம்சமாக வாலியும் சூரியனின் அம்சமாக சுக்கிரீவனும் பிறக்கிறார்கள்.               கிட்டுவார் பொரக்கிடக்கின் மற்றவர்                                         பட்ட நல்வலம் பாகம் எய்துவான்.           [கிஷ்கிந்தா காண்டம்]   [நட்புக்கோட் படலம் 40]                   வாலியோடு யாராவது […]


 • தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)

  தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)

                                                 கும்பகணன் என்றதுமே நம்நினைவுக்கு வருவது தூக்கம் தான். ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில்”கும்பகருணனும் தோற்று உனக்கே துயில் தந்தானோ?” என்று அவன் தூக்கத்தைப் பதிவு செய்கிறாள். இலக்குவனால் மூக்கறுபட்ட நிலையில் சூர்ப்பணகை                  அரக்கர் குலத்து அவதரித்தீர்!         கொல் ஈரும் படைக் கும்ப                 கருணனைப்போல் குவலயத்துள்        எல்லீரும் உறங்குதிரோ? யான் அழைத்தல் கேளீரோ என்று இவனுடைய தூக்கத்தைத் தெரிவிக்கிறாள்                  இவன் ஆறு மாதம் தூங்கி ஆறுமாதம் விழித்தி ருப்பான் […]