
அமீதாம்மாள்
சென்றுவிட்ட புகையே
திரும்ப ஏன் வந்தாய்?
இங்கே
பொது வெளியில்
புகைவது குற்றம்
தேன் மழையை
தென்றலை
தெவிட்டத் தெவிட்ட
அள்ளிவரும்
தென்மேற்குக் காற்றே
புகையைக் கழுவிவிட்டு
புனிதமாய் வா
ஓ புகையே
உன் காற்றுக் காதலன்
கடல்வெளியில் காத்திருக்க
இங்கு ஏன் வந்தாய்
ம். போ
அவனைக் கூடிவிடு
அவனோடு கரைந்து விடு
வாழ்த்துகிறோம் உன்னை
விலகிவிடு
எங்களை விட்டுவிடு
- போலியான பொலிவு
- சொற்களின் ஊடே சுழலும் பின்நவீனத்துவப் பிரபஞ்சம்: டீன் கபூரின் கவிதைகள் பற்றிய ஓர் ஆய்வு
- சாயத்திரை 30
- மகள்கள்…
- புகைமூட்டம்
- இதுவும் வாழ்வு
- நோயல் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை – நாவல் — வாசிப்பு அனுபவம்
- எதுவும் என்னிடம் கேட்டதில்லை.
- 2. வெங்கதிர் குறையக் கார் தொடங்கியதே
- Compass என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன?