சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு

This entry is part 8 of 11 in the series 12 ஜூலை 2020

அழகர்சாமி சக்திவேல் நான், சிங்கப்பூரில் இருந்து, மலேசியா ஜோஹூருக்கு, அங்கிளைப் பார்க்கப் போவது, இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பல தடவை, போய் இருக்கிறேன். அங்கிளின், உடைந்த பற்களை, எனது செலவில், சரி செய்ய ஒரு முறை. அங்கிளின் பிறந்த நாள் கொண்டாட ஒரு முறை. இப்படிப் பலமுறை, அங்கிளைப் பார்க்க நான் போய் இருக்கிறேன். அப்போதெல்லாம், அங்கிளின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். ஜோஹோரின் சிட்டி ஸ்கொயர் ஷாப்பிங் மாலில், என்னைக் காண, தவறாது […]

யாம் பெறவே

This entry is part 7 of 11 in the series 12 ஜூலை 2020

கௌசல்யா ரங்கநாதன்       என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி யாரை விட்டது.? நான், என் கணவர், ஒரே மகன், நல்ல வேலையில் இருப்பவன், மருமகள் (அவளும் கை நிறைய சம்பாதிப்பவள்தான்) என்று அமைதியாய் வாழ்க்கையை நடத்திகொண்டிருந்த வேளையில் தான் ஒரு நாள் என் அண்ணன் குமார் என்னை தேடி வந்தார் கிராமத்திலிருந்து..வறுமையில் வாடும் குடும்பம் அவருடையது..ஒரே மகன் +2 முடித்திருந்த வேளையில், அவனை மேலே […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

This entry is part 11 of 11 in the series 12 ஜூலை 2020

1 – கங்கா ஸ்நானம்  அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.)  சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன்   திருடிச் சென்று (அம்மாடி ! அகலிகையைத் திருடுகிறான், குதிரையைத் திருடுகிறான், இன்னும் வேறு ஏதாவது லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை…) கபில முனிவரின் குடில் அருகே கட்டி வைக்க, குதிரையைத் தேடி வரும் அறுபதினாயிரம் புத்திரர்களும் […]

அப்பாவும் பிள்ளையும்

This entry is part 6 of 11 in the series 12 ஜூலை 2020

சந்தோஷ் குமார் மோகன் காலை பற்றும் மழலை யை அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான், தோள்களில் வைத்துக் கொண்டாடுவான், பல்லக்கு தூக்கி அழகு பார்ப்பான், தன் பிள்ளைகளை உயரத்தில் வைத்தே பழக்கப்பட்ட இதயம் அப்பா…!!! *********************** அவனை தூக்கி விளையாடிய உப்பு மூட்டை இனிப்பு மூட்டை ஆனது. ************************ நித்தம் ஏதாவத ஒன்றை கேட்கிறான்,  நானும் நாளைக்கு வாங்கி தருகிறேன் என்றே நித்தமும் கடக்கிறேன், நேற்றும் இதை தான் சொன்ன என்று அவன் கேட்டதே இல்லை,  […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 11 in the series 12 ஜூலை 2020

மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது இன்றல்ல நேற்றல்ல. மம்முட்டி காற்றுபோல்; அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும் அபத்தம் வேறிருக்க முடியாது. மம்முட்டி முழுநிலவுபோல். மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு மிகு தொலைவில். மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத இசைக்கோர்வை. செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட மறந்துபோய்விடுகிறது […]

வெகுண்ட உள்ளங்கள் – 7

This entry is part 4 of 11 in the series 12 ஜூலை 2020

கடல்புத்திரன் ஏழு இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு ! இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக, இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாகவே இருந்தன. இளைஞர்கள் பழைய பிற் போக்குத் தனங்களை கட்டியழ விரும்பாமல் வீட்டை விட்டு , விட்டு, ஒடி, ஒடி ச் சேர்ந்தார்கள். அதனால் பொதுவாக எல்லாரும் அவர்களை மரியாதை உணர்வுடன் பார்த்தார்கள். இவன் எப்ப? எப்படி? போனான். நிச்சயம் அறிய வேண்டும் என்று தீர்மானித்தான் தன்னை சிறிது அவனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் செய்தான். […]

கட்டங்களுக்கு வெளியே நான்

This entry is part 3 of 11 in the series 12 ஜூலை 2020

க. அசோகன் அன்புள்ள அப்பா, இந்தப் பதிவை என்னவென்று வகைப்படுத்த முடியாத இந்த முயற்சியை நீங்களே முதலில் அறிய வேண்டும் என்ற ஆவலில் இதை எழுதுகிறேன். இதனை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் நியாயமான அல்லது தேவையான சில காரணங்கள் கிடைக்காததால் இதை எழுதுகிறேன். எல்லா பொதுக்காரணங்களுக்கும் பின்னால் சில காரணிகள் இருக்கும் என நான் தீர்க்கமாகவே நம்புகிறேன். சில புத்தகங்களின் தீவிரத்தன்மை நம்மை முழுமையாக ஆட்கொண்டு அதன் கருத்துக்களினாலோ […]

அவளா சொன்னாள்..?

This entry is part 2 of 11 in the series 12 ஜூலை 2020

          என்ன தப்பு நான் சொல்றதுல…? – அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அவரின் கேள்விக்கு வேறு எந்தவிதமான பதிலும் ஒப்புடையதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் அதை இவளிடம் போய்ச் சொல்கிறோமே என்பதுதான். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில்  நிலைத்து நிற்பவள். உலகமே தலைகீழாய்ப் போனாலும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி…!       யாராவது அப்படி இருப்பாங்களா? நீங்க பேசுறது அதிசயமா இருக்கு…எதுக்கு அனாவசியத்துக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு…? சிவனேன்னு […]

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

This entry is part 10 of 11 in the series 12 ஜூலை 2020

கோ. மன்றவாணன்      பாடல் வாய்ப்பு இல்லாமல் வருந்திய வாலி அவர்கள் ஊருக்கே போய்ப் பிழைத்துக்கொள்ள முடிவு எடுத்த போது கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டார். அந்தப் பாடல் தந்த ஊக்கத்தால் ஊருக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டார் என்றவாறு ஒரு நிகழ்வை முகநூலில் ஒருவர் எழுதி இருந்தார். அது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவை அப்படியே தருகிறேன்.      “பாடலாசிரியராக வாய்ப்புக் கேட்டு அலைந்து, அலைந்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற கவிஞர் வாலி, சென்னை […]

சலனங்களும் கனவுகளும்

This entry is part 1 of 11 in the series 12 ஜூலை 2020

முல்லைஅமுதன் அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது? பயத்தினால் கண்கள் இருண்டது. ‘இண்டைக்கும் அடிவிழப்போகுது’ மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது. அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அதுவும் இல்லாட்டி கிடைக்கிற பொருளால் ஓங்கி விளாசுவார்.கோபம் வரும்போது என்ன செய்வதென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. முன்பொருமுறை கூட வின்ஸரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரவும்,சந்தியில் திரும்பிய பஸ்ஸுக்குள்ளிருந்த அப்பா காணவும் சரியாக இருந்தது..வீட்டுக்குப் போக […]