author

வால்ட் விட்மன் வசன கவிதை -2 மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை

This entry is part 7 of 31 in the series 16 டிசம்பர் 2012

[Walt Whitman Image] (1819-1892) (புல்லின் இலைகள் -1) மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி […]

பழங்கால திருமண வழக்கங்களிலிருந்து விடைபெற விரும்பும் ஆப்கானிஸ்தான்.

This entry is part 1 of 31 in the series 16 டிசம்பர் 2012

பாராங்கிஸ் நஜிபுல்லா ஒரு இளம் வாலிபர் தன் மனைவியை திருமணம் செய்ய ஏராளமாக செலவு செய்வதை பார்த்து ஆப்கானிஸ்தானில் யாரும் அதிர்ச்சியடையமாட்டார்கள். வருங்கால மனைவியின் பெற்றோருக்கு ”வால்வார்” எனப்படும் தொகையை கொடுப்பது ஏறத்தாழ பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஆகலாம். இது தவிர திருமணச் செலவும் ஏராளமாகும். இப்போது நாட்டின் அரசாங்கத்தின் உள்ளேயே பொருளாதார வகையில் நசுக்கக்கூடிய இப்படிப்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்த இந்த நீண்டகால பாரம்பரிய பழக்கத்தை தடுத்து நிறுத்த இயக்கம் தோன்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் நல அமைச்சகம், […]

பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்

This entry is part 21 of 26 in the series 9 டிசம்பர் 2012

நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள் நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்தான் சென்ற வருடம் தன் மகள் ஷமின் இறந்தாள் என்பதை ஜினோ ஒப்புகொள்ள கஷ்டப்படுகிறார். “என்னுடைய மகள் இறக்கவேண்டிய அவசியமில்லை” என்று பத்து குழந்தைகளுக்கு தாயான 62 வயது ஜினோ மெல்ல சொல்கிறார். ”சமிமின் பாவங்களை என்னால் மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை. […]

அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)

This entry is part 6 of 26 in the series 9 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா     28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக்  காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும் நம்புகிறேன். மச்சாவதாரம் தொடங்கி அனைத்து அவதாரங்களும்  சார்ந்த இலக்கியங்கள் இந்தப் புவியில் உயிரினங்களின் தோன்றத் தொடங்கியதிலிருந்தான பரிணாம வளர்ச்சியையே எடுத்துச் சொல்லுகின்றன.  மனிதனாய்ப் பிறக்கும் எவரும் ராமனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதையே […]

ஆத்ம சோதனை

This entry is part 23 of 26 in the series 9 டிசம்பர் 2012

மு.கோபி சரபோஜி இலக்கணம் படித்து இலக்கியம் படைக்க வா என்றபோது இடித்துரைத்தோம். மரபுகளை கற்று மரபை மீறு என்றபோது மறுப்பு செய்தோம். புதுக்கவிதை செய்து புது உலகம் படைக்க புறப்பட்டவர்கள் நாங்கள் – என்றோம். இறுக்கங்களை இலகுவாக்கி மறுப்புகளை மரபாக்கியவர்களோடு சேர்ந்தோம். நம் கூட்டணியின் கூட்டல்களில் குயில்களின் கூவல்களை கேட்க வைத்தோம். கால ஓட்டத்தில்………… பாதை காட்டியவர்கள் பயிராய் வளர பாதசாரியாய் வந்த நாமோ பதர்களாகி போனோம். அளவில்லா கற்பனையில் அர்த்தமில்லா அனுமானத்தில் அவரவர் இஷ்டத்திற்கு எழுதிக் […]

வந்த வழி-

This entry is part 20 of 26 in the series 9 டிசம்பர் 2012

-முடவன் குட்டி ” வேய்..  கலீல் …வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா  நான் என்ன செவுட்டுப் பெயலா..? ஏன் இப்படி சத்தம் போடுறீரு..? என்றார். காட்டுவா மேல் மூச்சு வாங்க, மேலும் தொடர்ந்தார்-சத்தமாகவே.: “பெரிய தெரு சேயன் வூட்ல, ரஜப் பதினாலுல கல்யாணம்.. ஆறு மாசத்துக்கு பெறவு இப்பதான் கல்யாணம்  வருது. பெரிய தெருக்காரங்க […]

உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1

This entry is part 24 of 26 in the series 9 டிசம்பர் 2012

உன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது முசுலிம்களுக்கு எதிரான படம் என்று சிலர்  வாதிட்டார்கள். அதே போல, இரண்டு வாரங்களுக்கு முன்பு, துப்பாக்கி படத்தில் உள்ள முசுலிம் எதிர்ப்பு காட்சிகளைப் பற்றி நேர்படப் பேசு என்ற நிகழ்ச்சியில் விவாதம் நடந்த போது, சினிமா விமர்சகர் திரு. அஜயன் பாலா, உன்னை போல் ஒருவன் முசுலிம்களுக்கு எதிரான படம்; அதை பற்றி யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார். இதை அடுத்து, என் மனதில் அடங்கிப் போய் கிடந்த […]

மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்

This entry is part 2 of 26 in the series 9 டிசம்பர் 2012

(செய்தி: ரெ.கா.) மலேசியாவில் தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்ட 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசை இலங்கை அறிஞர், கவிஞர், விமர்சகர் மு.பொன்னம்பலம் வென்றார். அவருடைய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு அமெரிக்க டாலர் 10,000 பரிசாக வழங்கப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் தோட்ட மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மு.பொ.நேரில் வந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார். இதே நிகழ்வில் மலேசிய நூல்களுக்கான சிறப்புப் பரிசை […]

சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்

This entry is part 1 of 26 in the series 9 டிசம்பர் 2012

  இங்கிலாந்தில்,  பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக இருக்கும் ஹைட்ரோபோனிக்  விவசாய பண்ணை. இது  முட்டைக்கோஸ் வகையான லெட்டூஸ் பயிரை விளைவிக்கிறது. இருக்கும் இடத்தை முழுவதும் உபயோகப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொட்டிகளில் மண் இல்லாமல் கன்வேயர் பெல்ட் மூலமாக  எப்போது சூரிய வெளிச்சம் வேண்டுமோ அப்போது தரும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. முழு விவசாயமும் கணினி மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சதுர மீட்டரில் 112 லெட்டூஸ்களை உற்பத்தி செய்யப்படுகிறது.     ஜெர்மனியில் ஒரு […]

பிஞ்சு மனம் சாட்சி

This entry is part 28 of 31 in the series 2 டிசம்பர் 2012

முகில் தினகரன்     அந்த இடத்தை சோகம் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்ததால் ஒரு வித அவஸ்தையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.  தலைக்குக் கைகளைத் தாங்கல் கொடுத்தபடி வியாதியஸ்தனைப் போல் திண்ணையில் விரக்தியுடன் அமர்;ந்திருந்தான் விஸ்வநாதன்.       சரியாக அரை மணி நேரத்திற்கு முன்புதான் ஏற்கனவே எரிந்து கரிக்கட்டையாகிப் போயிருந்த தங்கை அமுதாவின் உடலை சுடுகாட்டில் மீண்டும் ஒரு நெருப்புப் படுக்கையில் இட்டு தீ நாக்குகளுக்கு தீனியாக்கி விட்டு வந்திருந்தான்.       அவளைப் பற்றிய நினைவுகளே […]