பொதுவாக வெகு ஜன ஊடகத்தில் இயங்குபவர்களும் சரி, சாதாரணர்களும் சரி வாழும் முறையை இரு கூறுகளாக பிரித்துக்கொள்கிறார்கள். தனக்கு என்று வரும்போது ஒரு நிலையையும், சமூகம்/பொதுநிலை என்று வரும்போது ஒரு நிலையையும் எடுக்கிறார்கள். அதாவது யதார்த்தத்தை அணுகும்போது ஒரு வழிமுறையையும், அது தொடர்பான கருத்துக்களை பேசும்போதும் எழுதும்போதும் வேறு விதமான நிலையையும் எடுக்கிறார்கள். வெகுஜன ஊடகத்தில் இயங்குபவர்கள் பெரும்பாலும் இதை தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ”சொல்வேறு, செயல் வேறு” என்று தெளிவாக வரையறுத்துக்கொண்டு விடுகிறார்கள். […]
மேலாண்மை தத்துவத்தில் விவாதங்கள் நடைபெறும் முறைகளை பலவாறாக வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு விவாத முறையும் வெவ்வேறான உத்திகளை கொண்டுள்ளது. இவற்றில் Brainstorming, Reverse Brainstorming, Charette Procedure, Crawford Slip Writing Technique, Reframing Matrix, Concept Fan, Appreciative Inquiry, Affinity Diagrams போன்றவை சில உத்திகளாகும். சில சமயங்களில் இதில் எந்த முறையிலும் அடங்காமல் சில விவாதங்கள் நடைபெறும். அதை பற்றி ஜாலியாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நீங்களும் படிச்சு சிரிச்சு சந்தோசமாக இருங்க. […]
கல்வி கரையில! கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார். ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. (மாணவன் என்பது என் வசதிக்கான குறியீடு அதில் மாணவியும் அடக்கம் எனக் கொள்க) தொடக்கப் பள்ளி நகரத்து பள்ளிகளில் மாணவர்களை […]
திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு பகையுணர்ச்சி பாராட்ட முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது (சிலரின் உண்மையான பெயர்கள் கூட தெரியவில்லை, சிலர் பல பெயர்களில் பின்னூட்டம் இடுகிறார்கள்.) அந்த முகம் தெரியாத மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் மனித நேயம் மிக்க […]
ஒரு மழை நாளின் மதிய வேளையில் தொலைந்து போன பொருளை பரணில் தேடிய போது கிடைத்து தொலைத்தது தவிக்கவிட்டு எப்போதோ தொலைந்து போன அப்பாவின் கிழிந்து போன சட்டை அ.லெட்சுமணன்
சமீபத்தில் சென்னையில் உள்ள இந்திய அளவில் பிரபலமான சங்கிலி தொடர் கொண்ட (Chain of Book Stores) ஒரு புத்தக கடைக்கு செல்ல நேர்ந்தது. குளிரூட்டப்பட்டு மிக நேர்த்தியாக புத்தகங்கள் தலைப்பு வாரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையை சுற்றி சுற்றி வந்தேன். நான் தேடியதை காணோம். இரசீது போட்டுக்கொண்டிருந்த யுவதியை பார்த்து “ஏங்க, இந்த தமிழ் புத்தகங்கள் எல்லாம் எங்க இருக்கு?” என்று கேட்டேன். வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தார். என்னை அந்த சூழலில் […]
தூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின் பின்னிரவு பொழுதில் மூன்றாம் வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம் ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால் யாருக்கோ மோசமான உடல்நிலை திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர ஜன்னலை சாத்தி போர்வையை இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம் ரெண்டு நாளாச்சு அவருக்கு என்ன ஆச்சு யாரவது சொன்னால் தேவலை. ********** அ.லெட்சுமணன்
சமீபத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலையாக வெளியே செல்வதற்கு வர நேர்ந்தது. ஒரு குடை ரிப்பேர் செய்பவர் குடைகளை சரி செய்து கொண்டிருந்தார். சரி. மழை காலம் வந்து விட்டது, வீட்டிலிருந்த பழுது பட்ட குடைகளை எடுத்து வந்து சரி செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு சென்று குடைகளை எடுத்து வந்து கொடுத்தேன். பழுதான குடைகளை ஆராய்ந்து கொண்டே என்னுடன் பேச ஆரம்பித்தார். சார், எங்க வேலை பாக்குறீங்க என்று ஆரம்பித்தார். சொன்னேன். பார்க்க வாட்ட […]
என்ன தான் தங்க கோவில் என்றாலும் இடிதாங்கி என்னவோ அலுமினியத்திலும் தாமிரத்திலும் தான் இருக்கிறது. அ.லெட்சுமணன்
சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை. ஆனால், ஒரு கேபிள் டிவி ஒயர் வீட்டிற்குள் போவதை பார்க்க முடிந்தது.(வான் வழியாக வந்ததெல்லாம் கேபிள் வழியாகவும், கேபிள் வழியாக வந்ததெல்லாம் வான் வழியாகவும் வருவதை நினைத்துப்பார்க்க முடிந்தது. உபயம் – சுஜாதா சார்) […]