author

அம்மா

This entry is part 42 of 44 in the series 22 ஏப்ரல் 2012

நீ ஊட்டிய அமுதில் என் நகங்களும் பசியாறின உன் தாலாட்டில் இமைகள் சுமையிறக்கின உன் விரல் பிடித்து நடந்தேன் விரல்கள் விழிகளாயின உன் கோழிக் குஞ்சிகளை சாயம் ஏற்றாமல் மேயவிட்டதில்லை மிரண்டன பருந்துகள் பசலையும் அவரையும் சொகுசாய்ப் படர்ந்தன முளைவிடும்போதே நீ விரித்த பந்தலில் கத்தரிப் பூச்சிகள் காணாமல் போயின நீ தூவிய சாம்பலில் வாடிக்கைக் காகங்கள் கன்றோடு பசு குஞ்சுகளோடு கோழிகள் இவைகளோடு நானும் பசியாறாமல் நீ பசி உணர்ந்த தில்லை அன்று  அடைமழை நம் […]

இறக்கும்போதும் சிரி

This entry is part 34 of 40 in the series 1 ஏப்ரல் 2012

உழைத்துச் சேர் உறிஞ்சிச் சேர்க்காதே கன்றுண்ட மிச்சமே கற செயலால் நில் செல்வத்தால் நிற்காதே சுமையாய் இராதே சுமைதாங்கியாய் இரு ஈந்து கொண்டிரு எறிவதை ஈயாமலிரு அந்நியமாக்காதே சொந்தங்களை சொந்தமாக்கு அந்நியங்களை முகமறிய மோதினால் முத்த மிடு துரோகிகளைக் துரத்தி விடு புகழ் அதுவாக வந்தால் எடு வராவிட்டால் விடு உன்னால் அழுதோரை உனக்காக அழுவோரைத் தொழு ஒன்றுக்கு நூறு தரும் மண் அந்த மண் உனைத் தின்னுமுன் மண்ணாகு இத்தனைக்கும் சொல் ‘சரி’ இறக்கும்போதும் சிரி […]

ஆணவம்

This entry is part 22 of 42 in the series 25 மார்ச் 2012

‘மின்னலுக்கும் கால்கள் பின்னும் என் வேகம் பார்த்து வேகத்தில் என்னை வெல்பவன் எவன்?’ சூளுரைத்தார் முயலார் சிரம் தாழ்த்தின சில்லரை மிருகங்கள் சிரம் உயர்த்திச் சொன்னார் ஆமையார் ‘நான் வெல்வேன்’ ‘கவிழ்த்துப் போட்ட கொட்டாங்கச்சியே போட்டி எறும்போடல்ல என்னோடு.’ ‘தெரியும் நாளையே நடக்கட்டும் போட்டி ஆனால் ஆனால் போட்டி நிலத்திலல்ல நீரில்’ ‘ஆ! நீரிலா?’ ‘ஆம் நிலமென்று நீர் சொல்லவில்லை நீர் என்று நான் சொல்கிறேன்’ கரவொலித்தன மிருகங்கள் ஆமோதித்தனர் ஆமையாரை ‘தயாராகு. இல்லையேல் தவிடாவாய்.’ மொத்த […]

அன்பளிப்பு

This entry is part 33 of 36 in the series 18 மார்ச் 2012

அந்தக் கவிஞனின் உறுப் பெல்லாம் யாப்பு நரம்பெல்லாம் மரபு அசையும் சீரும் அடி தொழும் துடிக்கும் அவன் எழுத்தில் அந்த வெல்லக் கவிஞனுக்கு பிள்ளைத் தமிழ் எழுத கொள்ளை ஆசை தமிழையே தண்ணீராய்ப் பருகும் தன் தலைவன் மீதே பிள்ளைத் தமிழ் பாடினான் தன் பொன்விழாவில் தந்தான் ஐநூறு பேரை அழைத்தான் மூந்நூறு பேரே வந்தனர் நூலை வாங்கியோர் நூறு பேர் நூலுக்குத் தந்த சில காகித உரைகளில் காசே இல்லை இடுக்கண் களைபவனே உடுக்கை பறிப்பதா? […]

பயணி

This entry is part 29 of 30 in the series 22 ஜனவரி 2012

வீசி எறிந்தால் விண்மீனாகு மண்ணில் புதைத்தால் மண்புழுவாகு அடித்தால் பொன்னாகு பிளந்தால் விறகாகு கிழித்தால் நாராகு தாக்கும் அம்புகளை உன் தோட்டக் கொடிகளுக்குக் கொம்புகளாக்கு புயலிலும் பூகம்பத்திலும் தான் தன் சுழற்சிக்குச் சுருதி கூட்டுகிறது பூமி சுற்றிச் சுற்றி எரிகிறது பொய்த் தீ பொறாமைத் தீ தீ..தீ..தீ.. தீயின் வெளிச்சத்தில் பாதை தெரிவதைக் கவனி. . . பயணி. . . பஞ்சபூதமும் உனக்குள்ளே பரந்தாமனும் உனக்குள்ளே பயணி. . . அமீதாம்மாள்

அமீதாம்மாள்

This entry is part 25 of 41 in the series 13 நவம்பர் 2011

வெள்ளம் குருவிக் கூட்டோடு சாய்ந்தது மரம் என்ன ஆனதோ? நேற்றுப் பொரித்த குஞ்சுகள்   வெள்ளத்தோடு நகர்கிறது கூரை சில தட்டான் பூச்சிகளுடன்   சங்குச் சக்கரமாய்ப் பாம்பு அந்த ஒற்றைச் சுவரில் சில நொடிகளில் மரணிக்கப் போகிறது அதோ அந்த சுவர்ப் பல்லி   வாக்காளர் அட்டை ரேசன் அட்டை வேலை தேடும் சான்றிதழ்கள் பத்திரங்கள் பள்ளிப் புத்தகங்கள் அத்தனையும் ஊறுகின்றன புண்ணாக்காய்   இனி கோழிகூடக் கொத்தாது இருக்கும் அரிசியை   இலவசங்களெல்லாம் பயணிக்கின்றன […]

என் பாட்டி

This entry is part 20 of 53 in the series 6 நவம்பர் 2011

சித்தி சித்தப்பா அத்தை மாமா எல்லாரும் பாட்டியைத் தேடி வருவார்கள் எல்லாரையும் எனக்கு அறிமுகம் செய்வார் சர்க்கரை அளவு கேட்டபின் அவர்களுக்குக் காப்பி சீடை தருவார் பாட்டியின் சகோதரர்கள் வருவார்கள் காலணாவைப் பங்குபோட்ட கதையெல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பார் ஓமவல்லி, துளசி வேம்பு கீழாநெல்லி எல்லாம் கொல்லையில் வளரும் பாட்டியின் பிள்ளைகள் ஈரம் அறிந்து தண்ணீர் விடுவார் தலைவலி காய்ச்சல் என்றால் ஒருகையில் கசாயம் மறுகையில் அரிசியுடன் பாட்டிதான் வருவார் பாட்டியின் சேலைத் துண்டில்தான் இட்டலி வேகும். […]

விருந்து

This entry is part 7 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஒரு நன்கொடைத் திரட்டுக்காக அந்த இரவு விருந்தாம் பத்துப் பேர் மேசைக்கு இரண்டாயிரம் வெள்ளி பொரித்த முழு குருவா மீன் எராலுடன் கனவாய் தந்தூரிக் கோழியுடன் முந்திரி வருவல் வறுத்த சேமியா பொரித்த சோறுடன் புரோகோலி சூப் விருந்து நிறைந்தது வீட்டுக்கு வந்ததும் பசியைக் கிளப்பியது விருந்து பொன்னி அரிசிச் சோற்றில் பூண்டு ரசம் விட்டு ஒரு பிடி பிடித்த பின்தான் வயிறு நிறைந்தது அமீதாம்மாள்

இரண்டு கூட்டங்கள்

This entry is part 3 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  வாழ்த்த ஒரு கூட்டம் தூற்ற ஒரு கூட்டமின்றி வாழ்க்கையே இல்லை   அவன் நெருப்பில் எழுதி நீரில் பொட்டு வைப்பான் நுனி நாக்கசைவில் நோபல் வெல்வான் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் புன்னகை வீச்சில் வெளிச்சமாகும் இரவு தெறிக்கும் ஒரு சொல்லில் எரியும் கடல்வெளி அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் பெயரோ கால்வரி பட்டங்களோ மூன்று வரிகள் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   வரிகளற்ற பட்ஜெட் சாத்தியம் அவனின் […]