சிங்கப்பூரில் இன்னொரு வேலை மீதமிருந்தது.அது தேசியச் சேவை ( National Service ). சிங்கப்பூர் குடிமகன்கள் அனைவருமே கட்டாயமாக இரண்டு வருடங்கள் இராணுவத்தில் சேவை புரியவேண்டும். . உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் உடன் சேர்ந்தாகவேண்டும். இதன் மூலமாக ஒழுக்கமும் நாட்டு பற்றும் இளம் வயதிலேயே உருவாகும் வாய்ப்பு உள்ளதென்று நம்பப்படுகிறது. நான் உயர்நிலைக் கல்வியை முடித்ததும் தமிழகம் சென்றுவிட்டேன். அதனால் தேசியச் சேவையில் சேராமலிருந்தேன். தற்போது சிங்கப்பூர் வந்துள்ளதால் அதில் கட்டாயமாகச் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 183. இடி மேல் இடி சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழ் செல்லாது என்றனர். நான் இந்தியாவிலேயே சிறந்த வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிரசித்திப் பெற்ற மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ( University of Madras ) பட்டம் பெற்றவன்.இரண்டுமே உலகப் புகழ்மிக்கவை. ஆனால் அதைக்கூட சிங்கப்பூரில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டனர். இதன் உண்மையான உள்நோக்கம் தெரியவில்லை. இந்தியாவில் பணம் தந்து பட்டம் வாங்கலாம் என்ற தவறான […]
அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864 இல் தொகையைச் செலுத்திவிட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நூல் அனுப்பி வைப்பேன். தொடர்பு கொள்ளவேண்டிய எண்: மலேசியா . … 017 7424200. Email: drgjohnsonn@gmail.com நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
பதிவுத் திருமணமும் விருந்தும் நடந்து முடிந்தது. எங்களுக்கு சட்டப்படி திருமணம் நடந்துவிட்டது. அவள் பெயர் ஜெயராணி.வீட்டில் அனைவரும் செல்லமாக ” ஆச்சி ” என்று அழைக்கின்றனர். அதற்குக் காரணம் அவளின் அப்பாவின் தாயாரான அன்பாயியை அப்படியே அச்சாக ஓத்திருக்கிறாள் என்பதற்காகத்தான் . அந்த அன்பாயி கிறிஸ்துவராக மாறியபின்பு அவருக்கு ஜெயராணி என்று பெயர் வைத்துள்ளனர். அந்த பெயரைத்தான் அவளுக்கு வைத்து ” ஆச்சி ” என்று அழைக்கின்றனர். நாம் […]
காலையில் சீனனின் வாடகை ஊர்தியில் ஜோகூர் பாரு புறப்பட்டோம். நானும் பெண்ணும் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டோம்.அவளின் தந்தை ஓட்டுநர் அருகில் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.அவள் குட்டை பாவாடை ( Skirt ) அணிந்திருந்தாள். .நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.மூன்று மணி நேரப் பிரயாணம். அந்தப் பகுதி முழுதும் செம்பனை மரங்ககளால் நிறைந்து பச்சைப்பசேல் என்று காட்சி தந்தது. இடையிடையே சிறு சிறு ஊர்களில் கடைத்தெருக்கள் காணப்பட்டன. அவை பெரும்பாலும் சீனர்களின் கடைகளாகவே தென்பட்டன. அவற்றின் பெயர்ப்பலகைகளில் சீன எழுத்துகள் காணப்பட்டன.இங்குமட்டுமல்ல. […]
சனிக்கிழமை காலை நாங்கள் மூவரும் குயீன்ஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு செல்லும் துரித பேருந்து ஏறினோம். அங்கிருந்து ஆயர் ஈத்தாம் சென்றோம். பின்பு செகாமாட் செல்லும் பேருந்தில் ஏறி லாபீசில் இறங்கினோம். பேருந்து ஈஸ்ட் ஆசியா கார்டனில் நின்றதால் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றோம். அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தேன். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்.அந்தப் பெண்ணும் வந்து வணக்கம் சொன்னாள். […]
பன்னீர் செல்வன் இரண்டாம் நாள் இரவும் எங்களுடன் தாங்கிக்கொண்டான்.மூவரும் இரவில்உறக்கம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம். காலையிலேயே இருவரும் வெளியேறிவிட்டனர். கோவிந்த் பள்ளிக்கு டாக்சியில் புறப்பட்டான். அவன் வாகனம் வாங்கவில்லை. அதை ஓட்டும் பயிற்சியும் பெறவில்லை. பன்னீர் பேருந்தில் ஏறி சிங்கப்பூர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டான். மாலை வரை நான் அறையில் தங்கினேன். கோவிந்த சேகரித்து வைத்திருந்த தமிழ் நாவல்களை நோட்டமிட்டேன். ஏறக்குறைய மு.வ.வின் அணைத்து நூல்களும் […]
அன்று இரவும் நண்பர்கள் நாங்கள் மூவரும் சீன உணவகத்தில் கூடினோம். நான் சென்றுவந்தது பற்றி ஆவலுடன் இருவரும் கேட்டனர்.நான் நடந்தவற்றைக் .கூறினேன். அவர்கள் இருவரும் சிங்கப்பூரில்தான் இருந்தனர். ஆனால் அவர்களுக்கே அது தெரியவில்லை. ” அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் உனக்கு அதிர்ச்சியாக இருந்ததா? ” கோவிந்த் கேட்ட முதல் கேள்வி. அவன் […]
அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன் நான் கல்லூரி சென்றபின் அங்கு உண்டான அனுபவங்களும் முக்கிய காரணம் எனலாம். ஒரு பெண்ணை மறக்க வைக்க இன்னொரு பெண்ணால் முடியும் என்பது என்னைப் பொறுத்தவரையில் உண்மை. அதனால்தான் அவள் அப்படி சொன்னது கேட்டு […]
டாக்டர் ஜி. ஜான்சன் 176. முதல் காதலி சீன உணவகத்தில் ” கொய்த்தியா ” உண்ணலாம் என்றான்.[பன்னீர் என்னைப்பார்த்து. நான் சரி என்றேன். அந்த சீன உணவு மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது அப்பாவின் சம்பள நாள் இரவில் அதை வாங்கி வருவார். அதை பாக்கு மட்டையில் கட்டித் தருவார்கள். அதைப் பிரிக்கும்போதே வாசனை கமகமக்கும். கோவிந்தசாமி சீன உணவு சாப்பிடமாட்டான்.அவன் அடுத்த உணவகம் சென்று அங்குள்ள இந்திய இஸ்லாமியர் தயார் […]