அறுவை மருத்துவப் பயிற்சியை மூன்று மாதங்கள் டாக்டர் எல். பி. எம். ஜோசப் தலைமையில் இயங்கிய அறுவை மருத்துவம் பிரிவு மூன்றில் பெற்றேன். அப்போது அவர் மருத்துவமனையின் இயக்குநராகவும் செயல்பட்டார். அதனால் அவர் மீது இயற்கையாகவே ஓர் அச்சம் எங்களுக்கு இருந்தது. இருப்பினும் இந்த மூன்று மாதங்களும் பயனுள்ள வகையில் சிறப்பாகவே இருந்தது. மருத்துவப் பயிற்சி போலவே இதிலும் வெளிநோயாளிப் பிரிவிலும் வார்டிலும் பணியாற்றினோம்.அதில் முன்பே பழக்கம் ஏற்பட்டுவிட்டதால் பிரச்னைகள் அதிகம் இல்லை. ஆனால் […]
வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அநேக நோயாளிகளை முறையாக குணமாக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இங்கு நோயாளிகள் வருகின்றனர். இங்கு வருமுன் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் பெறாதவர்களாகவே இருப்பார்கள். எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டு கடைசியாக வேலூர் சென்று பார்க்கலாம் என்ற எண்ணம்கூட மக்களிடம் பரவியிருந்தது. இதனால் நோய் முற்றிய நிலையில்தான் பலர் வருவதுண்டு. இதனால் […]
வனஜாவுக்கு இருதயத்தின் இடது பக்கத்தில் மைட்ரல் வால்வு சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதனால் இருதயத்தின் இடது கீழறையிலிருந்து இடது மேலறைக்குள் இரத்தம் முழுதுமாகப் புக முடியாமல் பின்னோக்கி தேங்கி நிற்பதால் நுரையீரலிலும் அது தேக்கமுற்று, மூச்சுத் திணறலையும், கால்கள் வீக்கத்தையும் உண்டுபண்ணுகிறது. இவை மைட்ரல் வால்வு சுருக்கத்தின் பின்விளைவு. வனஜாவுக்கு இப்போது இதுவே உள்ளது. இனியும் இதை. நீடிக்கவிட்டால் இருதயத்தின் இரு கீழறைகளும் வீக்கமுற்று இருதய செயலிழப்பு உண்டாகி மரணம் நேரிடலாம். வனஜாவுக்கு உடனடியாக இருதயத்தில் […]
அமைதியான வாழ்க்கை அ .போப் அவன் மகிழ்வான், அவனின் ஆசையும் கவனமும் தாய்சார்ந்த சில ஏக்கர்கள் சூழ, சொந்த காற்றை சுவாசிப்பதில் நிறைவும் தனது சொந்த நிலத்தில். மந்தைகளின் பாலும், நிலங்களின் உணவும், மந்தைகள் தனக்கு வழங்கும் ஆடையும், கோடையில் நிழல் தரும் அவனின் மரங்களும், பனிக்காலத்தில் நெருப்பும். அருள்பெற்ற, தொல்லையற்ற நிலையில் கண்ட மணித் துளிகளும், நாட்களும், வருடங்களும் மெல்ல நழுவ உடலில் நலமும்,உள்ளத்தில் சமாதானமும், அமைதியான பொழுதும். இரவில் ஆழ்ந்த உறக்கமும் படிப்பும் நலப்பாடும் […]
மருத்துவ பட்டதாரி ஆகிவிட்டேன். இனி முழு மருத்துவனாக ஓராண்டு பயிற்சி மருத்துவனாக பணிபுரிந்தாகவேண்டும். இதை மனை மருத்துவம் ( House – Surgeon ) என்றும் கூறுவர். இந்த ஓராண்டில்தான் நாங்கள் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு அவர்களின் நோய்களைத் தீர்த்து குணமாக்கவேண்டும். இதுவரை நூல்களில் படித்தும் அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வார்டுகளில் பரிசோதித்தும் தேர்வுக்காகப் பயின்றோம். இனிமேல் நாங்களே வெளிநோயாளிப் பிரிவிலும் வார்டிலும் நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பழகிக்கொள்வோம். முன்பு நோய்களைப் பற்றிதான் […]
ஆவலோடு எதிர்பார்த்திருந்த !தேர்வு முடிவுகள் வந்தன. யாருமே தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கமாட்டார்கள். பயத்துடன்தான் காத்திருப்பார்கள். ஆனால் எனக்கு முடிவுகள் நேர்முகத் தேர்விலேயே தெரிந்துவிட்டதால் நான் ஆவலுடன்தான் காத்திருந்தேன். எதிர்பார்த்தபடியே நான் இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! இனிமேல் நான் எந்தத் தேர்வுக்கும் இரவு பகலாக படிக்கவேண்டியதில்லை. சிங்கப்பூரில் 1954 இல் ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய படிப்பை 1971 இல் முடித்துள்ளேன். இந்த கால கட்டத்தில் நான் எத்தனையோ தேர்வுகளை எழுதியிருப்பேன். படிப்பதும் தேர்வுகள் எழுதி […]
இந்த விடுமுறையை தெம்மூரில் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். காரணம் தாம்பரத்திலிருந்து அத்தையும் நேசமணியும், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். தங்கைகள் கலைமகளும், கலைசுந்தரியும் தஞ்சாவூர் போர்டிங்கிலிருந்து வந்திருந்தனர். இருவரும் தாவணி போட்ட பெரிய பிள்ளைகளாகிவிட்டனர். வீடு கலகலப்பாக இருந்தது. அம்மா தடபுடலாக விருந்து செய்தார். அவருக்கு உதவியாக பெரிய தெருவிலிருந்து அஞ்சலை சின்னம்மாவின் மகள் மஞ்சளழகி வந்திருந்தாள். எடுபிடி வேலைகள் அனைத்தையும் அவள் பார்த்துக்கொண்டாள். இந்த விடுமுறை இன்னொரு வகையிலும் சிறப்பு பெற்றிருந்தது. பெரியப்பா குடும்பத்தினர் […]
விடுதியில் கடந்த ஐந்தரை ஆண்டுகள் கழித்துவிட்டோம். இது எங்களுக்கு இன்னொரு வீடு போன்றது.அனைத்து மாணவர்களும் உறவினர் போன்றவர்கள்.இங்கு எங்கள் வகுப்பு மாணவர்களுடன், எங்கள் சீனியர் ஜூனியர் மாணவர்களுடனும் நெருங்கியே பழகினோம். இது எங்கள் குடும்பம் போன்றே வாழ்ந்தோம். இப்போது பிரியும் காலம் நெருங்கிவிட்டது. இறுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் விடுதியை விட்டு வெளியேறிவிடுவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் தொடர்ந்து ஆறு மாதங்கள் இங்கேயே தங்கியிருப்பார்கள். ஆறரை வருடங்கள் தங்கியபிறகு திடீரென்று வெளியேறுவது எப்படி. அது கவலையைத் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 156. தேர்வும் சோர்வும் எழும்பூரில் ” பீப்பல்ஸ் லாட்ஜ் ” என்னும் தங்கும் விடுதியில் அறை எடுத்தோம். இதை மலையாளிகள் நடத்தினர். எதிரே ஒரு மலையாள உணவகம் உள்ளது. இந்தப் பகுதியில் வாடகை ஊர்த்திகளுக்கு பஞ்சம் இல்லை. சென்னை மருத்துவ மனைக்கு கால் மணி நேரத்தில் சென்றுவிடலாம். அன்று இரவில் எழும்பூர் புகாரியில் பிரியாணி உண்டோம். அங்கு அது சுவையாக இருக்கும். கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கினோம். தேர்வுக்குத் தேவையானவற்றையெல்லாம் படித்து முடித்துவிட்டோம். […]
டாக்டர் ஜி. ஜான்சன் 155. பல்லவர் தமிழர் அல்லர். திருவள்ளுவர் துரித பேருந்தின் மூலமாக எங்கள் வகுப்பு மாணவ மாணவிகள் சென்னை சென்றோம். ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாக அது சென்றது. காஞ்சிபுரம் வந்தபோது எனக்கு கல்கியின் ” சிவகாமியின் சபதம் ” நினைவுக்கு வந்தது . அக்காலத்தில் இந்தப் பகுதிகள் பல்லவ நாடு என்று அழைக்கப்பட்டது. அதன் தலைநகரமாக காஞ்சி திகழ்ந்துள்ளது. துறைமுகப் பட்டினம் மகாபலிபுரம். காஞ்சியை சுற்றிலும் மகேந்திர பல்லவர் கட்டியிருந்த மதில் அரண்கள் உள்ளனவா […]