மருத்துவக் கல்வியில் அறுவை மருத்துவம் இன்றியமையாதது. இதை இரண்டு வருடங்கள் பயிலவேண்டும். மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள நோயாளிகளைப் பார்த்து அவர்களைப் பரிசோதனைகள் செய்து பார்ப்பதுடன், அறுவைச் சிகிச்சை வகுப்புகளிலும் விரிவுரைகள் கேட்டு பயிலவேண்டும். வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை மருத்துவப் பிரிவுகள் மூன்று உள்ளன. அதில் முதல் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். இதன் தலைமை மருத்துவர் டாக்டர் எல். பி. எம். ஜோசப் என்பவர். சிறப்பாக அறுவை மருத்துவம் செய்பவர். தமிழர். நன்றாகத் தமிழ் பேசுவார். […]
மருத்துவப் படிப்பு இப்போது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. வார்டில் நோயாளியைப் பார்த்து நோய் பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்டபின் டாக்டர் புளிமூட் அது பற்றி விளக்கங்கள் கூறும்போது அந்த நோய் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ளலாம் . இரவில் விடுதியில் மருத்துவ நூலில் அந்த வியாதி பற்றி முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. ஒவ்வொரு நோயிலும் இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் அவற்றை நார்மேன் நூலகத்தில் உள்ள மருத்துவச் சஞ்சிகைகைகள் படிப்பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். […]
மருத்துவ வகுப்புகளை பொதுவாக டாக்டர் மில்லர் நடத்தினாலும், மனை மருத்துவம் ( Clinical Medicine ) வேறு விதமானது. அது மூன்று பிரிவுகள் கொண்டது. அவை மருத்துவம் ஒன்று, மருத்துவம் இரண்டு , மருத்துவம் மூன்று என்று அழைக்கப்படடன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைமை மருத்துவர் இருப்பார். அவரின் தலைமையில் பல மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும், மருத்துவ மாணவ மாணவிகளும் செயல்படுவார்கள். வார்டுகளும் தனியாக இயங்கும். பயிற்சி மாணவர்களுக்கான நோயாளிகளை அந்தந்த வார்டுகளில் சென்று பார்க்கவேண்டும். […]
டாக்டர் மில்லர் மருத்துவ வரலாறு பற்றி சுவையான சொற்பொழிவு ஆற்றியபின் எங்களுக்கு ஒரு பயிற்சி தந்தார்.அது அதைவிட சுவையானது. நாங்கள் கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெத்தெஸ்கோப்பை கையில் எடுக்கச் சொன்னார். அதை அருகில் உள்ள மாணவரின் நெஞ்சில் வைத்து கேட்கச் சொன்னார். என் அருகில் கிச்சனர் இருந்தான். நான் அவன் நெஞ்சில் வைத்துக் கேட்டேன்.அவன் என் நெஞ்சில் வைத்துக் கேட்டான். நான் முன்பே என்னுடைய நெஞ்சில் அதை வைத்து கேட்டுள்ளேன். இதயம் துடிக்கும் ஓசை கேட்கும். […]
(ஹிப்போகிரேட்டஸ் சிறுவனுக்கு சிகிச்சை) ‘ நான் குணமாக்கும் தெய்வமான அப்போலோ, அஸ்கிலிபியுஸ் , ஹைஜீயீயா , பானசீயா, இதர எல்லா தெய்வங்களின் மீதும், அவர்களை சாட்சியாகவும், நான் இந்த உறுதிமொழியை என்னுடைய திறமைக்கும், நேர்மைக்கும் ஏற்றவகையில் இதைக் கடைப்பிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன் . எனக்கு இந்தக் கலையைப் பயிற்றுவித்த ஆசிரியரை என் பெற்றோருக்குச் சமமாக மதிப்பேன்.அவரை என் வாழ்க்கைப் பாதையில் உறுதுணையாகக் கொள்வேன். அவருக்குத் தேவையான வேளையில் என் செல்வத்தை அவருடன் பகிர்ந்துகொள்வேன். அவருடைய […]
டாக்டர் ஜி. ஜான்சன் 126. ஹிப்போகிரெட்டஸ் உறுதிமொழி மருத்துவ வகுப்பு வெளி நோயாளிகள் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருந்தது. விரிவுரை ஆற்றும் மேடையும் மாணவ மாணவிகள் அமர்ந்து குறிப்புகள் எடுக்கும் வகையில் மேசை நாற்காலிகளும் சொகுசாக இருந்தன. டாக்டர் மில்லர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இளம் வயதினர். அவர்தான் எங்களுக்கு மருத்துவப் பாடத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தருவார். அவருடடைய ஆங்கில உச்சரிப்பு வேறு விதமாக இருந்தாலும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது. அவர் முதலில் […]
மீண்டும் தேர்வுகள் நெருங்கி வந்தன. இரண்டே பாடங்கள்தான். உடற்கூறும் உடலியலும். இரண்டுமே மருத்துவம் பயில மிகவும் இன்றியமையாதவை. அதனால்தான் தேர்வு சற்று கடினமாக இருந்தது. இந்தத் தேர்வைத் தாண்டினால்தான் மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்குச் செல்ல முடியும். பலர் இதைத் தாண்ட முடியாமல் பல வருடங்கள் மருத்துவக் கல்லூரியில் தஞ்சம் புகுவதுண்டு. நான் மீண்டும் இந்த இரண்டு பாட நூல்களையும் படித்து முடித்தேன். வரக்கூடிய கேள்விகளுக்கு பதில் எழுதியும் பார்த்தேன். பிரேத அறுவையிலும் அதிகம் கவனம் செலுத்தினேன். […]
திராவிட நாடு வேண்டும் என்ற அண்ணாவின் கோரிக்கைக்கு சட்ட திருத்தம் மூலம் பண்டிதர் ஜவகர்லால் நேரு தடை போட்டார். திராவிட இயக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். காங்கிரசார் கொண்டாடியதோடு கேலியும் பேசினர். திராவிட நாடா அது எங்கே உள்ளது என்று கேட்டனர். அது வெறும் மாயை என்றனர்.எங்குமே இல்லாமல்தான் பாகிஸ்தான் என்ற நாடு என்பது மதத்தின் அடிப்படையில் தோன்றியதை அவர்கள் அறியவில்லை. திராவிடர் இனம் பற்றி இந்திய மக்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். திராவிடர் இனமும் நாகரிகமும் 5000 […]
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் பேருந்தில் ஏறினேன். அது கடலூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக வேலூர் சென்றடைந்தது.நீண்ட பிரயாணம்தான். கையில் ஒரு ஆங்கில நாவல் இருந்ததால் நேரம் இனிமையாகக் கழிந்தது. வழி நெடுகிலும் தமிழகத்துக் கிராமங்களும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும் கண்களுக்கு குளுமையாக காட்சி தந்தன. மலையில்தான் வேலூர் அடைந்தேன். புது உற்சாகத்துடன் விடுதி சென்றேன். கலகலப்புடன் நண்பர்கள் வரவேற்றனர். சம்ருதி முன்பே வந்திருந்தான். அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுதியில்தான் பெரும்பாலோர் இருந்தனர். பெஞ்சமினும் டேவிட் […]
பிரயாணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அப்பா என்னை சிராங்கூன் சாலைக்கு அழைத்துச் சென்றார். அதுதான் சிங்கப்பூரின் ” லிட்டில் இந்தியா “. இந்தியா கொண்டு செல்லவேண்டிய துணிமணிகள், நகைகள், கைக்கடிகாரங்கள், ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர்கள், எலக்ட்ரானிக் சாமான்கள் என அனைத்து பொருட்களையும் அங்கு வாங்கலாம். அது இந்தியர்களின் வர்த்தக மையம். இந்திய உணவகங்களும் நிறைந்த பகுதி. அங்கு விற்கப்படும் இனிப்புகளும், பூக்களும் மலைகளும் காய்கறிகளும் தமிழகத்து கடைத்தெருவை நினைவுபடுத்தும். இன்று லிட்டில் இந்தியா […]