author

தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

This entry is part 7 of 16 in the series 6 மார்ச் 2016

தேர்தல் சூடு பிடித்தது. இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர். பட்டணங்களில் வாழும் படித்தவர் முதல் பட்டித்  தொட்டிகளில் வாழும் பாமரர்கள்  வரை அரசியலில் அதிகம் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர்.இதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம். மேடைப் பேச்சுகளுடன் அது நின்றுவிடவில்லை. மக்களைப் பெரிதும் […]

தொடுவானம் 109. விழாக்கோலம் கண்ட தமிழகத் தேர்தல்

This entry is part 2 of 13 in the series 28 பெப்ருவரி 2016

இயல்பான நிலைக்கு வர கொஞ்ச காலம் ஆனது. கோகிலம் பற்றி யாரிடம் சொல்ல முடியும்? பெஞ்சமின் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவனிடம் முதலில் சொன்னேன். அவன் இருவர் மேலும் தவறு இல்லை என்றுதான் ஆறுதல் சொன்னான். சம்ருதி அது பற்றி கருத்து கூறாமல் கவலைப்பட்டால் அவள் திரும்பி வரப்போகிறாளா என்று சமாதானம் சொன்னான். என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும் செல்வராஜ் ஆசிரியரிடம் சொன்னபோது இதை வைத்து ஓர் அருமையான நாவல் எழுதலாமே என்றார்! இறப்பு என்றாலே நேரடியாகப் […]

தொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .

This entry is part 2 of 16 in the series 21 பெப்ருவரி 2016

அதுவரை வேகமாக சவாரி செய்த காளைகள் இரண்டும்கூட அசம்பாவிதம் அறிந்ததுபோல் அப்படியே நின்றுவிட்டன! பால்பிள்ளை பதறினான்! ” என்ன அண்ணே இப்படி ஆகிவிட்டது? நான் கொஞ்ச நேரந்தான் தோட்டத்து  பக்கம் சென்றேன். அதற்குள்ளாக இப்படி செய்துவிட்டது. ” என்று கண்கலங்கினான். ” சரி….வண்டியைத் திருப்பு . ‘ என்றவாறு அவளுடைய களையிழந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் எதையும் நம்ப  முடியவில்லை. இதுபோன்றுகூட நடக்குமா? எதைப் பற்றியும் நினைக்க அப்போது தோன்றவில்லை. பெரும் அதிர்ச்சியான மனநிலை! வண்டி மீண்டும் […]

தொடுவானம் 107. அவள் பறந்து போனாளே!

This entry is part 17 of 18 in the series 14 பெப்ருவரி 2016

டாக்டர் ஜி. ஜான்சன் வரப்பில் ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்தோம். கோகிலத்தை முன்னே விட்டு நாங்கள் பின்தொடர்ந்தோம். பால்பிள்ளை எனக்குப் பின்னால் வந்தான். மௌனமாகவே நடந்து வந்தோம். வயல்கள் வெறிச்சோடிக் கிடந்தன. எங்களை யாரும் கவனிக்கவில்லை. சின்னத் தெருவில்தான் ஒரு சிலர் வயலுக்குச் சென்று வருகிறீரா என்று கேட்டனர். வீடு சென்றதும் திண்ணையில் பாய் விரித்து படுத்து நன்றாகத் தூங்கினேன். மனதில் பல்வேறு குழப்பங்கள் குடிகொண்டிருந்தாலும் உடன் உறக்கம் வந்துவிட்டது. மதிய உணவின்போது அம்மா எழுப்பினார். […]

தொடுவானம் 106. சோக கீதம்

This entry is part 2 of 19 in the series 7 பெப்ருவரி 2016

தெரு முனையில் நின்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம்  வரையில் வயல்கள் பச்சைப் பசேலென்று வரைந்த ஓவியம் போன்று காட்சி தந்தன. அவற்றை மூடியிருந்த இளம் நாற்றுகள் காலைக் காற்றில் சீராக ஒரு பக்கம் சாய்ந்தபடி அசைந்தாடின. சிறிது நேரம் அப்படியே நின்று இயற்கையுடன் செயற்கை கலந்த அழகில் லயித்துப்போனேன். வயல்வெளி வேலைகளெல்லாம் முடிந்து விட்டதால் ஆள் நடமாட்டம் அறவே இல்லை. தூரத்தில் வரப்பின் மீது ஒரு பெண் உருவம் மட்டும் தெரிந்தது. அவள் கோகிலம்தான்  அவள் […]

தொடுவானம் 105. குற்ற உணர்வு

This entry is part 3 of 19 in the series 31 ஜனவரி 2016

இரண்டாம் ஆண்டு பிரேதங்களுடனும், தவளைகளுடனும், மனித எலும்புகளுடனும், இரசாயனத்தோடும் அன்றாடம் புதியவை கற்பதிலும் வேகமாக ஓடியது. நாள் முழுதும் படிப்பில் மூழ்கியதால் நாட்கள் போனதே தெரியவில்லை! வகுப்பிலும் அறையிலும் விடுதி உணவகத்திலும் அன்றைய உடற்கூறு, உடலியல் பற்றிதான் பேசிகொள்வோம். வேறு எதிலும் அக்கறையற்ற விந்தை மனிதர்கள்போல்தான் காணப்பட்டோம். அந்தச் சூழலிலிருந்து விடுபட நானும் சம்ருதியும் அந்தி சாயும் வேளையில் ஆரணி நெடுஞ்சாலையில் வெகுதூரம் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். திரும்பி வரும்போது பாகாயம் முனையில் தேநீர் கடையில் அமர்ந்து […]

தொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்

This entry is part 7 of 22 in the series 24 ஜனவரி 2016

உடலியல் பாடத்தில் உடலின் உறுப்புகளின்  செயல்பாடுகள் பற்றி இரண்டு ஆண்டுகள் பயில வேண்டும். உடலியல் ஆராய்ச்சிகளில் இறந்துபோன மனித உடல்கள்  பயன்படுத்த முடியாத காரணத்தால் நாய்களும், தவளைகளும், முயல்களும் பயன்படுத்தப்பட்டன. முதன்முதலாக நாய்களைப் பயன்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க ஒரு கண்டுபிடிப்பை உலகுக்கு உணர்த்தியவர் பாவ்லோவ் ( Pavlov )  என்ற ரஷ்ய நாட்டு உடலியலாளர் . பல அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்று இதுவும் எதிர்ப்பாராத ஒரு கண்டுபிடிப்புதான்! அவர் கண்டுபிடித்த உடலியல் உண்மையும் அதைக் கண்டுபிடித்த விதமும் […]

தொடுவானம் 103. உடலியல் அறிமுகம்

This entry is part 9 of 16 in the series 17 ஜனவரி 2016

அன்று இரவு முழுதும் பிரேதங்களின் நினைவில்தான் கழிந்தது. ஒரு காலத்தில் அவர்கள் உயிரோடு இருந்தபோது எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள். இன்று  வெறும் மரக்கட்டைகள் போன்று கிடக்கிறார்களே! நாங்களும் அவர்களை மனிதர்கள் என்பதை மறந்த நிலையில் வெட்டி உடற்கூறு பயில்கிறோமே என்ற எண்ணம் மேலோங்கியது. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களுடைய உடலை இப்படி எங்களுக்காக தானம் செய்துள்ள தியாகச் செம்மல்கள்தான் என்றும் எண்ணிக்கொண்டேன். மறுநாள் வகுப்பும் கையின் அமைப்பைப் பற்றிதான். தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள் போன்ற அனைத்தையும் அறிந்துகொள்ளவேண்டும். […]

மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி

This entry is part 11 of 16 in the series 17 ஜனவரி 2016

நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை. பேக்டீரியா , வைரஸ் , காளான் போன்ற்வை […]

தொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்

This entry is part 9 of 12 in the series 10 ஜனவரி 2016

            உடற்கூறு பயிலும் பிரேதங்கள் நிறைந்த கூடத்தில் டாக்டர் ஹர்ஷாவை அறிமுகம் செய்துவைத்தார் வகுப்பு ஆசிரியை கிரேஸ் . அவர் சிவப்பாக நல்ல உயரமாக சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார். அவர்தான் பிரேதங்களை அறுத்து பயில்வதைச் சொல்லித்தருவார்.           உடன் வகுப்பறைக்குத் திரும்பினோம். உடற்கூறு பாடம் துவங்கியது.           மனித உடலின் அமைப்பு பற்றி கிரேஸ் ஓர் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதை நாங்கள் அனைவரும் ( உறங்காமல் ) உன்னிப்பாகக் கவனித்தோம். நான் அவற்றை வேகமாக […]