டாக்டர் ஜி. ஜான்சன் 84. பூம்புகார் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி போன்ற பண்டைய துறைமுகப் பட்டினங்கள் பற்றி நம்முடைய சங்க இலக்கியங்களில் அல்லது அதற்குப் பின் எழுதப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர் வரலாற்றில் பெருமை சேர்க்கும் அளவுக்கு ஒரு சிறப்பான துறைமுகம் பண்டைய காலங்களில் செயல் பட்டுள்ளது எனில் அது பூம்புகார் துறைமுகம். பூம்புகார் தமிழர் பெருமை கூறும் ஒரு கற்பனைக் கதை இல்லை. அதன் சிறப்பு அக்காலத்திலேயே பதியப்பெற்றுள்ளது. […]
பேருந்து நிலையத்திலிருந்து தேவாலயம் செல்லும் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக கடைகள் இருந்தன. பெரிய கடைத்தெரு போன்ற காட்சி அது. அழகுப் பொருள்களும், அலங்காரப் பொருள்களும், மாதா சிலைகளும் படங்களும், வேதாகம வசனங்களும், கிறிஸ்த்துவ கீதங்களின் குருந்தட்டுகளும், மெழுகுவர்த்திகளும், மணிமாலைகளும், தின்பண்டங்களும் என பலதரப்பட்ட கடைகள் அங்கு இருந்தன. தேவாலயத்தின் எதிர்புறத்தில் வரிசைவரிசையாக பூக்கடைகள் இருந்தன. அங்கு ஏராளமான மாலைகள் விற்றனர். அங்கும் நீண்ட மெழுகுவர்த்திகள் விற்றனர். வேண்டுதலுக்காக வருபவர்கள் மெழுகுவர்த்திகளும் மாலைகளும் வாங்கிச் செல்கின்றனர். தேவாலயத்தின் […]
டாக்டர் ஜி. ஜான்சன் தமிழ் நாட்டு வரலாற்றில் சரித்திரப் புகழ்மிக்க தரங்கம்பாடியில் நான் தங்கியிருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் வரலாற்றை ஓரளவு தெரிந்து கொண்டேன். தரங்கம்பாடியை டேனிஷ் நாட்டவர் ஆண்டபோது காரைக்காலை பிரான்ஸ் நாட்டவரும் நாகப்பட்டினத்தை போர்த்துகீசியரும் ஆண்டுவந்துள்ளனர். அப்போது ஆங்கிலேயர்கள் சென்னையில்தான் இருந்துள்ளனர்.இவ்வாறு தமிழ் நாட்டின் கடற்கரையை மேல் நாட்டவர் வாணிபம் செய்ய வந்து கூறுபோட்டிருந்தனர்! இதே கடற்கரையில்தான் தமிழரின் பெருமை கூறும் பூம்புகாரும் இருந்ததுள்ளது. அப்போது ரோமாபுரிவரை சோழர்கள் சென்றுவந்துள்ளனர். ரோமர்களும் கிரேக்கர்களும் […]
தரங்கம்பாடியில் தமிழ்த் தொண்டாற்றிய சீகன்பால்க் பற்றி தமிழர்களுக்குத் தெரியாதது வியப்பானது ஒன்றுமில்லை. காரணம் அவரைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் பாடநூல்களில் இல்லாதது ஒரு காரணம் எனலாம். அதோடு வீரமாமுனிவர், தெ நோபிலி போன்ற கத்தோலிக்க இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த சீகல்பாலுக்குத் தரப்படவில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றுதல் அளப்பரியது என்றுதான் கூறுவேன். அவர் தமிழை விரும்பிப் படித்தார். அவர் கற்றது பற்றி இவ்வாறு கூறியுள்ளார். ” […]
டாக்டர் ஜி. ஜான்சன் தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவர் வாணிகம் செய்யத்தான் துறைமுகம் தேடி வந்தனர். அப்பகுதி ஆழ்கடலாக இருந்ததால் அவர்களுடைய கப்பல்கள் நங்கூரமிட வசதியாக இருந்ததை அறிந்தனர். அதனால் அவர்கள் தரங்கம்பாடி என்ற மீன் பிடிக்கும் கடலோரப் பகுதியை அப்போது தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கரிடமிருந்து 1620ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கினர். அவர்கள் தொடர்ந்து 1845ஆம் வருடம் வரை அங்கிருந்து கடல் வாணிகம் செய்தனர். தங்களுடைய பாதுகாப்புக்காக ” டேன்ஸ்பர்க் ” கோட்டையை கடலோரத்தில் கட்டினர். அங்கு […]
டாக்டர் ஜி. ஜான்சன் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள். மாயவரம் ( மயிலாடுதுறை ) வந்தடைந்தபோது நன்றாக விடிந்துவிட்டது.பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு குதிரை வண்டி மூலம் பேருந்து நிலையம் சென்றேன்.கடைத்தெருவில் பசியாறிவிட்டு பொறையார் பேருந்தில் அமர்ந்து கொண்டேன்.மன்னம்பந்தல், ஆக்கூர் வழியாக தரங்கம்பாடி சென்றடைய ஒரு மணி நேரமானது. வழிநெடுக வயல்வெளிகளும் சிறுசிறு கிராமங்களும் காலைப் பனியில் கண்களுக்குக் குளிர்ச்சியான இன்பத்தை தந்தன. பேருந்து நின்ற இடத்தில் தேநீர்க்கடை இருந்தது. அதன் பின்புறம் கடலை நோக்கிச் செல்லும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் சென்னை மெரினா புஹாரி உணவகம் பல வகைகளில் சிறப்புமிக்கது. அது மெரினா கடற்கரையில் அமைந்துள்ளதால் கடல் காற்று ஜிலுஜிலுவென்று வீசும். உணவகம் சுத்தமாக இருக்கும். நல்ல வரவேற்பும் கிடைக்கும். நான் சென்ற ஆண்டில் அடிக்கடி அங்கு சென்றுள்ளதால் அங்குள்ள சிப்பந்திகளுக்கு என்னைத் தெரியும். அதோடு அவர்களுக்கு நிறையவே ” டிப்ஸ் ” தந்துள்ளேன். நாங்கள் தனி அறையில் அமர்ந்துகொண்டோம். நல்ல பசி. கோழி பிரியாணி கொண்டுவரச் சொன்னோம். புஹாரி பிரியாணி தனிச் சுவை […]
டாக்டர் ஜி. ஜான்சன் இரைப்பையிலிருந்து பெருங்குடல்வரையுள்ள பகுதி சிறுகுடல். இதன் நீளம் 6 மீட்டர் அல்லது 20 அடி. உணவை ஜீரணம் செய்யும் முக்கிய பணியை சிறுகுடல் செய்கிறது. இங்குதான் உணவின் சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தக் குழாய்களில் புகுந்து இருதயத்தை அடைந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. சிறுகுடலில் கட்டிகள் வருவது மிகவும் குறைவு. புற்றுநோய் வகைகளில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில்தான் சிறுகுடலில் உண்டாகிறது.பெரும்பாலானவை பெருங்குடலில்தான் ஏற்படுகிறது. ஆனால் உங்களுடைய தோழியைப்போல் ஒருசிலருக்கு சிறுகுடலிலும் கட்டிகள் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை நீண்ட விடுமுறை விடப்பட்டது. திட்டமிட்டபடியே திருவள்ளுவர் துரித பேருந்து மூலம் சென்னை புறப்பட்டேன். அங்கிருந்து மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன். அத்தை மாமா பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. எங்களுடைய குடும்ப வரலாற்றில் நான்தான் முதல் மருத்துவனாகப் போகிறேன். அப்பா, பெரியப்பா, அத்தை, அண்ணன், அண்ணி ஆகியோர் ஆசிரியர்கள். அத்தை மகள் நேசமணி பாசத்தோடு ” […]
டாக்டர் ஜி. ஜான்சன் ” கெளட் ” என்பதற்கு சரியான தமிழ் சொல் இல்லை. இதை குருத்தெலும்பு மூட்டு வீக்கம் எனலாம். நாம் இதை கெளட் என்றே அழைப்போம். இது வளர்சிதை மாற்றம் ( Metabolic ) தொடர்புடைய நோய். வளர்சிதை மாற்றம் என்பது உணவை சீரணம் செய்து அதை சக்தியாக மாற்றம் செய்வதாகும். இவ்வாறு செய்யும்போது சில கழிவுப்பொருட்கள் உற்பத்தியாவது இயல்பு. அவைகளில் ஒன்றுதான் யூரிக் அமிலம். இதை சிறுநீரகங்கள் கழிவுப்பொருளாக வெளியேற்றுகின்றன. அதில் கோளாறு […]