டாக்டர் ஜி. ஜான்சன் 76. படிப்பும் விடுப்பும் ஆங்கில வகுப்பில் தாமஸ் ஹார்டியின் ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவல் அருமையாக முன்னேறியது. பாதி பேர்கள் நன்றாகத் தூங்கினாலும், அது வழக்கமானதுதான் என்பதை நன்கு அறிந்திருந்த குண்டர்ஸ் கண்டும் காணாமல் பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார். நடத்திக்கொண்டிருந்தார் என்பதைவிட ஒருவரை படிக்கச் சொல்லிவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார் என்றே கூறலாம். அவ்வாறு அவருடைய இருக்கையில் அமர்ந்து அதே வரிகளை கடந்த சில வருடங்களாகக் கேட்டுப் பழகிப்போன அவருக்குக்கூட உறக்கம் வருவதை […]
டாக்டர் ஜி. ஜான்சன் தைராய்டு சுரப்பி தொண்டையின் முன்பக்கம் இரண்டுபுறத்திலும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. சாதாரணமாக அதைக் காண இயலாது. அனால் வீக்கம் உண்டானால் தொண்டையும் முன்பக்கம் கட்டி போன்று தோன்றும். இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளன. இவை குறைவுபட்டலோ அதிகம் கூடிவிட்டாலோ பல்வேறு மாற்றங்கள் தோன்றுகின்றன. தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன் சுரக்காத காரணத்தால் உண்டாகும் குறைபாட்டை ” ஹைப்போதைராய்டு ” […]
டாக்டர் ஜி. ஜான்சன் ” டிப்ரஷன் ” என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அல்லது சில நாட்களில் அந்த கவலையை மறந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறோம்.அன்புக்குரியவர்களை பிரிய நேர்ந்தால் அல்லது அவர்களை மரணம் காரணமாக நிரந்தரமாக இழக்க நேர்ந்தாலும்கூட கொஞ்ச நாட்கள் கவலைப்பட்டு பின்பு காலப்போக்கில் அதிலிருந்து விடுபடுகிறோம்.இத்தகைய […]
ஆங்கில வகுப்பு மதிய உணவுக்குப்பின் தூக்க நேரத்தில் நடந்தாலும் நாவலின் கதை உற்சாகம் நிறைந்ததாகவே தொடர்ந்தது. வழக்கம்போல் ஒருவர் உரக்கப் படிக்கவேண்டும். அப்படி செய்தால் தூங்குபவர்கள் விழித்துக்கொள்வார்கள் என்பது குண்டர்ஸ் அவர்களின் அற்ப ஆசை. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டவர்களை எவ்வளவு உரத்த குரலாலும் ஏதும் செய்ய முடியவில்லை. மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் கதை தங்குதடையின்றி தொடர்ந்தது. கேஸ்ட்டர்பிரிட்ஜ் டவுனில் உள்ள பெரிய ஹோட்டலில் இரவு விருந்து நடைபெறுகிறது. அதில் ஊரின் முக்கிய பிரமுகர்களும், செல்வந்தர்களும் […]
மதிய உணவு நேரத்தில் மீண்டும் நாங்கள் தேர்ந்தெடுத்திருந்த மரங்களின் நிழலில் விரிப்புகள் விரித்து அமர்ந்துகொண்டோம். நல்ல பசி. கொண்டுவந்திருந்த சுவையான கோழி பிரியாணி உண்டு மகிழ்ந்தோம். பின்பு அங்கேயே கிடைத்த இடத்தில படுத்து ஓய்வெடுத்தோம். நல்ல வேளையாக அன்று வெயில் அதிகமில்லை. குளிர்த் தென்றல் ஜிலுஜிலுவென்று வீசியது. சுமார் மூன்று மணிபோல் சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். பாடங்களை மறந்து உல்லாசமாக நேரம் கழிந்தது. மாலையில் திரும்பும் வழியில் திருவண்ணாமலையில் சிற்றுண்டியும் தேநீரும் பருகினோம். திரும்பும் வழி […]
டாக்டர் ஜி. ஜான்சன் அண்ணன் பேருந்துக்குள் எழுந்தது தெரிந்தது. அதை வெளியிலிருந்தவர்களும் பார்த்திருப்பார்கள். ஆனால் அப்போது அந்த அதிசயம் நடந்தது. திடீரென்று அவருக்கு முன் இருக்கைகளிலிருந்து எழுந்த பத்து காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு திமுதிமுவென்று இறங்கினர். அவர்களைக் கண்ட கூட்டம் சிதறி ஓடியது. காவலர்கள் அவர்களை துரத்திக்கொண்டு ஓடினார்கள்.அதைத் தொடர்ந்து அண்ணன் இறங்கினார். அவரைப் பின்தொடர்ந்து இன்னும் சில அரசியல் பிரமுகர்கள்போல் ( வேட்டி அணிந்திருந்தனர் ) காணப்பட்டவர்கள் இறங்கினார்கள். ” யாரடா எங்க ஊர் வாத்தியாரை […]
72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம் கோகிலத்தின் விபரீத ஆசை கேட்டு நான் திடுக்கிட்டேன். ஒருவர் மேல் பிரியம் அல்லது காதல் கொண்டால் அவருடைய கையில் உயிரைத் துறக்க யாரும் முன்வருவார்களா? உன்னை நான் உயிராகக் காதலிக்கிறேன் என்றுதான் பெரும்பாலோர் காதல் மயக்கத்தில் கூறுவார்கள். ஆனால் காதல் நிறைவேறாமல் பிரிய நேர்ந்தால் கொஞ்ச காலம் கவலைப்பட்டு மறந்து போவதுதான் உலக இயல்பு. பின்பு இன்னொரு புதுக் காதல் தோன்றும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. ஒருவேளை விபத்தில் ஒருவர் இறக்க […]
டாக்டர் ஜி. ஜான்சன் 71. சாவிலும் ஓர் ஆசை மிகுந்த ஆர்வத்துடன் ஊர் புறப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு வேண்டிய துணிமணிகளை பிரயாணப் பையில் எடுத்துக்கொண்டு கையில் ஒரு நாவலுடன் ஆட்டோ மூலம் வேலூர் கண்டோன்மெண்ட் புகைவண்டி நிலையம் வந்தடைந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தேன். தொலைவில் கரும் புகையைக் கக்கிகொண்டு ராட்சத மலைப்பாம்பு போன்று கரு நிறத்தில் ரேணிகுண்டா துரித பயணிகள் புகைவண்டி பெரும் இரைச்சலுடன் பிளாட்பாரம் வந்து கிரீச்சிட்டு நிண்டது. அனேகமாக பெட்டிகள் காலியாகவே இருந்தன. […]
டாக்டர் ஜி. ஜான்சன் விடுதி திரும்பிய நான் புதுத் தெம்புடன் பாடங்களில் கவனம் செலுத்தினேன். முதல் ஆண்டு முழுதும் நான் இரசித்தது ஆங்கில வகுப்புதான். ஆனால் அங்குதான் அனைவருமே நன்றாகத் தூங்குவார்கள். நான் பெரும்பாலும் அங்கு தூங்குவதில்லை. எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது. மனைவி சூசனையும் மகள் எலிசபெத் ஜேனையும் குடி போதையில் , முன்பின் தெரியாத மாலுமியிடம் விற்றுவிட்ட ஹென்சார்ட் அவர்களைத் தேடுவதில் தோல்வி அடைந்தவனாக கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகருக்குச் செல்கிறான். அதன் பின்பு கதை பதினெட்டு […]
ஆங்கில வகுப்புகள் மதிய தூக்கத்திலும் கலகலப்பாகவே நடந்தன. பாட நூலான தாமஸ் ஹார்டியின் நாவல் ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த கதை நடந்த காலம் 1826. இங்கிலாந்து நாட்டின் வெசெக்ஸ் எனும் கிராமத்தில் கதை துவங்குகிறது.அதன் கதாநாயகன் மைக்கல் ஹென்சார்ட் வேலை இல்லாத இளைஞன். கிராமங்களில் அறுவடை சமயங்களில் பண்ணை வேலை செய்பவன். அந்த கிராமத்து சந்தைக்கு மனைவியும் கைக்குழந்தையுமான மகளுடன் வந்தவன் அங்கு மதுபானம் விற்பனையாகும் ஒரு […]