. (வேலூர் மத்திய சிறைச்சாலை) வேலூர் வாழ்க்கை பிடித்திருந்தது. கோடை காலத்தில் கடுமையான வெயில். நான் சுழலும் காற்றாடி வைத்திருந்தேன். குளிர் காலத்தில் பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய்கூட உறைந்துவிடும். மிகவும் நேர்மாறான சீதோஷ்ண நிலை. வேலூர் தமிழகத்தின் வட கிழக்கில் உள்ள நகரம். பாலாற்றின் கரையோரத்தில் வேலூர் அமைந்துள்ளது. அப்போது அது வாட ஆற்காடு மாவட்டத்தில் இருந்தது. ( தற்போது வேலூர் தனி மாவட்டமாகிவிட்டது ). வேலூர் பல அரசாட்சிகளின் கீழ் ஆளப்பட்ட சரித்திரப் […]
விடுதி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. அதிகாலையிலேயே உற்சாகத்துடன் எழுந்து வகுப்புகளுக்குச் செல்வது இனிமையான அனுபவம். காலையில் பசியாறும் போது புது நண்பர்கள் கிடைத்தனர். அவர்களில் சில தமிழ் மாணவர்கள் என்னுடன் நெருக்கமானார்கள். அவர்களில் பெஞ்சமின் மிகவும் நெருக்கமானான். அவன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தான். தமிழ் நன்றாகப் பேசுவான். அவனுடன் மாலையில் அல்லது இரவில் ஆரணி ரோட்டில் வெகுதூரம் நடந்து செல்வோம். இரவில் நடப்பது கொஞ்சம் ஆபத்தானது. வீதியின் குறுக்கே பாம்புகள் நடமாட்டம் அதிகம். எதோ ஒரு அசட்டு […]
. எம்.பி. பி.எஸ். வகுப்பின் முதல் நாள் மறக்க முடியாததாகவே இருந்தது. வகுப்பு மாணவ மாணவிகளை ஒருவாறு அறிந்து கொள்ள முடிந்தது. அது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அன்று மாலை விடுதி திரும்பியதும் அந்த மகிழ்ச்சி அனைத்தும் மறைந்து போனது. காரணம் அங்கு காத்திருந்த சீனியர் மாணவர்கள்தான். இன்று இரண்டாம் நாள் ரேகிங்! நாளை இறுதி நாள். இந்த இரண்டு இரவுகளைக் கடந்துவிட்டால் நாங்கள் சுதந்திரப் பறவைகளாகிவிடுவோம். அதன்பிறகு யாரும் எங்களைக் கண்காணிக்க மாட்டார்கள்! அன்றும் […]
மருத்துவக் கல்லூரி வகுப்பின் முதல் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டேன். விடுதி உணவகத்தில் புது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பசியாறினோம். அங்கு ஓரளவு அறிமுகம் செய்துகொண்டோம். இனி பார்வையாளர்களின் கண்காணிப்பு இல்லை. ஆனால் சீனியர் மாணவர்கள் எங்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். இனி வகுப்புகள் முடிந்து மாலையில்தான் ரேகிங் தொடரும்.அதுவரை கவலையில்லை. முதல் நாள் என்பதால் நாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதில் அவசரம் தேவையில்லை. இனி ஆறரை வருடங்கள் ஒன்றாகத்தானே பயணிக்கப்போகிறோம். பெயர்களை மட்டும் […]
. கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் நுழைந்ததும் எதிரே சிற்றாலயம் தெரியும். அதற்கு எதிரே ஒரு தாமரைத் தடாகம். அதில் அழகிய மலர்கள் மலர்ந்திருந்தன. நுழைவாயிலின் வலது பக்கத்தில் கல்லூரி முதல்வரின் அறையும் அலுவலகமும் இருந்தன. அதன் வெளியே வராந்தாவில் அனைவரும் ஆவலுடன் கூடியிருந்தனர். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் ஒருவித பீதியும் குடிகொண்டிருந்தது. தேர்வு பெற்றால் பெரும் குதூகலம். இல்லையேல் பெரும் சோகம். அலுவலகத்தின் முன்னே ஒரு ஒலிவாங்கி ( மைக் ) […]
நேர்முகத் தேர்வின் இரண்டாம் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுவிட்டேன். சரியாக காலை ஏழரை மணிக்கு உணவுக் கூடத்தில் ஒன்று கூடினோம். என்னைப் போன்றே மற்ற மாணவர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பயில இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை என்னைப்போல்தானே இருந்திருக்கும்? நான் அது கண்டு அஞ்சவில்லை. என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதோடு என்னை ஒரு பெரிய சக்தி இயக்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. இதுவரை நாத்திகனாக வளர்ந்து விட்ட எனக்கு […]
ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத கட்டிகள். இவை கொஞ்சங்கொஞ்சமாக வளரும் கட்டிகள்.இவற்றைப் பிடித்து அழுத்தினாலும்கூட வலிக்காது. இதை ” நீயூரோபைரோமா ” என்று அழைப்பார்கள். இதை நாம் நரம்பு நார்க் கழலை என்று கூறலாம். இவை நரம்பு நார்களில் தோன்றும் கட்டிகள். நரம்பு நார்க் கழலைகள் பல வகையானவை.இவை தோலில் எழும் கட்டிகள். இவற்றை விரலால் அழுத்தினால் குழி […]
அதிகாலையிலேயே விடுதி பரபரப்புடன் காணப்பட்டது. காலை வணக்கம் சொல்லிக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றோம். அங்கு வரிசையாக ஒருபுறம் கழிவு அறைகளும் எதிர்புறம் குளியல் அறைகளும் இருந்தன.நுழைவாயிலில் நீண்ட கண்ணாடியும் தண்ணீர்க் குழாகளும் இருந்தன. அங்கு சில சீனியர் மாணவர்கள முகச் சவரம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி விசாரித்தனர். ஆர்தர் என்னை தன்னுடைய உறவினர் என்று அறிமுகம் செய்தார், நேர்முகத் தேர்வில் தேர்வு பெறவும் வாழ்த்து கூறினார்கள். அவர்கள் அனைவருமே குளிக்கும் அவசரத்தில் இருந்தனர். […]
டாக்டர் ஜி. ஜான்சன் 61. வேலூர் நோக்கி…. நான் வேலூர் சென்றதில்லை. அண்ணனுக்கு கடிதம் எழுதினேன். அவர் என்னுடன் நேர்முகத் தேர்வுக்கு வருவதாக பதில் தந்தார்.இந்த நேர்முகத் தேர்வு ஒரு வகையில் வினோதமானது. மூன்று நாட்கள் நடைபெறும். அதன் முடிவு மூன்றாம் நாள் மாலை அங்கேயே அறிவிக்கப்படும். மொத்தம் நூற்று இருபது பேர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாதிப் பேர்களான அறுபது பேர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். அவர்களில் முப்பத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் இருப்பார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் அன்றே […]
டாக்டர் ஜி. ஜான்சன் புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய் இரத்தம் மூலமாக மூளைக்குப் பரவியது எனவும் கூறலாம். தனியாக மூளையில் தோன்றும் கட்டி மண்டை ஓடு அல்லது அதன் உள்ளே இருக்கும் மூளை மற்றும் இதர திசுக்களில் தோன்றலாம். இப்படி மூளையில் மட்டும் தோன்றும் புற்று நோய்க் கட்டி உடலின் வேறு பகுதிகளுக்கு பரவாது. மூளையில் இவ்வாறு தோன்றும் கட்டிகள் […]