author

தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு

This entry is part 1 of 28 in the series 22 மார்ச் 2015

திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு  தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது ” காதலிக்க நேரமில்லை ” படம் வெளியாகியிருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் மலேசியா ரவிச்சந்திரன் கதாநாயகனாக ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததால் திருச்சியில் பரவலாகப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் ரவிச்சந்திரன் அப்போது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த […]

மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்

This entry is part 11 of 28 in the series 22 மார்ச் 2015

                                                                                                   ( Ischaemic  Heart  Disease  ) இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம் இல்லாமல் அடைப்பு உண்டானால் மாரடைப்பு என்கிறோம். ஆகவே இதை மாரடைப்பின் முன்னோடி எனலாம். மாரடைப்பு வரலாம் என்ற எச்சரிப்பு என்றுகூடக் கூறலாம். இதுபோன்ற இருதய நோயால்தான் உலகில் அதிகமானோர் […]

தொடுவானம் 59. அன்பைத் தேடி

This entry is part 9 of 25 in the series 15 மார்ச் 2015

மிகுந்த மன வேதனையுடன்தான் வேரோனிக்காவிடம் விடை பெற்றேன். ஒரு வேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் எங்களுடைய பிரிவு நிரந்தரம் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. அதே வேளையில் நான் மனது வைத்தால் இவளுக்காக இலக்கியம் படிக்கலாம்.அனால் ஒரு பெண்ணுக்காக மருத்துவப் படிப்பை விட்டுக் கொடுப்பதா? இந்த இக்கட்டான சூழலில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதைப் பார்த்தபின்பு ஒரு முடிவு எடுக்கலாம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். ஒரு பெண்ணை விட்டுப் பிரிந்துபோகவேண்டும் என்பதற்காகவே அப்பா […]

மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்

This entry is part 16 of 25 in the series 15 மார்ச் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா போன்றே தோன்றினாலும் இது ஆஸ்த்மா இல்லை. இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் புகைத்த வருடங்களும் நோயின் கடுமையுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக காற்றில் தூசு, […]

தொடுவானம் 58. பிரியாவிடை

This entry is part 13 of 22 in the series 8 மார்ச் 2015

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம். சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள் தரப்பட்டிருந்து. அவற்றில் சரியான ஒரு விடையைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. தவறான  விடை தந்தால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்! சுலபம்தான். ஆனால் படித்து பார்க்கும்போது ஐந்தும் சரியான விடைபோன்று தெரியும். அதுதான் சிக்கல். நான் நிதானமாக […]

தொடுவானம் 56. மணியோசை

This entry is part 17 of 26 in the series 22 பெப்ருவரி 2015

          ஊர் செல்லுமுன் சென்னை சென்று அண்ணனைப் பார்த்தேன். அவரும் இந்த மாதத்தில் பி.டி. பட்டப் படிப்பின் தேர்வு எழுதிவிடுவார். அதன்பின்பு ஊர் வந்துவிட்டு அண்ணியைப் பார்க்க திருச்சி செல்வார்.            அவரிடம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பற்றி கூறினேன். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு அதில் ஓர்  இடம் உள்ளது பற்றி கூறினேன். ராஜ்குமார் சொன்னது பற்றியும் தெரிவித்தேன்.           அந்த ஒரு இடத்துக்கு நானும் முயற்சி செய்யப் போவதாகக் கூறினேன். அவர் அப்படியே […]

மருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )

This entry is part 25 of 26 in the series 22 பெப்ருவரி 2015

                                                                           ” ரூமேட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ” என்பதை நாம் ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் என்று கூறலாம். இது உடலின் சுய எதிர்ப்பு ( Autoimmune ) காரணத்தால் உண்டாகிறது. சுயஎதிர்ப்பு என்பது உடலின் எதிர்ப்புச் சக்தி உடலின் ஏதாவது ஒரு பாகத்தையே சுயமாக எதிர்ப்பதாகும். அப் பகுதியை உடலுக்கு கெடுதி தரக்கூடியது என்று தவறாக புரிந்துகொண்டு  அதை எதிர்ப்பதாகும். இவ்வாறு உடலுக்குள் ஒரு பகுதியில் போராட்டம் நடப்பதால் அப்பகுதி வீங்கி வலியை உண்டுபண்ணுகிறது. இந்த […]

தொடுவானம் 55. உறவும் பிரிவும்

This entry is part 12 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  நாட்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன! இறுதித் தேர்வுகளும் நெருங்கின. பாடங்களில் கவனம் செலுத்தினேன். இடையிடையே சில சிறுகதைகளும் எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். அவை மலேசியாவில் பிரசுரம் ஆனது. கல்லூரியின் இன்னொரு அரையாண்டு மலரில், ” மயிலோ மங்கையோ ” என்ற தலைப்பில்  இலக்கியச் சிறுகதை எழுதினேன். அது பேகன் ஒரு மயிலுக்கு சால்வைப் போர்த்தினான் எனும் புறநானூற்றுப் பாடலை வைத்து எழுதப்பட்டது. அதற்கும் நிறைய பாராட்டுகள் பெற்றேன். அன்றன்று பாடங்களை அறையில் அமர்ந்து ஆழ்ந்து […]

தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.

This entry is part 12 of 24 in the series 8 பெப்ருவரி 2015

குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம்.  பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம். புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டங் கூட்டமாக பிளாட்பாரத்தில் காணப்பட்டனர். புகைவண்டி வந்ததும் அதில் பிரயாணம் செய்யும் பயணிகளைப் பார்ப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு. வண்டி வந்ததும் முண்டியடித்துக்கொண்டுதான் ஏறினேன். நல்லவேளையாக உட்கார இடம் கிடைத்தது. நள்ளிரவு வரை தூக்கம் வரவில்லை. நாவலைக் கையில் எடுத்து வைத்திருந்தேன். அனால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. […]

மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி

This entry is part 19 of 24 in the series 8 பெப்ருவரி 2015

                               இடுப்பு வலி என்பது நம் அனைவருக்கும் எப்போதாவது உண்டாவது இயல்பு. பெரும்பாலும் அதிக தூரம் நடப்பது, மாடிப் படிகள் ஏறுவது, கடினமான வேலை, பாரமான பொருளைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பு வலி உண்டாகிறது. இது போன்ற வலி சற்று ஓய்வேடுத்ததும் அல்லது மருந்து உட்கொண்டதும் தானாக குறைந்துவிடும். இதை ” மெக்கேனிக்கல் ” அல்லது செயல்பாட்டு   வலி எனலாம். ஒரு செயல்பாடு காரணமாக உண்டாகும் வலி இது. ஆனால் ஓய்வெடுத்தும், அல்லது மருந்து உட்கொண்டும் […]