author

வைரஸ்

This entry is part 25 of 29 in the series 12 ஜனவரி 2014

தெலுங்கில்: D.காமேஸ்வரி தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கல்லூரியிலிருந்து வந்ததுமே நேராக தன் அறைகுள் போன தீபா, “மம்மி!” என்று தேள் கொட்டிவிட்டது போல் கத்திவிட்டு, சமையல் அறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தாயிடம் ஓட்டமும் நடையுமாக சென்றாள். “மம்மி! என் கட்டிலில் யார் படுத்துக் கொண்டு இருக்காங்க?” என்று கோபமாய் கத்தினாள். “ஷ்.. சத்தம் போடாதே. உங்க அத்தை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருப்பதாய் சொன்னேன் இல்லையா. இன்றுதான் வைசாக்லிருந்து வந்தாள். சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறாள்.” […]

க லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)

This entry is part 4 of 34 in the series 10 நவம்பர் 2013

க லு பெ   தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி gorthib@yahoo.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com யுசெமிடி பிக்னிக் பயணத்திற்காக கென்னடி நடுநிலைப் பள்ளியின் பேருந்துகள் தயாராக இருந்தன. பெற்றோர்கள் எல்லோரும் தம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் அருகில் நின்றபடி விடை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் லக்கேஜ்களை பஸ்ஸில் ஏற்றுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். அங்கே ஒரே சந்தடியாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் எட்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் எல்லோரையும் ஒரு வாரம் வெளியூர்களுக்கு அழைத்துச் […]

அக்னிப்பிரவேசம்-38

This entry is part 18 of 23 in the series 16 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி எழுந்து டி.வி. யை அணைத்துவிட்டுக் கீழே வந்தாள். வீடு முழுவதும் ஆளரவமில்லாமல் இருந்தது. வெளியே மழை சொவேன்று பெய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் படி இறங்கிக் கொண்டிருந்த போது அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்… மழைத் தாரைகள் உடம்பிலிருந்து சொட்டச் சொட்ட… ராமநாதன்! “என்னது? இந்த வேளையில் வந்திருக்கிறாய்? என்ன வேண்டும் உனக்கு?” பயத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள். ”எங்க வீட்டிற்குப் […]

அக்னிப்பிரவேசம்-37

This entry is part 20 of 24 in the series 9 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நிர்மலாவின் மரணம் சாஹிதியிடம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் அது வெளியில் தெரியக் கூடியது இல்லை. தன் தாய் எப்படி இறந்தாள் என்று பாவனா சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமைதியாக கேட்டுக் கொண்டாள். அவளுடைய சலனமற்றத் தன்மையைப் பார்த்துப் பாவனாவுக்கு பயம் ஏற்பட்டது. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அவன்தான் கொன்றிருக்கிறான்” என்றாள். பாவனா பதில் பேசவில்லை. “அவனைக் கொன்று விடுகிறேன்” என்றாள் சாஹித்தி திரும்பவும். பாவனா […]

அக்னிப்பிரவேசம்-36

This entry is part 21 of 21 in the series 2 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “எனக்காக்தானே இந்த எதிர்பார்ப்பு?” வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்தவாறே இருந்த சாஹிதி, திடுக்கிட்டுப் பார்த்தாள். பரமஹம்சா முறுவலுடன் நெருங்கி வந்தான். சாஹிதி பயந்துவிட்டாள். பாவனாவின் தூண்டுதல் பேரில் அவனுக்கு எதிர்பதமாய் இத்தனைக் காரியங்களையும் பண்ணினாள். ஆனால் அவனே எதிர்ப்பட்ட பொழுது வாயில் வார்த்தை வரவில்லை. அவனே மேலும் பேசினான். “அனாவசியமாய் என்னோடு மோதிக்கொண்டு விட்டாய். இதையெல்லாம் உனக்குப் பின்னால் […]

அக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 35 of 40 in the series 26 மே 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பதினைந்து நாட்களாய் பீடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாவனாவின் தொகுதியில் சில ஆயிரக்கணக்கான பீடி தொழிலாளர்கள் வசித்து கொண்டிருந்தார்கள்.’அதில் நிறைய பேர் பெண்கள்தான். அவள்களுடைய ஓட்டுக்கள் தான் அவளுக்கு நிறைய கிடைத்தன. பாவனா அவர்கள் சார்பில் சமரசம் பண்ண ,முயன்றாள். “மேடம்! நீங்கள் எங்கள் நிலைமையைக் கூட புரிந்து கொள்ளணும். பீடி உற்பத்தியில் வரும் லாபம் மிகவும் குறைவு. இப்போ கூலியை […]

அக்னிப்பிரவேசம்-34

This entry is part 2 of 33 in the series 19 மே 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரேடியோவில் “குந்தி விலாபம்” வந்து கொண்டிருந்தது “ராமநாதன்! நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?” தீனமாய் கேட்டாள் சாஹித்தி. “உனக்கு இந்த சந்தேகம் ஏன் வந்தது?” “என்னவோ, எனக்கு அப்படித் தோன்றுகிறது.” “நீ என்றுமே என் சாஹிதி தான். நான் காதலிப்பது உன்னைத்தானே தவிர உன் பணத்தையோ, சொத்தையோ இல்லை.” அவளை அருகில் இழுத்துக் கொண்டான். அவன் மார்பில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். “சாஹிதி!” “ஊம்.” “நாம் […]

அக்னிப்பிரவேசம்-33

This entry is part 29 of 29 in the series 12 மே 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com லேட் சந்திரனின் வீட்டிற்கு பாஸ்கர் ராமமூர்த்தி போய்ச் சேர்ந்த போது மணி எட்டு அடிக்கவிருந்தது. கூர்க்கா கேட்டிற்கு அருகில் தடுத்து நிறுத்தினான். “ரொம்ப முக்கியமான விஷயம் என்று நிர்மலா அம்மாவிட்டம் போய்ச் சொல்லு” என்றான். கூர்க்கா போய்விட்டுத் திரும்பி வந்து “வரச் சொன்னாங்க” என்றான். ராமமூர்த்தி உள்ளே போனபோது நிர்மலா உட்கார்ந்திருந்தாள். “யார் நீங்க? என்ன வேண்டும்?” என்று கேட்டாள். “நான் ஆதிலக்ஷ்மியின் மகன். […]

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 28 of 29 in the series 28 ஏப்ரல் 2013

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாரங்கபாணிக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அழகாய், கவர்ச்சியான தோற்றத்துடன் இருப்பான். பணத்தால் உண்டாகும் கர்வம் கண்களில் தேன்பட்டுக் கொண்டிருந்தது. வந்தது புதிய நபர்தான் என்றாலும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். “என் பெயர் பாவனா. ஹரிணி விஷயமாய்ப் பேச வந்திருக்கிறேன்.” நெற்றியில் வந்து விழுந்த கேசத்தை அலட்சியமாய் ஒதுக்கிக் கொண்டே “எந்த ஹரிணி?” என்று கேட்டான். “உங்களுக்கு எத்தனை ஹரிணிக்களை தெரியும்? தெரிந்த […]

அக்னிப்பிரவேசம்-31

This entry is part 33 of 0 in the series 21 ஏப்ரல் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com செக்ரடேரியட்டில் முதலமைச்சருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள் பாரதிதேவி. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களாக அவர்களுடைய சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. “மாநில அரசு எல்லைக்கு உட்பட்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண்ப்தற்கு அது உதவியாய் இருக்கும். அதன் அதிகாரிக்கு ஜட்ஜ் ஹோதா இருக்கும். இதெல்லாம் நான் வரப் போகும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு செய்யவில்லை. எத்தனையோ அனாதைகளையும், துரதிர்ஷ்டசாலிகளையும் […]