author

சொந்தங்களும் உறவுகளும்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

தத்தம் இல்லங்களில் , நடைபெற இருக்கும் , பேத்தியின் பெயர்சூட்டுவிழா பேரனின் காதுகுத்தல் மகளின் பூப்பு நீராட்டு மகனின் திருமணம் மருமகளின் வளைகாப்பு அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி தாத்தாவின் சதாபிஷேகம் வாரிசின் புதுமனைப்புகுவிழா சகலமும் தடையின்றி முடியும்வரை , கிழம் இருக்கணுமே என்ற , சுயநல பிரார்த்தனையில் , மூச்சைப் பிடித்துக் கொண்டு , நார்க்கட்டிலில் , நாரோடு நாராய் கிடக்கிறது தொண்ணூறைக் கடந்த பெரிசு .

பிராயச்சித்தம்

This entry is part 17 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    _கோமதி   கருணாகரனுக்கு வயதாகிவிட்டதென்றாலும் வாட்டசாட்டமான அவன் உடல் தளர்ந்துபோனதன் காரணம் அவன் மனைவிக்குகூட தெரியவில்லை. டாக்டர் களும் எந்தவிதமான வியாதியும் இல்லை, கவலைப்படும்படி ஏதுமில்லை என்கிறார்கள். வீட்டிலோ வியாபாரத்திலோ எந்தவிதத் தொந்தரவுமில்லை, பின் ஏன் மனதிற்குள் ஒரு குழப்பம்?   அவர்கள் கம்பெனியில் புதிதாக ஒரு பையன் வேலையில் சேர்ந்தான், சூப்பிரவைசர் வேலை. அவனுக்குக் குடியிருக்க வீடு தேடும்போது மாம்பலத்தில் அவர்கள் ஃப்ளாட்டில் அவனை வரச்சொல்லி சாவி கொடுத்தார் கருணாகரன்.   ஒருநாள் […]

வெளியிடமுடியாத ரகசியம்!

This entry is part 3 of 33 in the series 14 ஏப்ரல் 2013

    _கோமதி   இளவரசு வெகு தொலைவிலிருந்து மாற்றலில் வந்திருந்தான். ஆபீசில் எல்லா ருக்குமே அவனை ரொம்பவும் பிடித்துவிட்டது. உரத்த குரலில் பேசக்கூட மாட்டான். கேட்ட கேள்விக்கு பதில் தவிர வேறு பேச்சே கிடையாது. சரியான நேரத்துக்கு வருவதும் வேலை முடிந்தவுடன் கிளம்புவதும் அவன் வழக்கம், மனைவி மக்களை தன் ஊரிலேயே தன் பெற்றோரிடம்விட்டு வந்திருந்தான். அதனால் வாரா வாரம் ஓடுவதுமில்லை. கடிதம் எழுதுவதோடு சரி, மாதசம்பளம் வாங்கிய உடனேயே வீட்டுக்கு அனுப்பி வைப்பான்.   […]

கதையும் கற்பனையும்

This entry is part 4 of 33 in the series 3 மார்ச் 2013

     _கோமதி   நல்ல கோடை காலத்தின் ஒரு மாலை நேரம். ஆற்றங்கரையில் கையில் ஒரு கத்தைபேப்பருடன் தனியாக உட்கார்ந்திருந்தேன். பளபளவென்று தேய்த்த தங்கக்குடம் போல மின்னும் குடங்களில் பெண்கள் தண்ணீர் நிரப்பிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறி பேசியபடி போய்க்கொண்டிருந்தனர். சில பெண்கள் காலிக் குடங்களுடன் படி இறங்கியபடி  பேசிக் கொண்டுமிருந்தார்கள். அவர்களில் சில சிறுமியரும் சில கிழவிகளும் கூட இருந்தனர்.   பெண்கள் கூடுமிடங்களில் பேச்சும் சிரிப்பும் கட்டாயமிருக்கும். ஸரஸா, புஷ்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். “பாவம்டி, அந்த […]

ஓடியது யார்?

This entry is part 12 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ சொன்ன விஷயம் மனதில் பதிந்து போனது வேறு. யார்? பாட்டிதான் சொன்னாள். ஆமாம். “சிவசுவோட அம்மா குடுகுடுப்பாண்டியோட ஓடிப் போயிட்டாளாம். பாவம் குழந்தைகளை தாத்தா-பாட்டிகிட்டே வுட்டுட்டு அப்பன்காரன் கண்காணாம போயிட்டான். அவமானம்தாங்காம போயிட்டாலும் குழந்தைகளுக்காக […]

புதிய அனுபவம்

This entry is part 1 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    எழுதியவர் : ‘கோமதி’   பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் தேடறது?’’ என்று கவலைப்பட்டாள்.   ”மல்லேச்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் கூட்டிக்கொண்டுபோயிருப்பார்கள் ” என்றுசொன்ன பையன் விளையாட ஓடிவிட்டான். மணி மாலை நாளுக்கு மேலாகிவிட்டது.   மாடியில் […]

கங்கை சொம்பு

This entry is part 22 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

 ‘கோமதி’   பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள்.   திருமணமாயிற்று. புருஷன் நல்லவர். தெய்வ நம்பிக்கை என்று இல்லாவிட்டாலும் பிருந்தா செளிணிவதை தடுக்க மாட்டார். அவர் வேலையுண்டு அவருண்டு என்ற சுபாவம். நேர்மையுள்ளவர் பிள்ளை ஒருபடி மேலே – பெரியார்தாசன். மூட […]

மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

This entry is part 32 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, என்று தேடித்தேடி வாங்கிவருவாள். நல்ல வெண்ணெயை வாங்கி காய்ச்சி ஹோமங்களுக்கும் சமையல் சாப்பாட்டுக்கும் பக்ஷணங்களுக்கும் வைப்பான். நுனிவாழைஇலை வாங்கி வருவான். வருடத் திதி வருகிறதென்றால் ஒருவாரம் முன்னாலிருந்தே அதே நினை வாக காய்ந்த வரட்டி, சிராய் என்று ஓமம் வளர்க்க தயார்ப்படுத்துவான்-அப்பா வருகிறார் என்று. அதை கர்மசிரத்தை என்பார்கள். அப்படிமுடிப்பான். ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. […]

தசரதன் இறக்கவில்லை!

This entry is part 30 of 35 in the series 29 ஜூலை 2012

கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். அவளுக்கு பரதன் பிறந்தான்.   மூன்றாம் மகள் சுமத்திரையும் திருமணமாகி புகுந்தவீடு போனாள். அவளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தபோது அவளும் இறந்துவிடவே எல்லாப் பிள்ளைகளும் தசரதன் கேதகியிடமே வளர்ந்தார்கள்.   தசரதனின் முன்னோர்களுடைய ஆஸ்தியான […]

அப்படியோர் ஆசை!

This entry is part 36 of 37 in the series 22 ஜூலை 2012

  எழுதியவர்: ‘கோமதி’   அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத் தேடவே மாட்டாள். மின்விளக்குவசதிகூட இல்லாத அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். பதினெட்டு ரூபாய் வாடகை; ஒரே மாதம் அட்வான்ஸ். ஒரு பெரிய அறை, ஒரு சமையலறை நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருந்தது.   என் கணவருக்கு தங்கசாலைத்தெரு ’கவர்ன்மெண்ட் பிரஸ்’ஸில் வேலை. போக வர டிராம் வண்டி இருந்தது. பக்கத்திலேயே […]