author

கோழியும் கழுகும்…

This entry is part 2 of 48 in the series 11 டிசம்பர் 2011

வறுத்தெடுக்க  மனிதன் கொத்திக் குடிக்கப்  பாம்பு இயற்கையும்  சிதைக்க…. உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம் வானில் அடங்கினால் அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு. இறகு இத்தினிதான் எம்பி எதிர்க்கிறது இருப்பு இருக்கும்வரை!!! ஹேமா(சுவிஸ்)

பகிரண்ட வெளியில்…

This entry is part 7 of 37 in the series 27 நவம்பர் 2011

வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் மானுட உலகம் உயிரற்றதும் உயிருள்ளதுமான கடலுலகில் பொய்கள் உலவாதென யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆழக் கடலில் காற்று காறித் துப்புகிறதாம் வாசனைத் தைலக் குப்பிக்குள் புழுக்கள்தான் நெளிகிறதாம் கொழுவியிருக்கும் அளகாபுரி மாளிகை ஓவியத்துள் பேய்கள் குடியிருக்கிறதாம். நானும் நம்புவதாய் பசப்பிப் புன்னகைத்து தாண்டிக் கடக்க ஊமையென நடிக்கும் ஓடு முதிர்ந்த ஆமையொன்று கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது சீக்கும் சாக்காடும் […]

நேர்மையின் காத்திருப்பு

This entry is part 15 of 53 in the series 6 நவம்பர் 2011

மூட்டைப்பூச்சியின் இருப்பிடமென ஒதுக்கப்பட்டிருந்தாலும் கண்களுக்குள் அலார மிரட்டலோடு பழைய கதிரையொன்று. சுருங்கிய முக ரேகைக்குள் நேர்மை நிரம்பிய புன்னகை அனுபவங்கள் அழுத்திய ஆட்சி அந்தரத்து ஆரவாரமாய் தாங்கிய நினைவுகள். நேற்றைய முடிவுகளே நாளைய தீர்மானமாய் வைக்கோல் நுழைந்து உறிஞ்சும் புழுவென வழியும் எச்சில் நேர்மை வேண்டாம் வேண்டாம். நேர்மை பற்றி அறியும் சுவர்களும் யன்னல் சீலைகளின் தையல் நுனிகளும்கூட இங்கு. கட்டிய வேட்டிக்குள் சீழ்பிடித்த மனிதரும் நுழைவார் இங்கே. கைகாட்டும்வரை என்னை… அகற்றாதிருக்கட்டும் மூட்டைப்பூச்சிகளோடு சாட்சியாய் இங்கு […]

சுவர்களின் குறிப்புகளில்…

This entry is part 25 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

காடு நிரப்பும் நகரமென சூரிய எச்சில் படாத முகட்டோடு நாகரீகக் குறிப்பெடுக்கும் பென்னாம் பெரிய வீட்டுக்குள் தூண்கள் அளவு கனத்த கதைகளோடு வாய்வு நிறைத்த வயிறும் பசிக்கும் மனதோடுமாய் ஞாபகத் திணறலோடு மூப்பின் உதிர்வொன்று. ஜாடைகள்  அப்பிய முகங்களோடு தலைமுறை காவும் நீ…ண்ட  நிழல்கள் சிரித்த முறைத்த ஞாபகச் சுவரோடு வெப்ப மூச்சு விட்டு விட்டு ஒடுங்க ஓடி ஒளித்து விளையாடிய கண்ணாடி மைதானத்து பல்லிகளும் இல்லாமல். காட்டிச் சொல்லும் தடயங்களை காணாமல் போனவர்கள் பைகளில் திணித்தவர்கள் […]

உருமாறும் கனவுகள்…

This entry is part 18 of 34 in the series 17 ஜூலை 2011

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌ க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது நாள்காட்டியில் தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள். க‌ருத்த‌ரித்துப் பின் பின்ன‌ல் சட்டைக‌ளோடு சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள் எம் தொட்டிலில் அடுத்த வீட்டுக் குழ‌ந்தை நான் வைத்த பெயரோடு. ச‌ரியில்லாத சுழ‌ற்சியால் த‌டுமாறும் மாத‌விடாய் உதிர‌ப்போக்கு ம‌ருந்து வைத்திய‌ர் சுழ‌லாத‌ உட‌ல் உபாதையென‌ ஒற்றைக்க‌வலை‌. க‌ட‌வுள்… வ‌ர‌ம்… வேண்டுத‌ல்…எல்லாமே நான்… நீ… நம்பிக்கை… மறுதலிப்பு!!! ஹேமா(சுவிஸ்)

சாகச விரல்கள்

This entry is part 5 of 46 in the series 19 ஜூன் 2011

விரல்களின் வேகத்தில் சுண்டலின் விசையில் நம்பிக்கைகள் கைகள் சுழற்றும் சோளிகளின் சாகசங்களை நம்பி. முழங்கையை மடக்கி விரித்து குலுக்கிப் போடும் சோளியில் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடப்பதாகிறது கனவு வாழ்வு. மீண்டும் மீண்டும் உருளும் சோளிக்குள் முழித்த பார்வைகளின் முணுமுணுக்கும் வாக்குகள் முத்தமிடும் முள்முடிகளாய். பணம் ஒரு சோளி பாசம் ஒரு சோளி குழந்தை ஒரு சோளி பாய்ந்து புரண்டு பன்னிரண்டு சோளி சொல்லும் பகடைக்குள் திடுக்கிடுகிறது எதிர்பார்ப்பு. வீழ்பவன் மனிதன் எழுபவன் வீரன் இல்லாததும் இயலாததும் ஏதுமில்லையென்றாலும் […]

உலரும் பருக்கைகள்…

This entry is part 22 of 46 in the series 5 ஜூன் 2011

கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு.  ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை.  பிதிர்க்கடனெனத் தெளிக்கும் எள்ளும் தண்ணீரும் சிதறும் வட்ட வட்ட திரவத்துளிகக்குள் சிரார்த்த ஆன்மாக்கள். சம்பிரதாயங்களுக்குள்ளும் சமூகச் சடங்குகளுக்குள்ளும் குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும் முங்கி அமிழ்ந்து திணறுகின்றன சங்கடங்களும் சந்தோஷங்களும் இறந்த பின்னும்கூட!!! ஹேமா(சுவிஸ்)

அடங்கிய எழுத்துக்கள்

This entry is part 16 of 43 in the series 29 மே 2011

உரத்துக் குரலிட்ட பேனாக்களை வானரங்கள் உடைத்து மையை உறிஞ்ச மௌனித்த செய்திகள். யாருமில்லாப் பொழுதில் அலைகள் சப்பித் துப்பிய சிப்பிகள் கீறிப்போயின கவிதையின் தொங்கல்கள். மிஞ்சிய காகிதத்தில் தொடக்கங்கள் தொங்கல்களோடு இணைய இனி ஒருக்காலும் வரப்போவதில்லை அந்தப் பேனாக்கள் செய்திகளிலும்கூட!!! ஹேமா(சுவிஸ்)  

ஈழம் கவிதைகள் (மே 18)

This entry is part 36 of 48 in the series 15 மே 2011

  1)  மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் வெயிலிலும் குளிக்கும் மலரென வாழ இசைத்தீர்கள் பழக்கப்பட்டுவிட்டோம் முட்களையும் பூக்களாக்க பயமில்லை இப்போ வாசனையாகிறது இரத்தவாடைகூட. சுவைக்கும் உணவுக்குமான தூரமாய் எங்கள் தேவைகளை உங்கள் இடைவெளிகளே நிதானித்து கடத்தி இருத்தி தீர்மானிக்கிறது. மாற்றிய சரித்திரமும் மகாவம்சமும் கருவுரும் தலைமுறை தலைசுமக்க காலகாலமாய் விலகாத வெறுப்போடு. எனவே…… வேண்டாம் இனியும் ஒரு நாள் மலரும் நம் […]